Posts Tagged ‘ மகாபாரதம் ’

தர்மக்ஷேத்திரம் – டி.வி. தொடர் விமர்சனம்

இத்தொடரில் என் மனதைத் தொட்ட ஒரு பாத்திரம் ஏகலைவன்.  கட்டைவிரலைக் கேட்டது அறமற்றசெயல் என்று துரோணர்மீது சாட்டப்பட்ட குற்றத்தை மறுதளிக்கிறான் அவன்.  “அவர் என்னைச் சீடனாக ஏற்றுக்கொண்டதால்தானே என்னிடம் குருதட்சிணை கேட்டுப் பெற்றுக்கொண்டார்?  பொன், பொருள் எதுவும் தர இயலாத, வெறும் வேட்டுவனான என்னிடம் நான் தரக்கூடிய ஒன்றைத்தானே கேட்டிருக்கிறார். அப்படிப் பெற்றுக்கொண்டதால்தானே நான் அழியாப் புகழ் பெற்றேன்?  எனவே, எனது குரு குற்றமற்றவர்!” என்னும்போது எனது கண்கள் பனித்துவிட்டன.   [மேலும்..»]

அருட்செல்வப் பேரரசனின் முழுமஹாபாரதச் சிறுகதைகள்

வியாச மகாபாரதத்தை முழுமையாக தமிழில் மொழிபெயர்த்து 2013ம் ஆண்டு முதல் தனது இணையதளத்தில் பதிப்பித்து வரும் செ.அருட்செல்வப் பேரரசன், அண்மையில் மகாபாரதத்தில் உள்ள தனிக்கதைகளை மின்னூல்களாகவும் (E-books) வெளியிட்டிருக்கிறார். இதுவரை உதங்க சபதம், கருடனும் அமுதமும், நாகவேள்வி, நாகர்களும் ஆஸ்திகரும், துஷ்யந்தன் சகுந்தலை, யயாதி ஆகிய நூல்கள் வந்துள்ளன. இவற்றை எளிய வடிவில் கதைகளாக மட்டுமே படித்து அறிந்த வாசகர்களுக்கு, வியாச மகாரபாரத்தில் உள்ளதன் நேரடியான வடிவத்தை வாசிப்பது என்பது முற்றிலும் புதிய அனுபவமாக இருக்கும். இவற்றுக்குக்... [மேலும்..»]

ஆனைமுகனும் தமிழ்ப்பண்பாடும்

விநாயகப் பெருமானின் வழிபாடு அதன் முன்னோடி வடிவில் சங்க காலத்திலேயே தமிழகத்தில் இருந்திருப்பதையும் அதன் உட்பொருளும் சடங்கியல் நோக்கமும் மாறாமல் அது இன்றும் நம் பிள்ளையார் வழிபாட்டில் தொடர்வதையும் நம்மால் காண முடிகிறது... உலகில் எனக்கு தெரிந்து வேறெந்த பண்பாடும் யானையை போல ஒரு பிரம்மாண்ட விலங்கை தன்னகப்படுத்தியதில்லை. அதை செய்த ஒரே பண்பாடு நம்முடையதுதான். யானைக்கு வர்மப்புள்ளிகளைக் கூட கணித்த பண்பாடு கோவில் யானைகளை பராமரிக்க சரிவான தீர்வை அளிக்காதா? அதை செய்யாமல் நம் பண்பாட்டின் உயர் உச்சமொன்றை முழுமையாக ஒழித்துக் கட்டுவதில் ஏன் இவ்வளவு முனைப்பு? யானைகளை கோவில்களில்... [மேலும்..»]

ஹிந்துப் பண்பாடு: நேற்று, இன்று, நாளை…

ஹிந்துப் பண்பாடு: நேற்று, இன்று, நாளை…

எந்த விளக்கமும் அளிக்காவிட்டாலும் சூரியன் தான் உலகின் மைய இயக்கு விசை. அதுபோலவே, விளக்கங்கள் அளிக்கப்படாவிட்டாலும் ஹிந்துப் பண்பாடு மேன்மையானதே. ஆயினும், தொலைக்காட்சியில் தோன்றி முட்டாள்தனமாக வாதிடும் ஹிந்து விரோத அறிவிலிகளுக்காக சில விளக்கங்களை அளிப்பது நமது கடமையாகிறது. அவர்களுக்குப் புரியும் வகையில், ஹிந்துப் பண்பாடு நேற்று எப்படி இருந்தது? இன்று எப்படி இருக்கிறது? நாளை எப்படி இருக்கும் என்று சுருக்கமாகவும், பொட்டில் அடித்தாற்போலவும் சொல்ல வேண்டியிருக்கிறது. இந்தக் கட்டுரையின் நோக்கமும் அதுவே. [மேலும்..»]

நாயினும் கடையேன் நான்.. [சிறுகதை]

“என்ன இது? ஒரு நாய்க்கு இத்தனை பரிவா? என் நகையும், சகாதேவனின் அறிய ஓலைச் சுவடிகளும், அழகன் நகுலனின் ஒப்பனைப் பொருள்களும், விஜயனின் வில்லும், பீமனின் கதையும், உங்கள் ஈட்டியும் வேண்டாதபோது இந்த நாய் வேண்டுமா? இந்த நாயுமா நம்முடன் சொர்க்கத்திற்கு வரவேண்டும்? விட்டுவிட்டு வாருங்கள்!” என்று கத்தினாள் பாஞ்சாலி.... விண்ணவரில் சிறந்தவரே! பந்த பாசத்தத் துறந்து, திட சித்தத்துடன், தன்னலமின்றி எவன் மகாமேரு மலைமேல் எருகிறானோ, அவன் பூத உடலுடன் விண்ணுலகம் புகத் தக்கவன் என்று சாத்திரங்கள் பறைகின்றன. நானோ மனிதன். எனக்கு ஆறாம் அறிவான பகுத்தறிவு இருக்கிறது. எது அறம், எது நெறி... [மேலும்..»]

ஸ்ரீகண்டி – ஜாவா தீவின் நாயகி

அம்பை ஜாவானியப் பெண்களின் ஆதர்ச நாயகி. Wayang Kulit என்ற தோல்பாவைக் கூத்துகளில் கிராமமக்கள் மிகவிரும்பிப் பார்ப்பதும் அவளது கதையைத்தான். ஜாவாவில் குழந்தைகளுக்கு அதுவும் பெண்குழந்தைகளுக்கு மாறுவேடப்போட்டி என்றால் வில்லேந்திய ஸ்ரீகண்டி வேடம்தான் முதல் தேர்வு... ஜாவானிய மஹாபாரதத்தில் ஸ்ரீகண்டியின் முற்பிறவியான அம்பையின் கதையில் பெரிய மாற்றம் இல்லை. வியாசரின் பதிவை ஒட்டிய பாரதக்கதையே. ஆனால் அவள் கொண்ட வெஞ்சினம் மறக்காமல் துருபதன் மகளாய்ப் பிறந்து குருக்ஷேத்திரத்தில் பீஷ்மரை வதைக்கும்வரை ஜாவானிய பாரதம் புதிய பார்வையில் போகும்... விரும்பியவண்ணம் உருவெடுக்கும் ஸ்ரீகண்டியின் ஆண், பெண் வடிவுக்கேற்ப நிமிர்ந்தும், குறுகியும் மடிய வல்ல, பெரும்புகழ் வாய்ந்த அந்த வில்லின்... [மேலும்..»]

மகாபாரத ஆக்கங்கள் – ஒரு பட்டியல்

January 3, 2014
By

உண்மையை ஒத்துக் கொள்வதென்றால் மகாபாரதம் எனக்கு உலகத்தின் தலை சிறந்த இலக்கியம். தர்க்கபூர்வமான, அறிவுபூர்வமான அணுகுமுறைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது அந்த உணர்வு. ஆழ்ந்த பித்து என்றே சொல்லலாம்...மகாபாரதத்தை மூலமாக வைத்து எழுதப்பட்ட புனைவுகள், எடுக்கப்பட்ட திரைப்படங்கள் மீது எனக்கு எப்போதும் ஒரு soft corner உண்டு. அப்படிப்பட்ட எல்லா இலக்கிய/கலை முயற்சிகளையும் ஒரு பட்டியல் போட வேண்டும் என்று எனக்கு ஒரு நீண்ட நாள் ஆசையும் உண்டு. இவை சுருக்கங்களாக இருக்கலாம், இந்திய மொழிகளில் பாரதத்தைக் கொண்டு போகச் செய்த முயற்சிகளாக இருக்கலாம், மறுவாசிப்புகளாக இருக்கலாம், எதுவாக இருந்தாலும் அவற்றை ஒரு பட்டியல் போடும் முயற்சியே இந்தக்... [மேலும்..»]

மஹாபாரதம் கும்பகோணம் பதிப்பு மறு வெளியீடு

தமிழில் மிகச் சிறந்த மொழிபெயர்ப்பாக சொல்லப்படும் மஹாபாரதம் கும்பகோணப் பதிப்பு தற்போது இருப்பில் இல்லை. குறைந்த அளவே அச்சிடப் பட்ட முந்தைய வெளியீட்டின் பிரதிகள் அனைத்தும் ஒரு வருடம் முன்பு விற்றுத் தீர்ந்து விட்டன. இந்தப் பொக்கிஷத்தை இப்போது வாசிக்க விரும்புபவர்கள் புத்தகம் கிடைக்காமல் அல்லல் உறுகின்றனர். இது மிகவும் வருந்தத்தக்க விஷயம். இது தொடர்பாக ஸ்ரீசக்ரா பப்ளிகேஷன் திரு.வெங்கட்ராமன் அவர்களை தொடர்பு கொண்ட போது அவர் குறைந்தது நூறு பேர் முன் வெளியீட்டுத் திட்டத்தில் இணைந்து கொண்டால் கண்டிப்பாக வெளியிடுவதாக சொல்லியிருக்கிறார். இதைத் தங்களுக்குத் தெரிந்த நண்பர்களுக்கும் குழுமங்களுக்கும் தயை கூர்ந்து பரிந்துரைக்கவும். விவரங்கள்... [மேலும்..»]

பாரத தரிசனம்: நெடும்பயண அனுபவம் – 1

கடந்த ஒராண்டில் ஏறத்தாழ 23,500 கிலோ மீட்டருக்கும் மேல் பாரதம் முழுக்க என் பயணம் விரிந்தது. இதன் கலாச்சார வளமையும், நாகரீகமும், தொன்மையும், அறிவு செழித்து பல்கி பெருகி விரிந்த இடங்களையும், இயற்கை அன்னையின் பெருங் கருணையையும், பண்பாட்டு உச்சங்களையும், கவின் கலையின் பிரமிப்புகளையும், வரலாற்றுத் தடங்களையும், தருணங்களையும், மட்டுமின்றி பாரதத்தின் ஒருமித்த பேருருவை கண்டடைந்த பெருமித கணங்களை பதியத் துவங்குகிறேன்.... தமிழ் மொழியின் தோற்றம் வளர்ச்சி பரவல் பற்றி ஆராயும் மானுடவியலாளர்கள், மொழியியல் வல்லுனர்களுக்கு தமிழக கலிங்க உறவுகளும் ஹாத்தி கும்பா கல்வெட்டுகளும் மிகப்பெரிய புதையலாகும்... பெரிய மெளரிய வம்ச சக்ரவர்த்திகளாலேயே... [மேலும்..»]

தீண்டாமை பற்றி பேசுகின்றனவா இந்து மூலநூல்கள்?: ஓர் எதிர்வினை – 1

அண்மையில் எம்.டி. முத்துகுமார சுவாமி எனும் தமிழக அறிவுஜீவி இந்து மூல நூல்கள் நான்கு வர்ணத்தாருக்கு அப்பாற்பட்ட இனக் குழுக்களை தன் மனிதர்களாகவே கருதவில்லை; அவை தீண்டாமை குறித்துப் பேசின என்று கருத்துத் தெரிவித்திருந்தார். இதற்கு சான்றாக, மகாபாரதத்தில் உள்ள அரக்கு மாளிகை சம்பவம், காண்டவ வன அழிப்பு, கடோத்கசன் மரணம் ஆகிய சம்பவங்களைக் குறிப்பிட்டிருந்தார். .. இதனை மறுத்து, உண்மையில் இச்சம்பவங்கள் வியாச பாரதத்தில் சித்தரிக்கப் பட்டுள்ள விதம் என்ன, இவற்றில் உள்ள மானுடவியல், சமூக வரலாற்று பார்வைகள் என்ன என்பதை ஆதாரபூர்வமாக விளக்குவதற்காகவே இந்த எதிர்வினை... [மேலும்..»]

Josh Oliver Authentic Jersey