Tag: போகப் போகத் தெரியும்

போகப் போகத் தெரியும் – 35

வேதாந்தச் சிங்கமான சுவாமி விவேகானந்தர் அமெரிக்கப் பயணத்தில் இருந்தபோது, இங்கர்சால் அவரைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தார் என்ற தகவலை இந்நாட்டு இங்கர்சால்களும் அவருடைய இளவல்களும் அறிவார்களா? அகலமும், ஆழமும் இல்லாத புலமையை வைத்துக்கொண்டே இவர்கள் தமிழக அரசியலைப் புரட்டிப் போட்டுவிட்டார்கள்.

போகப் போகத் தெரியும் – 30

மாநாட்டில் அண்ணா கலந்து கொள்ளவில்லை. அண்ணா ஏன் வரவில்லை என்று பெரியாரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் ‘முத்தன் ஏன் வரவில்லை? அப்புறம் எம்.எஸ். சுப்புலட்சுமி ஏன் வரவில்லை, சுந்தராம்பாள் ஏன் வரவில்லை என்று கேட்பீர்கள் போலிருக்கிறதே’ என்று பதிலளித்தார்.

போகப் போகத் தெரியும் 29

ஈ.வெ.ராவின் சுயமரியாதைத் திருமணம் பற்றிப் பலர் பேசுவதைப் பார்க்கிறேன். அதைப் பற்றி அந்தப் பகுதி வரும்போது விரிவாகப் பேசுவேன். இப்போதைக்கு ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன்.

‘சுயமரியாதைத் திருமணத்தை வலியுறுத்திய ஈ.வெ.ராவின் திருமணம் ஒரு சுயமரியாதைத் திருமணம் அல்ல.’

போகப் போகத் தெரியும் – 28

சுயமரியாதைத் திருமணம் ஆரம்பமான கதை இதுதான். ஒவ்வொரு ஆணுக்கும் இரண்டு பெண்களைக் கட்டிவைத்ததுதான் பகுத்தறிவுப் பாரம்பரியத்தின் தொடக்கம்.

போகப் போகத் தெரியும் – 27

குடி அரசில் காந்தி, பாரத மாதா படங்களும், மாதா கோவில், மசூதி, கோவில் கோபுரம், முனிவரின் தவக்கோலம் ஆகிய படங்களும் இருந்தன… ‘வர்ணப் பிரிவுகளை மாற்றிக் கொள்ளலாம்’ என்றும் வர்ணாசிரமம் என்பது தொழில் பிரிவுதான், பிறவியால் வருவதல்ல என்றும் கூறியவர் பாரதியார். இதற்கு ஆதரவாக பகவத் கீதையை அவர் மேற்கோளாகக் காட்டினார்.

போகப் போகத் தெரியும் – 26

சம்ஸ்கிருதத்திற்குப் பதிலாக தமிழில் அர்ச்சனை செய்யலாம் என்ற கருத்து ஈ.வெ.ரா. விடம் சொல்லப்பட்டது ‘மலத்தை தட்டில் வைத்துத் தரவேண்டுமா’ என்று கேட்டார் அவர்.

போகப் போகத் தெரியும் – 24

பச்சையப்பன் கல்லூரியில் தாழ்த்தப்பட்டோருக்கு உரிமை மறுக்கப்பட்ட காலத்திலேயே, தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவரை சங்கராச்சாரியார் கௌரவித்திருக்கிறார் என்பதைக் குறித்துக் கொள்ளவும். இத்தகைய செய்திகளைப் பதிவு செய்தவர் அன்பு. பொன்னோவியம் என்பதையும் தயவுசெய்து குறித்துக்கொள்ளவும்.

போகப் போகத் தெரியும் – 23

சமூக விடுதலை என்ற சாயத்தைப் பூசிக்கொண்ட தலைவர்கள், உண்மையில் செய்ததெல்லாம் அங்க வர்ணனைகளின் பங்கு வர்த்தகம்தான்… ஆபாசக் குப்பைகள் அரசியல் அந்தஸ்து பெற்றது தமிழகத்தில்தான். எழுச்சியோடு உருவான படைப்புகள் சாதி அடையாளங்களால் ஒதுக்கி வைக்கப்பட்டதும் தமிழகத்தில்தான்.

போகப் போகத் தெரியும் – 22

“சிறிதுகாலம் பாரதிதாசன் சிறைப்பட்டதாக ஒரு தகவல். அதுகூடப் பொதுக்காரணத்திற்காக அல்ல, தனிப்பட்ட சொந்தக் காரணத்திற்காக. ஏதோ ஒரு பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டதற்காக ஊர்மக்கள் இவரை நையப்புடைத்ததாகவும் அவரை நன்கறிந்தோர் கருத்து கூறுகின்றனர். அந்தக் காலத்தில் அச்சடித்து விநியோகிகப்பட்ட சிற்றறிக்கை ஒன்றும் இதை உறுதி செய்கிறது.”