Posts Tagged ‘ மங்கையர்க்கரசியார் ’

அடியெடுத்துக் கொடுத்த அம்பலவாணன்

பொன்னம்பலத்துப் பிரகாரத்துக் கீழ்ச் சுவரில் நுணுக்கமாகச் செதுக்கப்பட்டிருக்கும் புடைப்புச் சிற்பங்களைக் கவனிக்கிறார் பாலசுப்பிரமணிய சிவாச்சாரியார்.  சமணர்கள் கழுவேற்றப்பட்டதை காட்டும் சிற்பத்தைக் கண்டதும் அவர் முகம் சற்று சுருங்குகிறது. “சை! இந்தச் சிற்பம் இங்கு இருக்கவேண்டுமா?” என்று அவரையும் அறியாமல் அவரது வாய் முணுமுணுக்கிறது. “என்ன ஓய், சிவாச்சாரியாரே! எந்தச் சிற்பம் இங்கு இருக்கக் கூடாது என்று நீர் அருவருப்பு அடைகிறீர்?” என்ற சேக்கிழார் பெருமானின் குரல் அவரைத் திருப்பிப் பார்க்கச் செய்கிறது. “வணக்கம், சேக்கிழார் பெருமானே! திடுமென்று தாங்கள் இங்கு எப்படி?” என்று இழுக்கிறார் பாலசுப்பிரமணிய சிவாச்சாரியார். “அது இருக்கட்டும், எந்தச் சிற்பம் உம்மை அருவருப்படையச்... [மேலும்..»]

கைகொடுத்த காரிகை: மங்கையர்க்கரசியார்

கைகொடுத்த காரிகை: மங்கையர்க்கரசியார்

ஒருநாடு நீர்வளமும் நில வளமும் நிரம்பப் பெற்றிருந்தால் மட்டும் போதாது. நாட்டில் கலவரங்கள் ஏதும் நிகழாமல் அமைதிப் பூங்காவாகவும் இருக்க வேண்டும். முக்கியமாக மத, இனக் கலவரங்கள் நிகழாமல் இருக்க வேண்டும். நாட்டை ஆளும் மன்னர்கள் இதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஆனால் மன்னனே மதம் மாறி ஒருபக்கமாகச் சாய்ந்தால், நாடு என்னவாகும்? நாட்டில் குழப்பங்கள் எழுவதைத் தடுக்க முடியாது. இதுதான் பாண் டிய நாட்டில் நிகழ்ந்தது. பாண்டிய மன்னன் நின்றசீர் நெடுமாறன் சைவ சமயத்திலிருந்து சமண சமயத்திற்கு மாறி சமணர்களோடு சேர்ந்தான். அரசன் எவ்வழி அவ்வழி மக்கள் என்பதற்கேற்ப,  மக்களும் மன்னனைப் பின்பற்ற ஆரம்பித்தார்கள். ... [மேலும்..»]