Posts Tagged ‘ போராடும் இந்துத்துவம் ’

கோயில் வாசலில் அன்னியமதப் பிரசாரம்

சனிக் கிழமை மாலை 5:30 அல்லது 6 மணி இருக்கலாம். திருவல்லிக் கேணி கோவில் வளாகத்தில் ஒரு காட்சியை காண நேர்ந்தது. கோவில் வந்திருக்கும் ஒரு முதிய பெண்மணியிடம் ஒரு இளைஞர் தமது செல்போனை காட்டி ஏதோ விவரித்து கொண்டிருந்தார். அந்த இளம் சகோதரர் ஒரு இஸ்லாமியர். ‘படைத்த இறைவன் ..’ என்றெல்லாம் வார்த்தைகள் காதில் விழுந்தன... அந்த அம்மணி அமைதியாக ‘இதைத்தானப்பா நாங்களும் சொல்கிறோம்.. பகவான் உலகத்தை படைத்து சம்ரக்ஷித்து கொண்டிருக்கிறார். அதற்கென்ன இப்போ!’ என்றார். ‘சரிங்க . ஒரு முக்கியமான இந்து கோவில் முன்னாடி உங்க மத பிரச்சாரத்தை செய்றீங்க. இதே போல இந்துக்கள்... [மேலும்..»]

பெருமாள் முருகன் விவகாரம்: அறிவுலகவாதிகளும், சாமானிய மக்களும்

நாவலாசிரியரின் எழுத்துரிமை பற்றி இரு வேறு கருத்து இருக்க முடியாது. அது பாதுகாக்கப்பட வேண்டியது தான். ஆனால் அதற்காக வாதாடும் அறிவுலக வாதிகள், தாங்கள் நியாயம் எனக் கருதும் விஷயத்துக்காக எந்த வித வன்முறையுமின்றி அமைதியாகப் போராடும் சாமானிய மக்களை எப்படி வேண்டுமானாலும் வசை பாடலாமா? ஜாதியவாதிகள் என்று அவர்களைச் சொல்வதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை. ஏனெனில் அந்த எதிர்ப்புகளை தலித்துகள் உள்ளிட்ட அனைத்து ஜாதி மக்களும் ஒன்றிணைந்து நடத்தி வருகின்றனர். கோவில் தேர்த்திருவிழாவில் தலித்துகள் உள்ளிட்ட அனைத்து ஜாதியினருக்கும் பொறுப்புக்கள் உள்ளன... ஊடகங்களில் சிலவாவது திருச்செங்கோடு சென்று அவர்களைச் சந்தித்து... [மேலும்..»]

உலக இந்து சம்மேளனம் 2014

November 22, 2014
By

இதற்கு முன்பு நிகழ்ந்த இத்தகைய சம்பிரதாயமான நிகழ்வுகள் அனைத்துடனும் ஒப்பிடுகையில் இந்த சம்மேளனம் பல விதங்களில் முக்கியத்துவமும் சிறப்பும் வாய்ந்த ஒன்று... "2009ல் புலிகளுடனான போர் முடிந்த பிறகும் இலங்கையில் வாழும் எண்ணற்ற இந்துக்களின் துயரம் இன்னும் முற்றுப் பெறவில்லை" என்று தனது உரையில் சி.வி. விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்... 800 வருடங்களுக்குப் பிறகு தில்லியின் ஆட்சிக் கட்டிலில் ஒரு சுயபெருமிதம் மிக்க இந்து அமர்ந்திருக்கிறார் என்று பிரதமர் மோதிக்குப் புகழாரம் சூட்டினார் முதுபெரும் வி.ஹி.ப தலைவர் அசோக் சிங்கல்... உலகம் முழுவதற்கும், ஆத்ம ஞானத்தின், மானுட ஒற்றுமையின் செய்தியை இந்துக்களால் வழங்க முடியும் என்று தலாய் லாமா... [மேலும்..»]

விதைக்கப்பட்ட சகோதரருக்கு வீர வணக்கம்

பாடி சுரேஷ் நல்ல மனிதர், எல்லோருக்கும் உதவும் பண்பாளர். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். சமுதாயப்பணியில் தன்னை முழுமையாக இணைத்துக்கொண்டு பெரும்பங்காற்றியவர். அவரது இழப்பு சமுதாயத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தார், உற்றார் உறவினர்களுக்கு இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது. அன்னாரது ஆன்மா நற்கதி அடைய எல்லா ஊர்களிலும் திருக்கோயில் கோபுரத்தில் மோட்ச தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்ய இந்து முன்னணி பொறுப்பாளர்களையும், பொதுமக்களையும் கேட்டுக்கொள்கிறோம். [மேலும்..»]

தஞ்சை பாஜக வேட்பாளர் மீது கொலைவெறித் தாக்குதல்

நேற்று தமிழ்ப் புத்தாண்டு அன்று தஞ்சை தொகுதி பா.ஜ.க வேட்பாளர் கருப்பு (எ) முருகானந்தம் அவர்கள் தனது ஆதரவாளர்களுடன் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் மல்லிப்பட்டினம் பகுதியில் வாக்கு சேகரிக்க சென்றபோது பயங்கரவாதிகளால் கல்வீசி தாக்கப்பட்டார். இந்த சம்பவம் பற்றிய முழுமையான பின்னணி நாளிதழ்களில் வெளிவரவில்லை... தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குபதிவு செய்ய காவல்துறை மருத்ததால், இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் இஸ்லாமிய பயங்கரவாதிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்ககோரியும், இந்த தாக்குதலின் பின்னணியில் இருக்கும் அரசியல் கட்சிகளின் சதியை கண்டறியக்கோரியும் பா.ஜ.க தொண்டர்கள் சேதுபாவாசத்திரம் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர்.... [மேலும்..»]

பொள்ளாச்சி: இஸ்லாமிய அராஜகத்தை எதிர்கொண்ட இந்துப் பெண்கள்

100 பக்தர்கள் பூவோடு ஏந்தி அலங்கரிப் பட்ட தேரில் அம்மன் வீற்றிருக்க ஊர்வலமாக வந்தனர்.   ஊர்வலத்தில் வந்த பெண்கள்  சாமியான போடப் பட்டிருந்த வீட்டின்  உரிமையாளரிடம் பந்தலை அகற்றக் கோரினர். அவர் ஒரு முஸ்லிம்..   தொழுகையை முடித்து வெளியே வந்த  100க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள்  வீட்டு உரிமையாளருக்கு ஆதரவாகப் பேசினர்..  நள்ளிரவு 12 மணிக்கு  கோவை போலீஸ் சூப்பிரண்டு சம்பவ இடத்திற்கு வந்தார்.. [மேலும்..»]

அமரர் தாணுலிங்க நாடார் சொன்ன கதைகள்

ஐயா தாணுலிங்க நாடார் அவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பொதுக் கூட்டங்களில் பேசும்போது சின்னக் கதைகள் மற்றும் உவமைகள் மூலமாக தனது கருத்துக்களை எடுத்து வைப்பார். அவற்றில் சிலவற்றைக் கீழே தருகிறோம்.... தமிழகத்தில் இந்து எழுச்சிக்கு வித்திட்ட முன்னோடிகளில் தலையாய தலைவர் தாணுலிங்க நாடார் (1915-1988) அவர்கள். தன் வாழ்நாள் இறுதிவரை இந்துமுன்னணியின் தலைவராகப் பணியாற்றி வழிகாட்டியவர். 1957 : நாகர்கோவில் நாடாளுமன்ற உறுப்பினர், 1964 : நாடாளுமன்ற ராஜ்யசபை உறுப்பினர், 1982: இந்து முன்னணித் தலைவராக பொறுப்பேற்றார்.... [மேலும்..»]

ரமேஷ்ஜி – ஒரு முற்றுப் பெறாத சகாப்தம்

சேலம் மாநகர் மக்கள் அனைவரும் கலங்கி நின்ற தினம் ஜூலை 20-ஆம் தேதி. அன்று தான் மிக நல்ல மனிதன் என்று ஒட்டுமொத்த சேலம் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த ஆடிட்டர் ரமேஷ் அவர்களின் பூதஉடல் மயானத்தில் தீ மூட்டப்பட்டது... உடல் பெறப்பட்டதும் சிறு சலசலப்பு - அதுவும் காவல்துறை மனிதாபிமானமற்ற முறையில் செயல்பட்டதால் - முடிந்து உடல் நகர வீதிகள் வழியாக எடுத்துவரப் படுகிறது. மக்களின் கண்களில் தன்னிச்சையாக வழியும் கண்ணீர் அஞ்சலி. கடையடைப்புக்கு எந்த நிர்பந்தமும் இல்லை. சொல்லாமல் சேலம் நகரெங்கும் கடைகள் அடைக்கப் படுகின்றன. கைகள் தொழுகின்றன. கால்கள் தொய்ந்து... [மேலும்..»]

மறக்குமா இந்த மாபாதகங்கள்?: தொடரும் படுகொலைகள்

ஜெயலலிதாவோ கருணாநிதியோ இந்து விரோதிகளும் அல்ல ஆதரவாளர்களும் அல்ல. நம்மிடம் வாக்குவங்கி இருந்தால் நம்மிடம் கைகட்டி சேவகம் செய்வார்கள். நம்மிடம் வாக்குவங்கி இல்லை. தேசவிரோத சக்திகளிடம் அன்னிய மத நச்சுவிரியன்களிடம் அந்த வாக்குவங்கி உள்ளது எனவே தெரிந்தே தேசவிரோத சக்திகளுக்கு வெண்சாமரம் வீசுகிறார்கள். ஆக நம் இழப்புகளுக்கு நம் ஒற்றுமையின்மையே காரணம். இனியாவது நாம் ஒன்றுபடுவோம். காலம் கடந்துவிடவில்லை இன்னும். இப்போதாவது நாம் இணையாவிட்டால், நாளை தெருக்களில் ஜிகாதி குண்டுகளால் சிதறி மடியும் நம் சந்ததிகள் நம்மை சபிப்பார்கள். [மேலும்..»]

ஜூலை-22 தமிழக பந்த்: அழைப்பு விடுக்கிறது பாஜக

தமிழக அரசே ! பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஆடிட்டர் வி.ரமேஷ் அவர்களை 19.7.2013 இரவு படுகொலை செய்த பயங்கரவாதிகளை உடனே கைது செய். 22.7.2013 திங்கள் அன்று படுகொலையை கண்டித்து தமிழகம் முழுவதும் பந்த் நடைபெறும். [மேலும்..»]