
தேசபக்தியும், ஒட்டுமொத்த மக்களின் நலனில் அக்கறையும் கொண்ட ஒரு தலைவரே நமக்குத் தேவை. அவர் செயல் திறன் மிக்கவராகவும், அடுத்த தலைமுறைகளுக்காகத் திட்டங்களைத் தீட்டும் உறுதி படைத்தவருமாக இருக்க வேண்டும். சுயநலனையும், சுற்றி உள்ளவர்களின் ஆசாபாசங்களையும் மையமாக வைத்து முடிவெடுப்பராக அவர் இருக்கக் கூடாது… இந்தியப் பண்பாடு சீக்கிரமே மேலெழுந்து வேண்டும். இங்கு வாழும் ஒவ்வொரு மனிதனும் தனது திறமைகள் முழுவதையும் வெளிப்படுத்தும் வகையில் வாய்ப்புகள் பெருக வேண்டும். புத்துணர்வு மிக்க ஒரு புதிய இந்தியா உருவாக வேண்டும். நமது நாட்டைப் பாதித்து வரும் சிரமங்கள் வெகு சீக்கிரமே சரி செய்யப்பட வேண்டும். இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் இந்தியன் என்று சொல்லப் பெருமைப்படும் காலம் வர வேண்டும்…