Posts Tagged ‘ மகாத்மா காந்தி ’

அரசியல், இந்து மத விளக்கங்கள், விவாதம்

காந்தி, கோட்சே, ஹிந்துமதம்: கமல்ஹாசன் கருத்துக்கள் – ஒரு பார்வை

May 21, 2019
-
காந்தி, கோட்சே, ஹிந்துமதம்: கமல்ஹாசன் கருத்துக்கள் – ஒரு பார்வை

துரதிர்ஷ்டவசமாக, தமிழ்நாட்டின் பெரும்பான்மை மக்களுடைய பண்பாட்டு, வரலாற்று அறிவும் கூட கமல்ஹாசன் அளவுக்கோ, அல்லது அதைவிட சிறிதே சற்று மேலாகவோ தான் இருக்கிறது என்று தோன்றுகிறது. அதனால் தான், அவரது கேள்வி அடிப்படையிலேயே அபத்தமானது என்பதைக் கூட அழுத்தமாகக் கூறி அதை நிராகரிக்காமல் அதைவைத்து மாய்ந்து மாய்ந்து முட்டாள்தனமான "விவாதங்களை" நடத்திக் கொண்டிருக்கிறார்கள். விநோதமான மீம்கள் வந்து கொண்டிருக்கின்றன. இது குறித்து ஆதாரபூர்வமான தரவுகளுடன் நான் எழுதிய ஹிந்து என்னும் சொல் என்ற எனது கட்டுரையிலிருந்து ஒரு பகுதியைக் கீழே தருகிறேன்... அதிகாரபூர்வ பாஜக, ஆர் எஸ் எஸ் தரப்புகள் கமலுடைய ஹிந்து மத அவதூறுக்கு கண்டனம்... [மேலும்..»]

வரலாறு, வழிகாட்டிகள்

நேதாஜி: தலைவர்களின் தலைவர்

நேதாஜி: தலைவர்களின் தலைவர்

பகவத்கீதை அவரது வழித்துணையாக இருந்தது. அவரது கைப்பெட்டியில் அது கடைசி வரை இருந்தது. சுதந்திரப் போருக்கு கீதை தூண்டுதலாக இருக்கும் என்று அவர் நம்பினார். அதேபோல, சுவாமி விவேகானந்தரே நாட்டில் எழுந்துள்ள நவ எழுச்சிக்குக் காரணம் என்று அவர் பலமுறை கூறி இருக்கிறார்... நேதாஜியின் வாழ்க்கையே ஒரு போர்க்களம். அவர் வாழ்ந்தது 48 ஆண்டுகள் மட்டுமே. அதற்குள் அவர் நிகழ்த்திய அரசியல் சாதனைகள், வெளிநாட்டுத் தலைவர்களுடனான சந்திப்புகள், போர்முனை சாகசங்கள் உள்ளிட்டவற்றை அறிகையில், அந்த மாபெரும் தலைவனின் பிரமாண்டம் புரிகிறது... [மேலும்..»]

கல்வி, புத்தகம், வரலாறு

அழகிய மரம்: பாரதத்தின் பண்டைய பாரம்பரியக் கல்வி

அழகிய மரம்: பாரதத்தின் பண்டைய பாரம்பரியக் கல்வி

1200 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட சோழர்கால ஐம்பொன் உலோக சிலைகளை பார்க்கும் பொழுது வியப்பாக உள்ளது. ஒன்றிண்டு சிலைகளைத் தவிர , மற்ற எல்லா விக்கிரங்களும் , எந்தக் குறைபாடும் இல்லாமல் (corrosion, erosion, cracks) இன்றளவும் நமது வழிபாட்டில் உள்ளன... இந்தக் கல்வி முறைக்கான நிதி வசதி என்பது (ஆசிரியர் சம்பளம் முதலியன) அந்த கிராமமோ , சமூகமோ , கல்வி கற்கும் மாணவர்களோ ஏற்றுக் கொண்டார்கள் . பிரிட்டிஷ் அரசு எந்த விதமான உதவியும் செய்யவில்லை. ஓரிரு இடங்களைத் தவிர, அனைத்து இடங்களிலும் சூத்திரர் சாதி எண்ணிக்கை மாணவர்கள்தான், மற்ற அனைத்து சாதி எண்ணிக்கை... [மேலும்..»]

அரசியல், வரலாறு

கம்யூனிஸ்டுகளின் கயமை: காந்தி-ஜோஷி கடிதங்கள்

கம்யூனிஸ்டுகளின் கயமை: காந்தி-ஜோஷி கடிதங்கள்

தினசரி வன்முறை நாடகங்களை மாணவர்களை வைத்து கம்யூனிஸ்ட் கட்சி போடுகிறது. அதில் ரத்தம் தோய்ந்த கைகளை வைத்துக்கொண்டும் சுடுவது போன்றும் காட்சிகளை அரங்கேற்றுகிறார்கள். காந்தி இந்தியாவின் ரஸ்புடின் என்று உங்களை குற்றம் சாட்டுகிறார்கள். பன்னெடுங்காலமாக சாத்வீக உணவை உண்டு வரும் பிராமண மற்றும் வைஸ்ய மாணவர்களை கட்டாயமாக மாமிச உணவு உண்ண வைக்கிறார்கள். கட்டற்ற பாலுறவு என்பது தான் அவர்கள் கொள்கை. ஒரு தார மணம் பற்றி கடுமையாக தூற்றுகிறார்கள். இதை தவிர தடி கொண்டு தங்கள் அரசியல் எதிரிகளை தாக்குகிறார்கள். வாய்ப்பிருந்தால் அவர்களையும் விடுதலை வீரர்களையும் பிரிட்டிஷ் காவல்துறையிடம் போட்டு கொடுக்கிறார்கள்.... ஜோஷியின் பதில்களை காந்தி... [மேலும்..»]

அரசியல், வரலாறு, வழிகாட்டிகள்

காந்திஜியும் சியாமா பிரசாத் முகர்ஜியும்

காந்திஜியும்  சியாமா பிரசாத் முகர்ஜியும்

அந்நாளில் ஹிந்து மகாசபையின் தலைவராகவும் பின்னாளில் அதிலிருந்து வேறுபட்டு பாரதிய ஜன சங்கத்தை துவக்கியவராகவும் அறியப்படும் முகர்ஜி, ராஜாஜியின் இந்த திட்டத்தை கடுமையாக எதிர்த்தார். “உங்களுடைய உடல்நிலையை கவனியுங்கள். நீங்கள் ஒரு வேலையில் ஆழ்ந்துவிட்டால் அதனை முடிக்காமல் ஓயமாட்டீர்கள் என்பது தெரியும். உங்களுடைய பலமும் பலவீனமும் அது தான். நல்ல ஓய்விற்கு பிறகு மீண்டும் உங்கள் பணியை துவக்குவீர்கள் என்று நம்புகிறேன்”... காந்தியின் இந்த கடிதங்கள் முகர்ஜி அவர் மேல் செலுத்திய ஆதிக்கத்தையும் காந்தி முகர்ஜி மேல் கொண்டிருந்த அன்பையும் விளக்குகின்றன.... [மேலும்..»]

கல்வி, புத்தகம், வரலாறு

அழகிய மரம் (இந்தியப் பாரம்பரியக் கல்வி) – புத்தக அறிமுகம்

அழகிய மரம் (இந்தியப் பாரம்பரியக் கல்வி) – புத்தக அறிமுகம்

1931-ல், லண்டனில் மகாத்மா காந்திஜி ஓர் உரை நிகழ்த்தினார். அதில், அப்போதைய பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்த கல்வியின் நிலையைவிட, ஐம்பது நூறு ஆண்டுகளுக்கு முன்பாக, இந்தியாவில் கல்வி நிலை ஒப்பீட்டளவில் சிறப்பாக இருந்திருக்கிறது. பிரிட்டிஷார் அமல்படுத்திய நிர்வாக நடைமுறைகள், இந்தியப் பாரம்பரியக் கல்வி என்ற அழகிய மரத்தை வேரோடு பிடுங்கி எறிந்துவிட்டது என்று சொன்னார். காந்திஜியின் அந்தக் கூற்று, 18-19-ம் நூற்றாண்டுகளில் இந்தியாவின் கல்வி தொடர்பான மிகப்பெரிய விவாதக் கதவுகளைத் திறந்துவிட்டது. அந்த விவாதங்கள் மற்றும் அது தொடர்பான தரவுகளின் முழுமையான தொகுப்பே இந்தப் புத்தகம். காந்தியவாதியும் வரலாற்றாசிரியருமான தரம்பால், பிரிட்டிஷாரின் ஆவணங்களின்... [மேலும்..»]

பொது

மால்டாவும் தாத்ரியும்…

மால்டாவும் தாத்ரியும்…

சரித்திரம் என்பது அனுபவங்களின் விளைநிலம். அதன்மீது தான் நாம் நின்று கொண்டிருக்கிறோம். ஆனால் சரித்திரம் தந்த அனுபவங்களிலிருந்து எந்தப் பாடமும் கற்காதவர்கள் தொடர்ந்து துயரங்களையே அறுவடை செய்வர். இதற்கு நமது நாடு மிகச் சரியான உதாரணம். துருக்கி நாட்டில் கலிபா மாற்றப்பட்டதற்காக பாரதத்தில் முஸ்லிம்களால் (1919) நடத்தப்பட்ட கலவரங்களால் நாம் அப்போது பாடம் கற்காததன் விளைவே 1947-இல் நேரடி நடவடிக்கை என்ற பெயரில் பாரத மக்கள் மீது முஸ்லிம் லீக் நடத்திய கொடூரத் தாக்குதலுக்குக் காரணம் ஆனது. அதன் விளைவே பாகிஸ்தான் பிரிவினை. அதன் பிறகும், சுதந்திர இந்தியாவில் பல மதக் கலவரங்களை நாம் தொடர்ந்து சந்தித்து... [மேலும்..»]

அஞ்சலி, ஊடகங்கள், தேசிய பிரச்சினைகள்

ஓர் இதழியல் கனவு…

September 11, 2015
-
ஓர் இதழியல் கனவு…

. ஒரு பத்திரிகை செய்தியுடன் இந்தக் கட்டுரையைத் தொடங்கலாம். முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இறந்தபோது, அவரது உடலை நல்லடக்கம் செவதற்காக குழி தோண்டிக் கொண்டிருந்தார் கணேசன் என்ற தொழிலாளி. கபரிஸ்தானில் குழி தோண்டுவது தான் அவரது தொழில். ஊரெல்லாம் கலாமின் புகழ் பாடிக் கொண்டிருந்தபோது, ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழின் தில்லி பதிப்பில், கலாமின் உடல் நல்லடக்கத்துக்காக குழி தோண்டிய தொழிலாளியின் நேர்காணல் முதல் பக்கத்தில் வெளியாகி இருந்தது. யாரும் அறியாத, அடையாளமற்ற ஒருவரின் நேர்காணல் முக்கியமான நாளிதழில் முதல் பக்கம் வந்தது குறித்து நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? இதே போன்ற ஒரு நிகழ்வு அமெரிக்காவிலும்... [மேலும்..»]

அரசியல், சமூகம், வழிகாட்டிகள்

அம்பேத்கரும் தேசியமும்

அம்பேத்கரும் தேசியமும்

அண்ணல் அம்பேத்கரின் வாழ்க்கை புரட்சியாளர்களுக்கே உரித்த மேடு பள்ளங்கள் நிரம்பியது. அதுபோலவே அவரது கருத்துகளிலும் பலத்த வேறுபாடுகள் காணப்படுகின்றன. இந்தியாவின் கொடிய பழக்கங்களுள் ஒன்றான தீண்டாமையால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டவரான அம்பேத்கரின் உடனடி எதிர்வினை இயல்பு, அவரது கருத்துப் பரிமாற்றங்களில் காணப்படுகிறது. அவரது தேசியம், ஹிந்துத்துவம் தொடர்பான கருத்துகளிலும், அவரது ஆரம்பகால கருத்துகளில் இருக்கும் கோபமும் கடுமையும் பின்னாளில் நிதர்சனத்தை உணர்ந்து கனிந்தவையாக ஆவதைக் காண முடியும். இந்தப் பின்னணியுடன் தான், அம்பேத்கரின் தேசியம் குறித்த பார்வையை அணுக வேண்டும். விடுதலைப் போராட்ட காலத்தில் மகாத்மா காந்தி ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிக்கொண்டிருந்த காலகட்டத்தில் ஆங்கிலேயருக்கு ஆதரவாக அம்பேத்கர்... [மேலும்..»]

அரசியல்

சாக்‌ஷி மஹராஜ் விவகாரம்: நடப்பது என்ன?

சாக்‌ஷி மஹராஜ் விவகாரம்: நடப்பது என்ன?

அண்மைக்காலமாக, பாஜகவில் சில தலைவர்களின் பேச்சுக்கள் சர்ச்சைக்குரியதாகி வருகின்றன. சாக்‌ஷி மஹராஜ், சாத்வி நிரஞ்சன் ஜோதி, யோகி ஆதித்யநாத் போன்ற இரண்டாம் நிலைத் தலைவர்கள் சிலரின் எக்குத்தப்பான பேச்சுக்களால், நரேந்திர மோடியின் வளர்ச்சிக்கான ஆட்சி என்ற பிம்பம் குலைகிறது. சாக்‌ஷி மஹராஜுக்கு பாஜக அளித்துள்ள எச்சரிக்கை நோட்டீஸ், அதன் தீவிரத்தை கட்சி உணர்ந்திருப்பதை வெளிக்காட்டுகிறது. பாரதீய ஜனதா கட்சியின் வேர்கள் ஹிந்துத்துவத்தில் தான் நிலைகொண்டுள்ளன. ஹிந்து என்பதில் பெருமிதமும், தேசிய உணர்வில் தெளிவான கண்ணோட்டமும் தான் பாஜகவின் அடிப்படை. இதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து கிடையாது. ஆனால், ஆட்சியில் இருக்கும்போது பாஜகவின் நிலைப்பாடுகள் தேசத்தின் ஒட்டுமொத்த மக்களையும்... [மேலும்..»]

Josh Oliver Authentic Jersey