
படம் முழுவதும் லிவ் இன் தொடர்பான உறுத்தல்கள், கேள்விகள், சந்தேகங்கள் வந்து கொண்டிருக்கின்றன என்பதைக் கவனிக்க வேண்டும். ஒரு ஆரோக்கியமான விவாதத்தை இதன்மூலம் மணி உருவாக்க எண்ணுகிறார்… சம்பிரதாயமான திருமணங்களோ அல்லது ஒருவரை மட்டுமே காதலித்து கைப்பிடிக்கும் ‘பழைய ஸ்டைல்’ காதல் திருமணங்களோ மோசடியானவை, அவற்றில் உண்மையான அன்பு இருக்காது என்றெல்லாம் இந்தப் படம் சொல்கிறதா என்ன? மணி ரத்னத்தைப் பொறுத்த வரையில், அவரது வழக்கமான பழைய இளமை-காதல்-உறவு ஃபார்முலா ஒரு திறமையான Team மூலம் சரியாக வெளிப்பட்டிருக்கிறது என்பதைத் தாண்டி இது எந்த விதத்திலும் வித்தியாசமான படம் அல்ல…