தமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 3

குலசேகர பாண்டியனுக்கு எதிரான வெற்றிகள் அனைத்திற்கும் சிங்கள தளபதிகளே காரணமாக இருந்தார்கள். இருப்பினும் பாண்டிய அரியணை ஏற்றப்பட்ட வீரபாண்டியன் தனது ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளவும், பாண்டிய பிராந்தியங்களின் மீது அதிகாரம் செலுத்தவும் முடியாதவனாக இருந்தான். குலசேகர பாண்டியன் தனது உறவினர்களான இரண்டு கொங்கர்களின் உதவியைப் பெற்றதாக மஹாவம்சமே கூறுகிறது….

View More தமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 3

தமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 2

வெற்றி பெற்ற சிங்களப்படை பின்னர் மதுரையை நோக்கிச் சென்று அதனைக் கைப்பற்றுகிறது. கொலையுண்ட வீரபாண்டியனின் மகனை பாண்டிய நாட்டுக்கு பொறுப்பாளனாக்குகிறது சிங்களப்படை. அதனைத் தொடர்ந்து, குலசேகர பாண்டியனுக்கு உதவிகள் செய்த பாண்டிய நாட்டுத் தலைவர்கள் சிங்களப்படைகளுக்கு அடிபணிகிறார்கள்.. லங்கபுரவின் மாபெரும் வெற்றியைக் கவுரவிக்கும் பொருட்டு பராக்கிரமபாகுவே நேரில் வந்து அவரை வரவேற்கிறான். இப்படியாக இலைங்கைப் போர் வெற்றிகரமாக முடிந்ததாகக் கூறுகிறது இலங்கை மஹாவம்ச வரலாறு. எனினும், இந்த வரலாறு முழுமையான ஒன்றல்ல. இலங்கையரின் நோக்கில் எழுதப்பட்ட ஒருதலைப்பட்சமான இந்த வரலாறு ஒரு பெரும் காதையைப் போல எழுதப்பட்ட ஒன்று. அதனைக் குறித்து தொடர்ந்து காண்போம்….

View More தமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 2

திருக்கேதீஸ்வரம் கோவிலும், மாந்தோட்டம் துறைமுகமும்

தென்னகத்தின்[தக்காணம்] செல்வச்செழிப்புள்ள இந்துக்கோவில்களைச் சூறையாடிக் கொள்ளையடிப்பதைக் குறிக்கோளாகக்கொண்ட போர்ச்சுகீசியருக்கு இந்துமாக்கடலின் அக்கரையிலுள்ள கன்னியாகுமரி, திருச்செந்தூரைவிட, திருக்கேதீஸ்வரம் எளிதான இரையாகவே அமைந்ததால், அவர்கள் அதில் வெற்றிபெற்றனர். சேதுப்பாலம் மற்றும் இராமேஸ்வரம் கோவிலின் அறங்காவலரான இராமநாதபுரம் சேதுபதியின் வலிமையான பாதுகாப்பே அங்கு அவர்களின் தோல்விக்குக் காரணமாக இருக்கலாம்.
“பொது ஆண்டுக்கு ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்னர் இலங்கைக் கடற்கரையிலிறங்கிய இளவரசன் விஜயன், பல்லாண்டுகளாகச் சிதிலமடைந்து கிடந்த திருக்கேதீஸ்வரம் கோவிலைக் கட்ட ஏற்பாடுசெய்தான்.”

View More திருக்கேதீஸ்வரம் கோவிலும், மாந்தோட்டம் துறைமுகமும்

கதிர்காமப் பண்பாடு – ஒரு காட்சி

கதிர் (ஒளி) காம (அன்பு) நிறைந்த இடம் என்று தமிழ்ச் சொல்லாகக் கொள்வோரும், கதிரு என்ற சிங்களச் சொல்லின் மரூஉ எனக் கொள்வோருமாக, ஆய்வாளர்கள் தமது இனத்துவ அடையாளமாக கதிர்காமத்தைக் காட்ட முயற்சிக்கின்றனர்… 1908 முதலாக தமிழ் இந்துக்கள் தம்மிடம் இக்கோவிலை ஒப்படைக்க வேண்டும் என்று கோரியும், அது சாத்தியமாகவில்லை… பழங்குடிகளான வேடுவர்களுக்கும் முருகன் பேரில் அலாதி பக்தி இருக்கிறது. தங்கள் மாப்பிள்ளைக் கடவுள் என்று போற்றுகிறார்கள்… கதிர்காமத்தில் திரைக்குப் பின் வைத்துப் பூசிக்கப்பெறும் புனித பெட்டி யானையில் உலா வருகிறது. இதனுள் சுப்பிரம்மண்ய யந்திரம் உள்ளது என்று நம்பிக்கை…

View More கதிர்காமப் பண்பாடு – ஒரு காட்சி