Posts Tagged ‘ போலி மதச்சார்பின்மை ’

அனுபவம், அரசியல், சூழலியல், விவாதம்

பயங்கொள்ளிப் பார்ப்பானும் பசுவதையும்

பயங்கொள்ளிப் பார்ப்பானும் பசுவதையும்

சமீபத்தில், இதே இரகத்தை சேர்ந்த ஒருவரை, "ஹிந்துக் கடவுள்களை நிந்திப்பதைப்போல் இயேசுவை சொல்லிப் பாரும். உங்களைக் கூலிப்படையாக நடத்தும் வெள்ளைக்காரன் செவுளில் ஒன்று விடுவான்" என்று சவால் விட்டேன். எதிர்பார்த்தவிதமே கௌபீனத்தில் கக்கா போய்விட்டார்... பசுவதை இன்றி பால் அருந்த வழி இருக்கிறது. ஆனால், பசுவதை இன்றி மாட்டிறைச்சி அருந்த வழி இல்லை. இரண்டையும் ஒப்பிடுவது முட்டாள்தனம் மட்டுமில்லை. அயோக்கியத்தனமும் கூட. பசுக்கள் பால் கறப்பதை நிறுத்திவிட்டால் "போஷிக்க விவசாயியால் முடியாது. எனவே சந்தையில் அடிமாடாக விற்க வேண்டி வருகிறது" என்பதும் கள்ளவாதம். பிஷ்ணோய் மக்களால் போஷிக்க முடியுமெனில் மற்றவர்களாலும் முடியும். பேராசை கொண்டவனால் முடியாது... [மேலும்..»]

அரசியல், சமூகம், பிறமதங்கள்

மதச்சார்பின்மை இந்திய தேசப்பாதுகாப்புக்கு ஓர் அச்சுறுத்தல் – துஃபாயில் அகமது

மதச்சார்பின்மை இந்திய தேசப்பாதுகாப்புக்கு ஓர் அச்சுறுத்தல் – துஃபாயில் அகமது

என்னுடைய பேரக்குழந்தைகளின் தலைமுறைக்கு சொல்ல ஒரு விஷயம் என்னிடம் உண்டு. உங்கள் காலத்தில் கேரளா, மேற்கு வங்கம், பிஹார் மற்றும் உத்தர பிரதேசத்தின் பல பகுதிகளிலிருந்து ஹிந்துக்கள் முற்றிலுமாக வெளியேற வேண்டிய நிர்ப்பந்தத்தை மதச்சார்பின்மை உருவாக்கும் - காஷ்மீரீலிருந்து பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்டது போல... ஒரு திருடன் குளித்துவிட்டு சுத்தபத்தமாக பயபக்தியுடன் ராத்திரியில் கோவிலுக்குள் நுழைகிறான். அவனுடைய உண்மையான நோக்கம் கோயிலில் உள்ள தெய்வ விக்ரஹங்களைக் கொள்ளையடிப்பது. காலடித்தடம் கேட்டு திரும்பிப் பார்த்தபோது, வேறொருவன் செருப்புடன் கோவிலுக்குள் நுழைந்ததை காண்கிறான். உடனே திருடன் எச்சரிக்கிறான் - “நான் மட்டும் இப்போது... [மேலும்..»]

அரசியல், புத்தகம், வரலாறு, விவாதம்

கொஞ்சம் தேநீர், கொஞ்சம் ஹிந்துத்துவம்: புத்தக அறிமுகம்

கொஞ்சம் தேநீர், கொஞ்சம் ஹிந்துத்துவம்: புத்தக அறிமுகம்

மாளவியா ஒரு மண்ணுருண்டை, திலகர் ஒரு கொலைகாரர், வீர சாவர்க்கர் ஒரு கோழை, பிரிட்டிஷார் வரவில்லை என்றால் நமக்குக் கல்வி அறிவே இருந்திருக்காது - தமிழ்நாட்டில் இப்படி ஒரு இந்துத்துவ எதிர்ப்பு பிரசாரம் நடந்து வருகிறது. இந்துத்துவ எதிர்ப்பு என்பது எப்போதுமே பாரதத்தின் தேசத் தலைவர்களையும், அதன் மகத்தான பண்பாட்டுக் கூறுகளையும் கொச்சைப்படுத்துவதில், இழிவுபடுத்துவதில் தான் முடிகிறது. ஆனால் உண்மை என்ன? இந்துத்துவத்தின் வரலாற்றுப் பார்வையை முன்வைக்கும் இந்தப் புத்தகம் ஒவ்வொரு தமிழனும் தெரிந்துகொள்ள வேண்டிய சொந்தப் பாரம்பரியம். பொய்யிலிருந்து மெய்மைக்கு அழைத்துச் செல்லும் அரவிந்தன் நீலகண்டன் எழுதியுள்ள இந்தப் புத்தகம், இன்றைய அறிவுச்சூழலில் ஒரு கட்டாயத்... [மேலும்..»]

இலக்கியம், சமூகம், வரலாறு, விவாதம்

பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள்

March 30, 2016
-
பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள்

பாரதியின் மூலப் பிரதியில், சொற்கள் தெளிவாக இருந்த சில இடங்களில் கூட வலிந்து திருத்தங்கள் செய்யப் பட்டு அதிகாரபூர்வமான "அரசாங்கப் பதிப்பு" வெளியிடப்பட்டுள்ளது. "பேய்த்தகை கொண்டோர், பெருமையும் வன்மையும் ஞானமும் அறியா நவைபடு துருக்கர்".. இதில் *நவைபடு துருக்கர்* என்பது, "நவைபுரி பகைவர்" என்று மாற்றப் பட்டிருக்கிறது. வேறோர் இடத்தில் "துருக்கர் ஆண்டழிப்ப" என்பது "துரோகிகள் அழிப்ப" என்று மாற்றப் பட்டிருக்கிறது.. "மேற்படி செய்யுளிலே மகமதியர்களைப் பற்றி வந்திருக்கும் பிரஸ்தாபங்களில் வீரரசத்தை மட்டுமே கவனிக்கவேண்டுமேயல்லாமல், மகமதிய நண்பர்கள் தமது விஷயத்தில் உதாசீனம் இருப்பதாக நினைக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறோம்..." என்று பாரதியே சொல்கிறார். பாரதிக்கு... [மேலும்..»]

அரசியல், சமூகம், தேசிய பிரச்சினைகள், நிகழ்வுகள்

இந்திய ஊடகங்களில் ஊற்றெடுக்கும் பாசிசம் – துஃபாயில் அகமது

November 5, 2015
-
இந்திய ஊடகங்களில் ஊற்றெடுக்கும் பாசிசம் – துஃபாயில் அகமது

ஜனநாயக நாடுகளில், பாசிசம் பழைய பாணியில் இல்லாமல் “கருத்துக்களின் பரவலாக” ஜீவித்துக் கொண்டிருக்கிறது. சர்வாதிகார ஆட்சிமுறை சார்ந்த இயக்கம் என்ற வகையில், தனது தலைவர்கள் ஆட்சியில் இருந்த வரை, இந்தியாவில் பாசிசம் அமைதியாக, சமர்த்தாக இருந்தது. இந்த பாசிச வர்க்கத்தினரால் விரும்பப் படாத ஒரு தலைவரை 2014ல் மக்கள் பெரும் ஆதரவுடன் தேர்ந்தெடுத்த போது, இந்திய சமுதாயத்தில் இருந்த பெர்லின் சுவர் உடைந்து நொறுங்கியது. இன்னும் முழுதாக சுத்தம் செய்யப் படாமல் அதன் இடிபாடுகள் அங்கங்கு விழுந்து கிடக்கின்றன. பழைய கட்சியாலும், வாரிசு அரசியலாலும், கருத்தியலாலும் ஆதாயம் அடைந்த பத்திரிகையாளர்கள் கூச்சலிடுகிறார்கள்... இந்திய அறிவுஜீவிகள் என்பவர்கள், இந்திய... [மேலும்..»]

அரசியல், இலக்கியம், கலைகள், விவாதம்

விருதுகளும் வேடங்களும் – அறிவுஜீவிகளின் அரசியல்

October 13, 2015
-
விருதுகளும் வேடங்களும் – அறிவுஜீவிகளின் அரசியல்

இந்த எழுத்தாளர்கள், தம்மைப் போன்ற இதர கைத்தடி எழுத்தாளர்களுக்கு விருது கொடுப்பது, அடுத்த தலைமுறையிலும் தம்மைப் போலவே ஒத்த "கொள்கையுடைய" நடுவர்களையும் நியமிப்பது என்றுதான் அறுபது எழுபது ஆண்டுகளாக இந்திய அறிவு ஜீவி உலகம் இயங்கி வருகிறது. அதனாலேயே நேரடியாக அரசு தரும் விருதாக இல்லாவிட்டாலும், அரசு தரும் விருதைப் போலவும் தற்போதைய அரசின் மீது அதிருப்தியால் அதைத் திருப்பி தருவதாகவும் ஒரு நாடகத்தை பீகார் தேர்தலுக்கு முன்பாக அரங்கேற்றுகின்றனர்...மோடி ஆட்சியில் எந்தவொரு எழுத்தாளரும் படைப்பாளியும் அச்சுறுத்தப் படவில்லை. எந்தவொரு வலதுசாரி எழுத்தாளர்களும் இன்று வரை எந்தப் பதவிக்கும் தெரிவு செய்யப்படவில்லை. .நரேந்திர மோதி மௌனமாக இதையெல்லாம்... [மேலும்..»]

அரசியல்

தில்லி சட்டசபைத் தேர்தல் – ஒரு அலசல்

தில்லி சட்டசபைத் தேர்தல் – ஒரு அலசல்

திட்டமிட்ட ஒருங்கிணைந்த வெகுஜன மக்கள் தொடர்பை இலக்காகக் கொண்ட தேர்தல் ப்ரசாரம். ஆப்புக்கட்சி இந்த யுக்தியை முழுமையாக தில்லி தேர்தலில் உபயோகித்துள்ளது. பாஜக தரப்பில் இதன் சுவடு கூட காணப்படவில்லை என்பது கசப்பான உண்மை... ஃபோர்டு ஃபவுண்டேஷன், பரங்கிய க்றைஸ்தவ தேவாலயங்கள், இஸ்லாமிய அடிப்படைவாதிகள் போன்றோரின் பணக்குவியல்கள் மற்றும் ஆசீர்வாதப் பின்னணியில் ஹிந்துஸ்தான அரசியல் அரங்கில் மூக்கறுபட்ட போலி மதசார்பின்மையை தாத்காலிகமாக மீட்டெடுத்து ஆட்சியைக் கைப்பற்றியுள்ளார் ஸ்ரீ கேஜ்ரிவால்... உண்மை பாதி உண்மை போன்று காட்சியளிக்கும் பொய் பாதி போன்ற காரணிகள் - லவ் ஜிஹாத், கர்வாப்ஸி, த்ரிலோக்புரி மற்றும் பவானா போன்ற சில... [மேலும்..»]

அரசியல், விவாதம்

இந்தியக் குடியரசும் “மதச்சார்பற்ற, சோஷலிச” அடைமொழிகளும்

இந்தியக் குடியரசும்  “மதச்சார்பற்ற, சோஷலிச” அடைமொழிகளும்

நாடு விடுதலை பெற்ற பின்னர், இந்தியாவிற்கு என ஒரு அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்க டாக்டர் அம்பேத்கார் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்த குழு உருவாக்கிய அரசியல் அமைப்பு சட்டத்தின் முகப்பில் சோசலிஸ்ட், செக்யூலர் என்ற வார்த்தைகள் இடம் பெறவில்லை. இந்த இரண்டு வார்த்தைகளும் 1976-ல் சேர்க்கப்பட்டன. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையில்லாத திருமதி இந்திரா காந்தி, 1975-ல் நாட்டில் அவசர நிலையை அமுல்படுத்தி ஒரு வருடம் கழித்து இந்த திருத்தம் கொண்டு வரப்பட்டது... பல ஷரத்துக்களில் இந்திரா காந்தி அரசுக்கு சர்வாதிகார உரிமைகள் அளிக்கும் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டதை மறைப்பதற்காகவே, அரசியல்... [மேலும்..»]

அரசியல், வரலாறு

மாபெரும் வெற்றியின் மகத்தான விளைவுகள்…

மாபெரும் வெற்றியின் மகத்தான விளைவுகள்…

1984-க்குப் பிறகு இந்திய அரசியலில் நிலவிய குழப்பமான, அரசியல் எண்ணிக்கை விளையாட்டுக்கு வழிவகுத்த சூழல் இத்தேர்தலில் காணாமல் போயிருக்கிறது. அரசின் கொள்கை முடிவுகளில் சிறு கட்சிகள் கூட ஆதிக்கம் செலுத்தும் நிலையையும், பாஜகவின் மகத்தான வெற்றி மாற்றி அமைத்திருக்கிறது.... மக்களிடம் காங்கிரஸுக்கு எதிராக பிரசாரம் செய்து வென்று, பிறகு மக்கள் முதுகில் குத்துவது போல காங்கிரஸை ஆதரித்துவந்த பல கட்சிகளுக்கும் இத்தேர்தல் ஆப்பு வைத்துவிட்டது... இஸ்லாமியர்களும் கூட குறிப்பிடத்தக்க அளவில் பாஜகவுக்கும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் வாக்களித்து, தங்கள் மீதான அபவாதத்தைப் போக்கிக் கொண்டிருக்கிறார்கள். சிறுபான்மையினரை தாஜா செய்யும் போக்கிற்கு இத்தேர்தல் முடிவு கண்டிருக்கிறது... [மேலும்..»]

அரசியல், சமூகம், தரவிறக்கம், பொது

இந்துக்களுக்கு இழைக்கப் படும் சட்டபூர்வ அநீதிகள் – தி மெஜாரிடி ரிப்போர்ட்

இந்துக்களுக்கு இழைக்கப் படும் சட்டபூர்வ அநீதிகள் – தி மெஜாரிடி ரிப்போர்ட்

இந்திய அரசியலைப்புச் சட்டம் எல்லா குடிமக்களுக்கும் அடிப்படை சம உரிமைகளையும், வாய்ப்புகளையும் வழங்கியுள்ளது. ஆனால், தொடர்ந்து பல பத்தாண்டுகளாக மத்தியில் ஆட்சி புரிந்து வந்த காங்கிரஸ் கட்சியும் இன்னபிற போலி மதச்சார்பின்மை கட்சிகளும் சிறுபான்மை மதத்தினரை, குறிப்பாக இஸ்லாமியர்களை தாஜா செய்வதற்காக சட்டங்களையும் நெறிமுறைகளையும் ஒடித்து வளைத்து திரித்து வந்துள்ளனர். இந்த பிரசினையின் சில அம்சங்களை விளக்கும் முகமாக தில்லியைச் சேர்ந்த சமர்த் டிரஸ்ட் என்ற அமைப்பு "தி மெஜாரிடி ரிப்போர்ட்" என்ற அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டுள்ளது.... [மேலும்..»]