Posts Tagged ‘ பெண்கள் ’

ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், சூழலியல்

ஆனைமுகனும் தமிழ்ப்பண்பாடும்

ஆனைமுகனும் தமிழ்ப்பண்பாடும்

விநாயகப் பெருமானின் வழிபாடு அதன் முன்னோடி வடிவில் சங்க காலத்திலேயே தமிழகத்தில் இருந்திருப்பதையும் அதன் உட்பொருளும் சடங்கியல் நோக்கமும் மாறாமல் அது இன்றும் நம் பிள்ளையார் வழிபாட்டில் தொடர்வதையும் நம்மால் காண முடிகிறது... உலகில் எனக்கு தெரிந்து வேறெந்த பண்பாடும் யானையை போல ஒரு பிரம்மாண்ட விலங்கை தன்னகப்படுத்தியதில்லை. அதை செய்த ஒரே பண்பாடு நம்முடையதுதான். யானைக்கு வர்மப்புள்ளிகளைக் கூட கணித்த பண்பாடு கோவில் யானைகளை பராமரிக்க சரிவான தீர்வை அளிக்காதா? அதை செய்யாமல் நம் பண்பாட்டின் உயர் உச்சமொன்றை முழுமையாக ஒழித்துக் கட்டுவதில் ஏன் இவ்வளவு முனைப்பு? யானைகளை கோவில்களில்... [மேலும்..»]

கதைகள், மகளிர்

அம்மாவும் சில மாமிகளும் மற்றும் நானும் [சிறுகதை]

அம்மாவும் சில மாமிகளும் மற்றும் நானும் [சிறுகதை]

அந்த வீட்டு மாமா வருகிற கார் சத்தம் தெரு முனையில் கேட்டவுடனேயே மாமி பேச்சை அவசர அவசரமாக நிறுத்தி விட்டு “வரேன் மாமி” என சன்னலை விட்டு ஓடுவாள்.இது அம்மாவுக்கும் எங்களுக்கும் பெரிய ஆச்சரியம், ஏனெனில் எங்கள் அப்பா வருகிறாரென்று நாங்கள் எந்த வேலையையும், விளையாட்டையும், பேச்சையும் பாதியிலே நிறுத்தியதேயில்லை... ஒரு விதத்தில் மாமாவும் நல்லவர்தான். மாமியும் பாவம் பரம சாது. ஆனால் அவர்களின் உறவின் இழையில் நுண்ணிய சிக்கல்கள். சராசரி நல்ல தனத்தொடு கூடிய ஒரு ஆண் + சராசரியான ஒரு நல்ல பெண் = ஒரு சராசரி சந்தோஷமான தம்பதிகள் என்ற சமன்பாடு சரியாக... [மேலும்..»]

இந்து மத மேன்மை, இந்து மத விளக்கங்கள், மகளிர், வீடியோ

இந்துமதத்தில் பெண்கள்: உரை

May 23, 2015
-
இந்துமதத்தில் பெண்கள்: உரை

இந்துமத வரலாற்றில் பெண்களின் இடம் என்ன, வேதகால பெண் ரிஷிகள், சீதை பெண்ணடிமைத் தனத்தின் அடையாளமா, தாய் மனைவி முதலிய குடும்ப உறவுகளைத் தாண்டி பெண்ணின் சுயம் பற்றி இந்து தத்துவம் என்ன கூறுகிறது, இன்றைய இந்து சமுதாயத்தில் பெண்களின் நிலை ஆகிய விஷயங்களை ஒரு பறவைப் பார்வையாக இந்த 30 நிமிட உரை தொட்டுச் செல்கிறது. இங்கே கேட்கலாம்.. [மேலும்..»]

இலக்கியம், சைவம், மகளிர்

மானக் கஞ்சாற நாயனார் மகள் (கைகொடுத்த காரிகை)

மானக் கஞ்சாற நாயனார் மகள் (கைகொடுத்த காரிகை)

தலை மயிரை இழப்பதை பெண்கள் அபசகுனமாகவே நினைப்பார்கள்.நோய்வாய்ப்பட்டு அதன் காரணமாக தலை முடியை இழக்க நேரும் போது கூட அவர்கள் மிகவும் உணர்ச்சி வசப்படுவார்கள் வருந்துவார்கள். கோவிலுக்குக் காணிக்கையாகக் கொடுப்பதைத் தவிர மற்ற நேரங்களில் தங்கள் கூந்தலை இழக்க மனம் ஒப்ப மாட்டார்கள். இந்த நிலையில் ஒரு பெண் தனது அலங்காரத்தோடு கூடிய கூந்தலை இழக்க நேரிட்டால்? அது எவ்வளவு கொடுமை! அதுவும் தன் திருமண நாளன்று? அந்தப் பெண்ணின் மனம் என்ன பாடு பட்டிருக் கும்? இப்படி ஒரு சம்பவம் நடப்பதை எந்தத் தாயால் பொறுக்க முடியும்? என்றாலும் தந்தைக்காகத் தன் அலங்கரிக்கப் பட்ட கூந்த... [மேலும்..»]

தொடர், பயங்கரவாதம், பிறமதங்கள்

இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் 21

இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் 21

   முந்தைய பகுதிகள் :    தொடர்ச்சி… சென்ற கட்டுரையில் பங்களா தேஷ் நாட்டிலிருந்து செயல்படும் இஸ்லாமிய பயங்கரவாத இயக்கமான ஹர்கத்-உல்-ஜிகாத்-இஸ்லாமிய அமைபினர் தங்களது பயங்கரவாத செயல்பாடுகளுக்கு இளம் பெண்களை பயன்படுத்துவதுப் பற்றிய செய்தியை வெளியிட்டிருந்தோம்.  இந்தக் கட்டுரையிலும் அதன் தொடர்ச்சியாக சில விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி எவ்வாறு கிடைக்கிறது என்பதைப் பற்றியும் இக் கட்டுரையில் சில செய்திகளை காணலாம்.  இந்த கட்டுரையில் சிமி இயக்கம் உத்திர பிரதேசத்தில் துவங்கினாலும், இதன் செயல்பாடுகள் மற்றும் இவர்களின்  நெட் ஒர்க் சம்பந்தமான செய்திகளை இக் கட்டுரையில் காணலாம். பாரத நாட்டின் எல்லையை... [மேலும்..»]

இந்து மத விளக்கங்கள், இலக்கியம்

சில திருக்குறள்கள் குறித்த ஒரு பார்வை

சில திருக்குறள்கள் குறித்த ஒரு பார்வை

சிற்சில திருக்குறள்களுக்கு பரிமேலழகர் முதலான அறிஞர்கள் பலரும் கண்ட கருத்துக்கள் யாவும் ஏற்றுக்கொள்ளத் தக்கனவாகத் தெரியாத நிலை கூட இருக்கிறது.... தெய்வம் தொழாஅள் கொழுநற் தொழுதெழுவாள் என்ற குறளில், பெண்கள் கணவனைத் தவிர, பிற தெய்வம் தொழார் என்று ஒரு கருத்து உரையாசிரியர்களால் நிறுவப்படுகிறது. இவ்வுரை மூலம் பெண்களின் இறைவழிபாட்டு உரிமை மறுக்கப்படுகின்றது. எனவே, இதற்கு எதிர்மறையாகப் பொருள் கொண்டால் என்ன? இப்படி முப்பதிற்கும் மேற்பட்ட குறட்பாக்களுக்கு பரிமேலழகர் எதிர்மறைப் பொருள் கொள்கிறார்....கணவனையே நினைந்து கொண்டு, மனதால் வணங்கிக்கொண்டு துயிலெழுகின்றவளாகிய கற்புடைய பெண் கணவனதும் மற்றை எல்லோரதும் நலனுக்காக கடவுள்... [மேலும்..»]

இந்து மத விளக்கங்கள், ராமாயணம்

இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 18

September 2, 2012
-
இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 18

ஜாம்பவான் கூறினார் - "குரங்குகளில் புலியே! எழுந்திரு! அகன்ற கடலை நீ தாண்டுவாய்”.. மிக வலுவான சக்தி இருக்கும் அனுமானுக்கே அத்தகைய ஊக்கம் தேவைப்பட்டதென்றால், மற்றவர்களைப் பற்றிக் கேட்கவா வேண்டும்?... ஒருவனது பிறப்பிலிருந்து இறப்பு வரை பெண்ணினம் காட்டும் அன்பும் அரவணைப்பும் இல்லாமல் மனித குலமே தழைத்து வளர்ந்திருக்க முடியாது என்று உணர்ந்து அவர்களுக்கு அன்புடன் செலுத்தப்படும் ஒரு நன்றியுணர்ச்சிக் காணிக்கைதான், ஆதியிலிருந்தே இந்த மாதிரியான வழக்கம் இருப்பதன் காரணம்... [மேலும்..»]

தொடர், புதிய இந்து, விவேகானந்தர்

எழுமின் விழிமின் – 22

எழுமின் விழிமின் – 22

“ஒவ்வோர் இயக்கமும் தனக்கே உரிய ஒரு சிறப்புத் தன்மையினால் வெற்றி அடைகிறது. அது வீழ்ச்சி அடையும் போதே பெருமைக் குரிய அதே சிறப்புத் தன்மை அதனுடைய பலவீனத்துக்கும் முக்கியமான காரணமாக ஆகி விடுகிறது. புத்த பகவான் – மாந்தருள் மாணிக்கம், அசாதாரணமான ஒற்றுமை நிர்மாண சக்தி வாய்ந்தவர். இதன் மூலம் அவர் உலகமே தம்மைப் பின்பற்றும் படி செய்தார். ஆனால் அவரது சமயம் மடாலயத் துறவு வாழ்க்கை நிலையை அடிப்படையாகக் கொண்ட சமயமாகும். ஆகையால் இந்த சமயத்தில் பிக்ஷுவின் ஆடையைக் கூட மதித்துப் போற்றும் ஒரு தீய விளைவு ஏற்பட்டது. மடாலயங்களில் துறவியர் கூட்டம் கூட்டமாகக்... [மேலும்..»]

இலக்கியம்

அம்பாளின் சிலம்பொலி: லா.ச.ரா படைப்புலகம் குறித்து… – 1

May 29, 2012
-
அம்பாளின் சிலம்பொலி: லா.ச.ரா படைப்புலகம் குறித்து… – 1

இந்தப் பாத்திரங்கள் பிரக்ஞை நிலையில் வெறி பிடித்தது போல நடந்து கொள்வதால் தான், சாதாரண காட்சிகள் நாடகீயமாக ஆகின்றன, காவிய ரூபம் கொள்கின்றன. சாதாரணப் பெண் சன்னதம் வந்த நிலையில் காளியாக மாறுவது போல... கடற்கரை மணலில் கால்பட்ட இடமெல்லாம் சங்கும் சிப்பியும் இடறுவது போல, எழுத்தெங்கும் படிமங்கள் இறைந்து கிடைக்கும் வெளி லாசராவின் எழுத்து... மீண்டும் மீண்டும் ஒருவித லயத்தில் வரும் உச்சாடனங்கள் போன்ற சொற்கள் – மந்திரமாகின்றன... உன்னதமாக்கப் பட்ட காமம் தான் லா.ச.ரா படைப்புகளின் அடிநாதமாக இருக்கிறது. இந்த நிலைக்கு வருவதற்காக தத்தித் தாவி மோதும் முயற்சியே அவரது சிருஷ்டிகர செயல்பாட்டின்... [மேலும்..»]

புத்தகம், வழிகாட்டிகள்

நிகரில்லா நிவேதிதா – இரு புத்தகங்கள்

நிகரில்லா நிவேதிதா – இரு புத்தகங்கள்

மேற்கத்திய நாட்டிலிருந்து எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்திய மக்களின் முன்னேற்றத்தின் மீது முழு அக்கறையும் அன்பும் மதிப்பும் கொண்டு வாழ்நாள் முழுக்க தன்னைத்தானே தேய்த்து அழித்து சமர்ப்பித்த ஒருவர் உண்டு. அவரது சமாதி தினத்தின் நூற்றாண்டு விழா இவ்வருடம்... மாற்று வழிகளில் உலக அறிவியலாளர்களையும் இதர இந்திய நேசிப்பாளர்களையும் தொடர்பு கொண்டு அவர் அறிவியல் கண்டுபிடிப்புகள் உலக பிரசித்தி அடைய உதவி செய்தார்... தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ்ந்த பகுதிகளில் உள்ள சாக்கடைகளை பிளேக் காலங்களில் நிவேதிதாவும் அவருடன் பணியாற்றிய இளைஞர்களும் களமிறங்கி சுத்தப்படுத்தினார்கள்... [மேலும்..»]