
தங்கள் வாழ்க்கை மற்றும் உடல்களை தாமே அழுத்தந்திருத்தமாக அடக்கியாளும் உரிமையும் ஆற்றலும் பெற வேண்டி பெண்கள் மேற்கொள்ளும் கடுமையான முயற்சி நிச்சயமாக அரசியல் தன்மை உடையது தான். ஆனால் பெண்ணீய அரசியலும் அதன் தன்மைகளும் நமது அரசியல் கட்சிகளின் குறுகிய உலகத்தை விட பரந்தது… கற்பழிப்பு என்பது காமம் அல்லது கலவியைக் குறித்த விஷயம் அல்ல. மாறாக அது பெண்களின் ஆற்றல், சிறப்புரிமை மற்றும் அதிகாரபூர்வமான உரிமை ஆகியவற்றை பாதிக்கக்கூடியது என்பது குறித்து நாம் காலம் காலமாக பேசி வந்துள்ளோம்… இத்தருணத்தில் மௌனமாக வாளாவிருக்க நான் விழைந்திருந்தால்,என்னால் என்னையே நேரிட்டிருக்க முடியாது என்பது மாத்திரம் அல்ல, தலைமுறைகளாக முழு முனைப்புடன் செயல்பட்டு பெண்ணீய இயக்கத்தை முன்னெடுத்துச் சென்று புதுப்பிக்கும் அந்த நெஞ்சுரம் கொண்ட பெண்களையும் எதிர்கொள்ள முடியாமல் போயிருக்கும்…