
ஐயா தாணுலிங்க நாடார் அவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பொதுக் கூட்டங்களில் பேசும்போது சின்னக் கதைகள் மற்றும் உவமைகள் மூலமாக தனது கருத்துக்களை எடுத்து வைப்பார். அவற்றில் சிலவற்றைக் கீழே தருகிறோம்…. தமிழகத்தில் இந்து எழுச்சிக்கு வித்திட்ட முன்னோடிகளில் தலையாய தலைவர் தாணுலிங்க நாடார் (1915-1988) அவர்கள். தன் வாழ்நாள் இறுதிவரை இந்துமுன்னணியின் தலைவராகப் பணியாற்றி வழிகாட்டியவர். 1957 : நாகர்கோவில் நாடாளுமன்ற உறுப்பினர், 1964 : நாடாளுமன்ற ராஜ்யசபை உறுப்பினர், 1982: இந்து முன்னணித் தலைவராக பொறுப்பேற்றார்….