கஜா புயல் சேதம்: சேவாபாரதி நிவாரணப் பணிகள்

கஜா புயலால் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ள வேதாரண்யம், திருத்துறைபூண்டி, பேராவூரணி, புதுக்கோட்டை பகுதிகளில் ஆர்எஸ்எஸ் – சேவா பாரதி புயல் நிவாரண பணி முகாம்கள் நடந்து வருகின்றன. இதற்கு பொருளாகவும், பணமாகவும் உதவி செய்ய விரும்புவோருக்கான தொடர்புகள் கீழே… புயலுக்கு பின் முதலில் களத்திற்கு வந்த சேவாபாரதி சாலைகளில் விழுந்துள்ள மரங்களை அப்புறப்படுத்த முடிவு செய்து பணியை துவக்கியது. பெட்ரோலால் இயங்கும் ரம்பங்கள் திருப்பூரிலிருந்து வாங்கி அனுப்பப்பட்டது. அதோடு 10,000 எம் ஏ எச் திறனுள்ள பவர் பேங்க் 200 முழுமையாக சார்ஜ் ஏற்றப்பட்டு அங்கு நிவாரணப்பணியில் களத்தில் இருப்பவர்களுக்கும், அரசு நிர்வாகத்தில் இயங்குபவர்களுக்கும் வழங்கப்பட்டது. பழைய ப்ளெக்ஸ்கள், தார்பாய்கள் வாங்கப்பட்டு தற்காலிக முகாம்கள்,உடைந்த கூரைகள் மீது போட ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் பின்னர் மிக முக்கியமாக உணவுப்பொருட்களை அனுப்பும் துவங்கியது…

View More கஜா புயல் சேதம்: சேவாபாரதி நிவாரணப் பணிகள்

போர்க்கால யாழ்ப்பாணம் – சில நினைவுகள்

நாம் வாழும் வடஇலங்கையின் யாழ்ப்பாணப்பகுதியில் 1990ஆம் ஆண்டு யூன் மாதம் தொட்டு, கிட்டத்தட்ட 2000ஆம் ஆண்டு வரை மின்சாரமற்ற வாழ்வு நிலை கொண்டிருந்தது. விமானக்குண்டு வீச்சுக்களே இதற்கு முக்கிய காரணமாயின. தொலைத்தொடர்பு வசதிகள் முற்றாக இக்காலத்தில் செயலிழந்திருந்தன. நாங்கள் வாழ்ந்த வடபுலத்திற்கும் பிற பகுதிகளுக்குமான தரைவழிப்போக்குவரத்தும் இல்லாதிருந்தது. திடீரென்று நவீன உலகத்திலிருந்து ஆதிகாலம் போன்ற ஒரு உலகத்திற்கு தள்ளப்பட்டோம். ஆனால், என்ன அதிசயம் என்றால் இக்காலத்தில் மனிதவிழுமியங்கள் இப்போது நம் ஊர்களில் இருப்பதைக் காட்டிலும், மிக உயர்ந்த நிலையிலிருந்ததாக சொல்கிறார்கள்… உணவு, உடை போன்ற யாவற்றுக்கும் கப்பலை பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய நிலை வேறு இருந்தது. கப்பல் வரா விடின் விலை கிடு கிடு என அதிகரிக்கும். பொருட்களுக்கு தட்டுப்பாடும் ஏற்படும்… இன்றைக்கு சென்னை மக்களின் அவலத்தை போக்க இயன்ற உதவிகளை, இதே போன்ற அவலத்தை அனுபவித்த இலங்கையை சேர்ந்த வசதிபடைத்த புலம்பெயர் மக்களும் பிறரும் இயன்ற அளவு செய்ய முன்வருவது சிறப்பானதாகும்….

View More போர்க்கால யாழ்ப்பாணம் – சில நினைவுகள்

சென்னை மழைவெள்ளம்: பா.ஜ.க அவசர சேவை உதவி எண்கள்

தமிழக பாரதிய ஜனதா கட்சி மழைவெள்ள நிவாரணத்திற்காக எமர்ஜென்ஸி எண்கள் அறிவித்துள்ளது. அதுபற்றிய அமைச்சர்…

View More சென்னை மழைவெள்ளம்: பா.ஜ.க அவசர சேவை உதவி எண்கள்

சென்னை மழைவெள்ளம்: சேவாபாரதி மீட்புப் பணிகள்

வரலாறு காணாத மழை வெள்ளம் சென்னை நகரத்தைப் பேரிடரில் ஆழ்த்தியுள்ளது. இந்தச் சூழலில் அயர்வின்றி ஓய்வுப் பணியில் ஈடுபட்டிருக்கும் அனைத்து அரசு அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள், சேவை அமைப்புகளுக்கும் நமது இதயபூர்வமான நன்றிகள். குறிப்பாக, மாநகர போக்குவரத்து, காவல் துறை, தீயணைப்புத் துறை, மாநகராட்சி, மத்திய/மாநில பேரிடர் மீட்புப் பணியாளர்களின் இடையறாத சேவை போற்றுதலுக்குரியது. இந்த இடரிலிந்து சென்னை விரைவில் மீண்டு வர இயற்கையை இறைஞ்சுகிறோம்.

சேவா பாரதி அமைப்பு நகரத்தின் பல இடங்களில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. உதவி வேண்டுவோர் கீழ்க்கண்ட எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

Sri. Rajesh Vivekanandan – 9840260631

Sri. Srinivasan – 9789023996

Sri. Durai Shankar – 9444240927.

சேவார பாரதி அமைப்பு, தொடர்ந்து பல கல்வி, மருத்துவ, நிவாரண சேவைப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இப்பணிகளுக்கு நன்கொடை அளிக்க விரும்புவோர், கீழ்க்கண்ட வங்கிக் கணக்குக்கு தங்கள் கொடைகளை டிரான்ஸ்ஃபர் செய்யலாம்.

A/c Name: SEVABHARATHI TAMILNADU
A/c No: 078410011014427
IFSC code: ANDB0000784 (Andhra Bank Chetput Branch, Chennai)

(Please send your name, address details etc. to sevabharathitn@rediffmail.com to enable them to send receipt. Donations are tax exempt under sec. 80G).

சேவா பாரதி முகவரி:

2, M. V. Naidu Street, Panchavati, Chetpet, Chennai – 600 031.

View More சென்னை மழைவெள்ளம்: சேவாபாரதி மீட்புப் பணிகள்

மோடியின் குஜராத் – நூல் மதிப்புரை

இந்தியாவின் 51வது குடியரசு தினத்தன்று ஏற்பட்ட நிலநடுக்கம் குஜராத்தின் கட்ஜ் பகுதியை மையமாகக் கொண்டிருந்தது. தெருக்களில் ஊர்வலமாக தேசபக்திப் பாடல்களைப் பாடிக்கொண்டு தேசியக்கொடி ஏற்றுவதற்காக பள்ளிக்கூடம் சென்று கொண்டிருந்த 250 மாணவர்கள் உட்பட சுமார் 20000 பேர் இந்த நிலநடுக்கத்தால் கொல்லப்பட்டனர். கட்ச் பகுதியிலிருந்து 250 கி.மீ தூரத்தில் உள்ள அகமதபாத்தில் கூட நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என்றால் அதன் பாதிப்பை சற்று நினைத்துப் பாருங்கள். ஆனால் குஜராத் அசரவில்லை. பெரும்பாலான கிராமங்கள் இரண்டே ஆண்டுகளில் சீரமைக்கப்பட்டன.

இன்று உலகின் பல பகுதிகளில் பேரிடர் அழிவுகள் ஏற்பட்டால் அவர்கள் மறுசீரமைப்பு பணியை ஆரம்பிப்பதற்கு முன் குஜராத்திற்கு வருகை தருகிறார்கள், கட்ச் பகுதியில் எப்படி மறுசீரமைப்புப் பணிகள் திட்டமிடப்பட்டன, நடைமுறைப்படுத்தப்பட்டன போன்ற விவரங்களை அறிந்து கொள்கிறார்கள். மோடியின் வித்தையை மின்சாரம் , விவசாயம் , குடிநீர் , சுகாதாரம் , உள்கட்டமைப்பு என்று பல்வகையாகத் தொகுத்துக் கொடுத்திருக்கிறார் சரவணன் தங்கதுரை.

View More மோடியின் குஜராத் – நூல் மதிப்புரை