நாட்டிற்குத் தேவை நல்ல தலைமை!

தேசபக்தியும், ஒட்டுமொத்த மக்களின் நலனில் அக்கறையும் கொண்ட ஒரு தலைவரே நமக்குத் தேவை. அவர் செயல் திறன் மிக்கவராகவும், அடுத்த தலைமுறைகளுக்காகத் திட்டங்களைத் தீட்டும் உறுதி படைத்தவருமாக இருக்க வேண்டும். சுயநலனையும், சுற்றி உள்ளவர்களின் ஆசாபாசங்களையும் மையமாக வைத்து முடிவெடுப்பராக அவர் இருக்கக் கூடாது… இந்தியப் பண்பாடு சீக்கிரமே மேலெழுந்து வேண்டும். இங்கு வாழும் ஒவ்வொரு மனிதனும் தனது திறமைகள் முழுவதையும் வெளிப்படுத்தும் வகையில் வாய்ப்புகள் பெருக வேண்டும். புத்துணர்வு மிக்க ஒரு புதிய இந்தியா உருவாக வேண்டும். நமது நாட்டைப் பாதித்து வரும் சிரமங்கள் வெகு சீக்கிரமே சரி செய்யப்பட வேண்டும். இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் இந்தியன் என்று சொல்லப் பெருமைப்படும் காலம் வர வேண்டும்…

View More நாட்டிற்குத் தேவை நல்ல தலைமை!

மாற்றம் கொண்டுவரும் மாற்று அணி!

“பாஜக கூட்டணி காலத்தின் கட்டாயம் சார். பொன்.ராதாகிருஷ்ணன் தனது தலைமையை நிரூபித்திருக்கிறார். இந்தக் கூட்டணி குறைந்தபட்சம் 10 முதல் 15 தொகுதிகளில் வென்றே தீரும்” என்றும் கூறினார் அந்த நடத்துனர். இந்த வார்த்தைகளில் ஒரு சதவிகிதம் கூட கலப்பில்லை. மிகத் தெளிவான, ஊரகப் பகுதி மனிதர் ஒருவரின் வாக்குமூலமாக இதை உணர முடிந்தது. அதன்பிறகு, எங்கள் பேச்சு, தொகுதிப் பங்கீடுகள், வேட்பாளர்கள் தேர்வு குறித்தெல்லாம் சென்றது. நடத்துனரின் அரசியல் அறிவு அதில் பளிச்சிட்டபடியே இருந்தது…. வெற்றி- தோல்விகள் அனைவருக்கும் பொதுவானவை. ஆனால், மகத்தான மாற்றங்களுக்கு முயற்சிப்பதே ஒரு பெரும் சாகசம். அந்த சாகசத்தில் தமிழக பாஜக வெற்றி பெற்றிருக்கிறது. தமிழகத்தில் உருவாகியுள்ள இந்தக் கூட்டணி தேசிய அளவிலும் பாஜக-வுக்கு மிகுந்த தெம்பூட்டுவதாக அமைந்துள்ளது….

View More மாற்றம் கொண்டுவரும் மாற்று அணி!

வலுவான குடும்பம், வளமான இந்தியா: புதிய புத்தகம்

உயிர்ப்புள்ள குடும்பங்களே உறுதியான சமூகங்களையும் வலுவான பொருளாதாரத்தையும் உருவாக்குகின்றன. மேலோட்டமாகப் பார்ப்பதற்கு மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட ஒரு சூத்திரம்போல் தோன்றினாலும் இதுவே சமூக வரலாற்று உண்மை. இந்தியக் குடும்பச் சூழலையும் அமைப்பையும் மேற்கத்திய நாடுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும் பேராசிரியர் கனகசபாபதி, இந்தியப் பொருளாதார முன்னேற்றத்துக்கு அடிப்படையாக அமைவது குடும்ப சமூக அமைப்புகளே என்னும் முடிவுக்கு வந்து சேர்கிறார். நூலாசிரியர் மேற்கொண்ட நேரடிக் கள ஆய்வுகளும் சேகரித்த புள்ளி விவரங்களும் பிற தரவுகளும் அவருடைய இந்த முடிவை பலப்படுத்துவதாக அமைந்துள்ளன….

View More வலுவான குடும்பம், வளமான இந்தியா: புதிய புத்தகம்