Posts Tagged ‘ போராட்டங்கள் ’

குடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு

பாஜகவை எதிர்ப்பதற்காக, பாகிஸ்தானிலும், பங்களாதேஷிலும், ஆப்கானிஸ்தானிலும் மோசமான நிலையில் வாழும் இந்துக்களின் எந்த ஒரு அவலநிலையையும், கிறிஸ்துவர்களின் அவலநிலையையும் பேசக்கூடாது என்று இங்கே ஒரு அறிவுஜீவி வர்க்கம் நினைக்கிறது. இந்துக்கள் பாஸிஸ்டுகள், இந்து மதமே கேவலமானது, இந்துக்கள் கொன்றொழிக்கப்பட்டால் அது நல்லதுதான் என்று அளவுக்கு இவர்களது மனத்தில் இந்து மதத்துக்கும் இந்துக்களுக்கும் எதிரான கடும் வெறுப்பு நச்சாக ஆக்கிரமித்திருக்கிறது... இதன் மூலம் குடியுரிமை பெறப்போகும் மக்களின் எண்ணிக்கை 31313 பேர்கள் மட்டுமே. 2014க்கும் அப்புறம் இந்தியாவுக்குள் வந்த மக்களுக்கு குடியுரிமையை இந்த சட்டம் வழங்கவில்லை. ஏற்கெனவே இங்கே இந்தியாவின் குடிமகன்களாக வாழும் எவருடைய குடியுரிமையையும் இந்த... [மேலும்..»]

ஆசிரியர் போராட்டம் குறித்து சில எண்ணங்கள்

உங்கள் தரப்பின் நியாயம் என்ன? ஓய்வூதிய பிடித்தம் என்னவாயிற்று எனத் தெரியவில்லை என்கிறீர்கள். பள்ளிகளை மூடுவதை தடுக்கிறீர்கள் .. இக்கோரிக்கைகளை நான் சரி என்பேன். நிச்சயம் அரசு இவற்றுக்கு பதில் சொல்ல வேண்டும். ஆனால் நீங்கள் இவற்றை ஒப்புக்கு சப்பாணியாய் வைத்துக்கொண்டு சம்பளஉயர்வு , பழைய ஓய்வூதியம் என்று பாடுகிறீர்கள்... கல்வித் தரம் சரியில்லை எனில் கேள்வி கேளுங்கள் என்கிறீர்கள் சரி….யாரைக் கேட்பது ? இதுவரை பள்ளியின் மோசமான தோல்விகளுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டு பொதுமக்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த தியாக செம்மலான ஆசிரியர்களை காட்டுங்களேன் பார்ப்போம்… [மேலும்..»]

காலா: திரைப்பார்வை

ஒரு கொண்டாட்டமான திரைப்படத்தை மட்டும் அணுகும் நோக்கில் இனி ரஜினியின் படங்களை அணுகமுடியாது. அத்திரைப்படத்தை எடுப்பவர்கள் யார், அவர்களது அரசியல் என்ன என்பதைக்கொண்டே தீர்மானிக்கமுடியும்... மிகத் தெளிவாக தமிழர்களை, ராவணனை ஹிந்துக்களுக்கு எதிரானவர்கள் என்று காட்டுகிறார்கள். அதற்கான காரணமாக ராமனைக் கெட்டவனாகச் சித்திரிக்கிறார்கள். இந்த அரசியலுக்கு அப்படியே தன்னை ஒப்புக்கொடுத்திருக்கிறார் ரஜினி. ஆனால் இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ரஜினி என்றுமே திரைப்படத்தில் எடுப்பார் கைப்பிள்ளைதான்...இப்படத்தில் ரஜினி காவல்துறையை அடிக்கிறார். கொல்லுகிறார். கொல்லத் துணை நிற்கிறார். புரட்சிக்குத் துணை போகிறார். ஒட்டுமொத்த அரசுக்கு எதிரான போராட்டங்களை ஆதரிக்கிறார். ஆனால் நிஜத்தில் ரஜினி இவை அத்தனையும் மறுத்தார்... [மேலும்..»]

டார்கெட் இந்தியா: பிரிவினைவாத அபாயங்கள்

வட கிழக்குப் பகுதி தனது தனித்தன்மையை வன்முறைப் பிரிவினை என்ற அளவுக்குக் கொண்டு சென்றதால் அந்த முயற்சியில் எப்படிப் பரிதாபகரமாகத் தோற்றுவிட்டிருக்கிறது என்பதை 'வடகிழக்கு ஆயுதப் போராளிகளுடன் ஒரு ரகசிய சந்திப்பு" என்ற இந்தப் புத்தகம் தெளிவாக விவரிக்கிறது. இதன் ஆசிரியர் தன் உயிரைப் பணயம் வைத்துச் செய்திருக்கும் பயணம் ஊடகச் செயல்பாடுகளுக்கு ஓர் நல்ல முன்னுதாரணம்... வடகிழக்கு பிரிவினைவாதிகள் அனைவரிடமும் இருக்கும் ஒரே ஒரு குறிக்கோள்: இந்தியாவே நம் எதிரி என்பதுதான். சீன, கிறிஸ்தவ, இஸ்லாமிய, பிராந்திய சக்திகளிடையே இருக்கும் இந்த உள் மோதல்களினால்தான் அவை தோற்றுவிட்டிருக்கின்றன. எனவே இதை இந்திய தேசியத்தின்... [மேலும்..»]

கம்யூனிசமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 9

சந்தோஷம் என்பது பணத்தால் வருவதில்லை. மன அமைதியினால் மட்டுமே பெறக்கூடியது. இது அடிப்படையிலேயே மற்ற நாகரீகங்களிடமிருந்து வித்தியாசப்படும். சந்தோஷம் என்பதை புலன் வழியான சந்தோஷமாகவே பார்க்க பழகின மேற்கத்திய சமூகங்களுக்கு இது புரிய வாய்ப்பில்லை. நம் முன்னோர்கள் கூறிய சந்தோஷம், Contentment (சம்ஸ்கிருதத்தில் சமாதானம்) என்பதை சுட்டும். இந்த மன நிலையை அடைய பணம் அவசியமே இல்லை. மேற்கூறியவையெல்லாம் எனக்குப் புரிந்தவரை அற்புதமான உளவியல் சாதனங்கள். பச்சையாக கூறினால், ஏழைகளை கட்டுக்குள் வைத்திருக்க உபயோகப்பட்ட உளவியல் சாதனங்கள் என்றே நான் புரிந்து கொள்கிறேன். பொதுவுடைமையை முழுமையாக சமூகத்தில் நடைமுறை படுத்த முடியாது என்பதை தெளிவாக உணர்ந்தவர்கள் நம்... [மேலும்..»]

Josh Oliver Authentic Jersey