Posts Tagged ‘ பெண்ணடிமைத்தனம் ’

கம்பனும் வால்மீகியும்: இராமாயண இலக்கிய ஒப்பீடு – 4

வீரரே! இழிந்தவன் (ஒருவன்) இழிந்தவளிடம் (பேசுவதைப்) போல, கேட்பதற்குக் தகாத, இப்படிப்பட்ட கடும் சொற்களை ஏன் என்னைக் கேட்க வைக்கிறீர்?... என்னுடையதான இதயம் என் வசமானது. அது உம்மிடமே உள்ளது. உதவியற்றவளும், அன்னியன் வசத்தில் இருந்த என் உடலை நான் என்ன செய்ய இயலும்?.... உத்தமரே! இத்தனை காலமாக நான் மிகவும் வருத்தி எத்துணை தவம், எத்தனை நற்செயல்கள், சிறந்த கற்பறங்கள் செய்தும், உம மனம் அதை உணர்ந்து பார்க்க இயலாது போனதால், (அவை) பைத்தியக்கரச் செயல்கள் என்று ஆகிப் பயனின்றிப் போயினவே.... இராமன் பெண்ணடிமை செய்தான் என்று பேசுபவர்களின் முகத்தில் கரியைப் பூசிவிடுகிறாள் வால்மீகியின்... [மேலும்..»]

கம்பனும் வால்மீகியும்: இராமாயண இலக்கிய ஒப்பீடு – 3

இராவணன் அரக்க வடிவத்தை எடுத்த பின்னும் சீதை கலங்கவில்லை, அவனை எதிர்த்து வாதிட்டிருக்கிறாள் என்றுதான் இரு கவிகளும் எழுதி உள்ளார்கள். எல்லா தேவர்களாலும் வணங்கப்படும் குபேரனின் சகோதரனான நீ இந்த இழிவான எண்ணத்தை ஏன் மேற்கொண்டாய் என்று கடிகிறாள் என்று வால்மீகி சொல்கிறார். வேள்வியில் (யாகத்தில்) இடப்படும் பலியை நாய் விரும்புவது போல, என்னை அடைய விரும்புவதாகச் சொல்கிறாயே என்று அவனை நாயுடன் துணிச்சலாக ஒப்பிடும் வீராங்கனையாகத் திகழ்கிறாள் சீதை என்று உச்சாணிக் கொம்புக்கே அவளை ஏற்றி விடுகிறார் கம்பர். இரு கவிச்சக்கரவர்த்திகளுமே, சீதையை, ஆணுக்கு அடங்கிப் பயந்து போகும், அடிமையாக வாழ்ந்திருக்கும்... [மேலும்..»]

தெஹல்கா பாலியல் தாக்குதல்: பாதிக்கப்பட்ட பெண்ணின் குமுறல்

தங்கள் வாழ்க்கை மற்றும் உடல்களை தாமே அழுத்தந்திருத்தமாக அடக்கியாளும் உரிமையும் ஆற்றலும் பெற வேண்டி பெண்கள் மேற்கொள்ளும் கடுமையான முயற்சி நிச்சயமாக அரசியல் தன்மை உடையது தான். ஆனால் பெண்ணீய அரசியலும் அதன் தன்மைகளும் நமது அரசியல் கட்சிகளின் குறுகிய உலகத்தை விட பரந்தது... கற்பழிப்பு என்பது காமம் அல்லது கலவியைக் குறித்த விஷயம் அல்ல. மாறாக அது பெண்களின் ஆற்றல், சிறப்புரிமை மற்றும் அதிகாரபூர்வமான உரிமை ஆகியவற்றை பாதிக்கக்கூடியது என்பது குறித்து நாம் காலம் காலமாக பேசி வந்துள்ளோம்... இத்தருணத்தில் மௌனமாக வாளாவிருக்க நான் விழைந்திருந்தால்,என்னால் என்னையே நேரிட்டிருக்க முடியாது என்பது மாத்திரம் அல்ல,... [மேலும்..»]

கன்னியின் கூண்டு – 3

August 31, 2013
By

இஸ்லாமியப் பெண்களும், பெண் குழந்தைகளும் உட்புறக் கூண்டில் அடைக்கப்பட்டிருக்கும் அதே நேரத்தில், அதனைச் சுற்றிலும் அமைந்த அடுத்த கூண்டில் மொத்த இஸ்லாமியக் கலாச்சாரமும் அடைபட்டிருக்கிறது. கூட்டிலடைபட்டு, செயலற்றுக் கிடக்கும் பெண் அவளது எதிர்காலச் சமூகத்திற்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் செயல்களை அவளது குழந்தைகள், குறிப்பாக அவளின் மகன்கள் மீது சுமத்துகிறாள்..... முகமது நபியையும், குரானையும் முழுமூச்சாக நம்பி வாழுகிற ஒரு சமூகமானது, தனது சிந்திக்கும் திறனை இழந்து, ஒருவிதமான மனோவியாதிக்கு ஆட்பட்டது போலக் குழப்பங்களிலும், எதிர்மறை எண்ணங்களிலும் அமிழ்ந்து போகிறது. உள் மனத்திலும், வெளியுலகிலும் தொன்றுகின்ற கேள்விகளால் வதைக்கப்பட்டு அதனுடன் முழுமையான இஸ்லாமை பின்பற்றுவதற்கான சாத்தியங்கள் இல்லாத... [மேலும்..»]

கன்னியின் கூண்டு – 2

August 12, 2013
By

இஸ்லாமிய சமுதாயங்களில் இது போன்ற காரணங்கள் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டு, பெண்கள் தங்களின் உடலை மூடி மறைத்துக் கொண்டு, வெளியாருக்குத் தெரியாமல் மறைந்திருக்கும் படி வற்புறுத்தப் படுகிறார்கள். இதன் காரணமாக அப் பெண்கள் எப்போதும் ஒரு விதமான குற்றவுணர்ச்சியுடன் கூடிய அவமானத்தில் வாழ்கிறார்கள்... தங்களின் கன்னித்தன்மையை இழக்காமலிருக்கும் பொருட்டு பல இலட்சக்கணக்கான இஸ்லாமியப் பெண்கள் வீட்டு வேலைகள் செய்யப் பணிக்கப்பட்டு, மணிக்கணக்காக ஒன்றும் செய்யாமல் இருந்து புழுங்கித் தவிக்கிறார்கள்... இவையனைத்தையும் விடக் கொடுமையான முறை அப் பெண்ணுக்கு சுன்னத் செய்வது (female circumcision). அதாவது அந்தப் பெண்ணின் கிளிட்டொரியசை வெட்டியெடுப்பதின் மூலம் அவளது கன்னித்தன்மையை... [மேலும்..»]

கன்னியின் கூண்டு – 1

August 1, 2013
By

அயான் ஹிர்ஸி அலி, சோமாலியாவில் ஒரு இஸ்லாமியப் பழங்குடியில் பிறந்த ஒருவர். பெற்றோர் வற்புறுத்தலால் தனக்கு விருப்பமில்லாத ஒருவரை திருமணம் செய்து கொண்டு கனடா செல்லும் வழியில் நெதர்லாந்திற்கு தப்பியோடி, கல்வி கற்று, தேர்தலில் நின்று ஜெயித்து, நெதர்லாந்து பார்லிமெண்டில் பணியாற்றிய ஒரு துணிவு மிக்க பெண்மணி. கொலை மிரட்டல் விடுக்கப்பட, பல வித சிரமங்களுக்குப் பிறகு இன்று அமெரிக்காவில் வாழ்ந்து வரும் அவர் எழுதிய ”கன்னியின் கூண்டு” என்ற நூல் இஸ்லாமியப் பெண்களீன் நிலையைத் தோலுரித்துக் காட்டுகிறது.... எல்லாக் கட்டுப்பாடுகளும் பெண்களுக்கு மட்டுமே பொருந்தும். கற்பழிக்கப்படுகிற பெண்ணின் மீதே குற்றம் சொல்ல... [மேலும்..»]

கடிதமாக முடிந்து போன ஒரு கடைசிக் கதறல்-03

பக்கத்தில் இருந்த கிராமத்திற்குச் சென்றபோது இறந்தவர்களின் எலும்புக்கூடுகளைப் பல இடங்களில் பார்த்தேன். ஆற்றோரங்களில் நாய்களும் கழுகுகளும் பிணங்களைத் தின்பதை பார்த்தேன். எனக்கு வந்த தகவல்படி அங்கு ஆண்களை ஒட்டு மொத்தமாக கொன்று விட்டு அங்கு இருந்த பெண்களை முஸ்லீம் தலைவர்களுக்குள் பங்கிட்டுக் கொண்டனர். “இஸ்ஸாத்தின் பெயரால் பாகிஸ்தானை பீடித்துவிட்டது எது?” என நான் என்னையே கேட்டுக்கொண்டேன். [மேலும்..»]

கடிதமாக முடிந்து போன ஒரு கடைசிக் கதறல்-02

கூடவே அருகில் இருக்கும் முஸ்ஸீம்களை அழைத்து இந்து வீடுகளைக் கொள்ளையடிக்க உதவினார்கள். பல பேர் இதில் கொல்லப்பட்டார்கள். ஆண்களும் பெண்களும் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டனர். வீடுகளில் இருந்த தெய்வ உருக்கள் உடைக்கப்பட்டு, வழிபாட்டு இடங்கள் சேதப்படுத்தப்பட்டு அழிக்கப்பட்டன. பல பெண்கள், ராணுவத்தினராலும் காவல் துறையினராலும் உள்ளூர் முஸ்ஸீம்களாலும் கற்பழிக்கப்பட்டனர். [மேலும்..»]

கடிதமாக முடிந்து போன ஒரு கடைசிக் கதறல்-01

அப்போது அவர் எழுதிய அந்த உணர்ச்சி மிகுந்த, துரோகத்தின் வலி சுமக்கும் அக்கடிதத்தின் மொழிபெயர்ப்பே இத்தொடர். முஸ்லிம்களை நம்பும் இந்துக்களுக்கு, குறிப்பாக தலித் தலைவர்களுக்கு என்ன கதி ஏற்படும் என்பதற்கு இந்தக் கடிதம் ஒரு வரலாற்று சாட்சியம். [மேலும்..»]

மிதவாத முஸ்லீம்கள் எங்கே? – 4 (இறுதி பாகம்)

September 28, 2010
By

இன்றிருக்கும் மிதவாதிகள் ஒரு அளவிற்கு மேல் மதகுருமார்களின் எதிர்ப்பை சந்திக்க முடியவில்லை. யாரேனும் முயற்சித்தாலும் உடனடியாக அவர் "இஸ்லாத்துக்கு எதிரி" என்று முத்திரை குத்தப்பட்டு விடுகிறார். இங்குதான் மிதவாத முஸ்லீம்களுக்கு மேற்கத்திய நாடுகள் இடம் கொடுக்கும் என்று நான் கருதுகிறேன். குறிப்பாக அமேரிக்காவிலும் பிற மேற்குலக நாடுகளிலும் இன்று இருக்கும் முஸ்லீம் விரோத மனநிலையை மிதவாதிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். குற்றச்சாட்டுகளுக்கு சால்ஜாப்புகள் செய்து தப்பிக்காமல் அதை நேருக்கு நேராக அணுக வேண்டும். [மேலும்..»]