
இந்தியாவின் நவீன பொருளாதாரத்திற்கான அடிப்படை அடித்தளம் கடந்த மோடியின் ஆட்சியில் தான் வலுவாக்கப்பட்டது என்பது நமது தனியார் முதலீட்டாளர்களுக்கும், ஏன் பல சிந்தாந்தங்களால் வேறுப்பட்ட பொருளாதார வல்லுனர்களுக்கும் கூட நன்றாகத் தெரியும். இது தற்காலிகமாக சங்கடங்களை தந்தாலும், நீண்ட காலத்திற்குப் பயனுள்ளதாய் அமையும்… மோடி அரசாங்கம் இந்திய பொருளாதரத்தில் ஒரு புது அர்த்தத்தை கொண்டு வந்தது என்றே சொல்ல வேண்டும். பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி போன்ற நடவடிக்கைகளால் முறைசாரா இந்திய பொருளாதாரத்தை முறைப்படுத்திய பொருளாதாரமாக மாற்றினார். நீங்கள் திகைக்காமலும் பதட்டப்படாமலும் இருந்தாலே அது உங்கள் நாட்டுக்கு நீங்கள் செய்யும் மிகச் சிறந்த சேவையாக இருக்கும். நமது பொருளாதாரம் மிகவும் நல்ல நிலையில் உள்ளது. ஒட்டுமொத்த பொருளாதார (மேக்ரோ) குறியீடுகள் அனைத்தும் பொருளாதாரம் ஆரோக்கியமாக உள்ளது என்பதான தகவல்களையே தருகின்றன… பண்டிகை காலத்திற்குள் நாம் நுழைவதால் நுகர்வு உயரும். மேலும், ஏற்றுமதியை மேம்படுத்துவதிலும், முதலீட்டிலிருந்தும், டிஸ்இன்வெஸ்ட்மென்ட் செய்வதிலிருந்தும் பொருளாதார வளர்ச்சி மேம்பட்ட வளர்ச்சியில் செல்லப் போகிறது என்பதில் எந்த மாற்றமும் இல்லை . இந்த ஆண்டுக்கான டிஸ்இன்வெஸ்ட்மென்ட் இலக்கு ரூ .1.14 லட்சம் கோடியைக் கடக்கும் என்று நம்பிக்கை அரசாங்க மத்தியத்தில் நிலவி வருகிறது…