வரலாற்று வாசகங்களை சொல்லிய வாசற்படிகள்

அமெரிக்காவின் சிக்காகோ நகரிலுள்ள சிக்காகோ ஆர்ட் இன்ஸ்டியூட் உலகின் மிக பெரிய கலைக்கூடங்களில் ஒன்று. 1893ல் சுவாமி விவேகானந்தர் “அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே என்ற வரலாற்று சிறப்பு வாய்ந்த சொற்பொழிவை நிகழ்த்தியது இந்த இடத்தில் தான்… முதல் படியில் துவங்கும் முதல் வரியின் வார்த்தைகளை படித்து கொண்டே ஏறும் நாம் இரண்டாம் தளம் அடையும் போது முழு உரையையும் படித்து முடிக்கிறோம்… “அந்தக் கொடிய அரக்கத்தனமான செயல்கள் இல்லாதிருந்தால் மனித சமுதாயம் இன்றிருப்பதை விடப் பலமடங்கு உயர்நிலை எய்தியிருக்கும்…”

View More வரலாற்று வாசகங்களை சொல்லிய வாசற்படிகள்

திக்விஜய் சிங்கின் சமீபத்திய உளறல்கள்

உச்ச நீதி மன்றத்தையும், காங்கிரஸ் அரசில் உள்ள மத்திய புலனாய்வு துறையின் மீதும் குற்றம் சுமத்தும் விதமாக பேசிய திக்விஜய் சிங் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை ! ஹேமந்த கார்கரேவை சுட்டது இந்து இயக்கங்கள் என ஒரு அபாண்டமான பொய்யை அப்போது திக்விஜய்சிங் எடுத்து விட்டார். திருமதி ஹேமந்த கார்கரே இந்த கூற்றை முற்றிலும் மறுத்தது மட்டுமில்லாமல், திக்விஜய் சிங் தனது கணவரின் மரணத்தை வைத்து காங்கிரஸ் கட்சிக்கு அரசியல் ஆதாயம் தேடுவதாக குற்றம் சுமத்தினார்…

View More திக்விஜய் சிங்கின் சமீபத்திய உளறல்கள்

வந்தே மாதரம் – தோற்றமும் இன்றைய பின்னடைவும்

இஸ்லாத்துக்கு எதிரானது என்ற இந்த ஆயுதம் அவ்வப்போது முஸ்லீம் மதத் தலைமைகள், அரசியல் தலைமைகள் தம் அதிகார பலத்துக்காக, பயன்படுத்துவது தான். இந்தியாவின் சமீப கால சரித்திரத்தில் இது முதலில் எழுந்தது 1923-ல். இதிலிருந்து அவ்வப்போது சில முஸ்லீம் தலைமைகள் வந்தேமாதரம் பாடலைச் சாக்கிட்டும் சில முஸ்லீம் அறிஞர்கள் அதை மறுத்தும் வந்திருக்கின்றனர். ஆனால் கையோங்கியது, குரல் ஓங்கியது வந்தேமாதரம் பாடல் இஸ்லாத்துக்கு எதிரானது என்ற குரலே.

View More வந்தே மாதரம் – தோற்றமும் இன்றைய பின்னடைவும்

லஷ்கர்-ஏ-தொய்பாவும் காங்கிரசின் குள்ளநரித்தனமும்

பாகிஸ்தானில் உள்ள அனைத்து மசூதிகளிலும் பூட்டு போட்ட சிறிய, பெரிய பெட்டிகள் வாசலில் வைக்கப்பட்டன. தொழுகை முடிந்து வீட்டிற்கு திரும்பும் போது வெளியில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் பணத்தை போடுவார்கள். தங்களது பயங்கரவாத பணிகளுக்கு பணம் திரட்டும் வழி முறைகளில் இதுவும் ஒன்றாகும்… லஷ்கர்-இ-தொய்பாவினர் இந்தியாவில் தாக்குதல் நடத்துவதற்கு அனைத்துவிதமான உதவிகளை செய்தவர்கள் சிமி இயக்கத்தினர்.

View More லஷ்கர்-ஏ-தொய்பாவும் காங்கிரசின் குள்ளநரித்தனமும்

மிதவாத முஸ்லீம்கள் எங்கே? – 2

ஆப்கானிஸ்தானில் புதிய அரசியல் அமைப்பு சட்டம் வடிவமைக்கப்படும் போது ஒரு சட்டம் சேர்க்கப்பட்டது. அதாவது ஒரு கணவன் தன் மனைவியை உடலுறவுக்காக மூன்று நாள் அழைத்தும் அவள் உடன்பட மறுத்தால் அவளுக்கு உணவு கொடுக்காமல் அவளை வழிக்கு கொண்டு வரக் கணவனுக்கு சட்டப்படி உரிமை உண்டு என்பது சட்ட மூலம்…

View More மிதவாத முஸ்லீம்கள் எங்கே? – 2

உலக சகோதரத்துவ தினமாக 9/11 (செப்-11)…

ஆண்டாண்டு தோறும் அமெரிக்க மக்கள் நியூ யார்க் நகர நிர்வாகத்தின் முன்னெடுப்போடு, இந்த தினத்தை ஒரு துக்க தினமாகக் கடைப்பிடிக்கிறார்கள்… அவர்களுடைய துயரங்களைப் புரிந்துகொள்ளும், பகிர்ந்து கொள்ளும் அதே வேளையில், சில விதமான நிகழ்வுகளை ஆண்டாண்டு தோறும் துக்க தினமாக நினைவு கொள்வது விவேகம் அல்ல.. செப்டம்பர் 11 ஆம் தேதியை உலக சகோதரத்துவ தினமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நான் 2005 ஆம் ஆண்டு ஐ.நா. நிறுவனத்துக்கு அனுப்பினேன்…

View More உலக சகோதரத்துவ தினமாக 9/11 (செப்-11)…

ஒரு கண்ணுக்கு வெண்ணெய்; மறு கண்ணுக்கு…?

ஆயிரம் குற்றவாளிகள் தப்பினாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது’ என்பதே குற்றவியல் சட்டத்தின் மகிமை. நமது நாட்டிலோ, குற்றம் செய்தவர்களுக்கு முதல்மரியாதை. மதானியை கைது செய்ய எட்டு நாட்கள் காத்திருந்த அதே காவல்துறை தான், பிரக்யா சிங் தாகுரை கைது செய்து 13 நாட்கள் தகவல் தெரிவிக்காமல் மறைத்தது… காவல்துறையினர் வழக்கை சரியாக நிர்வகிக்காததால், சாட்சியமில்லை என்று கூறி அந்த வழக்கில் இருந்து மதானி விடுவிக்கப்பட்டார். அதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய தமிழக அரசு ஆர்வம் காட்டவில்லை…

View More ஒரு கண்ணுக்கு வெண்ணெய்; மறு கண்ணுக்கு…?

”காவி” தீவிரவாதமா அல்லது ப.சிதம்பரத்தின் நிறக்குருட்டு பாதிப்பா?

ப.சி.யின் பேச்சு நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்திவிட்டதை உணர்ந்த காங்கிரஸ் கட்சி தற்காப்பு ஆட்டத்திற்கு தயாரானது… நக்சல் பாதிப்பு பகுதிகளில் “சிவப்பு” பயங்கரவாதத்திற்கு கிறிஸ்தவ அமைப்புகள் உதவுவதை சிவப்பு- வெள்ளை பயங்கரவாதம் என்று கூறுவீர்களா?… உண்மைக் குற்றவாளிகள் எந்த அச்சமும் இன்றி வெளியில் சுதந்திரமாக உலா வருகின்றனர். அவர்கள் காங்கிரஸ் கட்சிக் கூட்டங்களில் முழங்கவும் துவங்கிவிட்டனர்…

View More ”காவி” தீவிரவாதமா அல்லது ப.சிதம்பரத்தின் நிறக்குருட்டு பாதிப்பா?

எலீ வீஸல் [Elie Wiesel] – நாஜி சிறைமுகாமிலிருந்து ஒரு சமாதானத் தூதுவர்

தங்களை வதைத்தவர்களைப் பழிவாங்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றவில்லை என்கிறார் வீஸல். பழிவாங்குதல் வெறுப்பில் பிறக்கிறது. வெறுப்பு அதைக் கைக்கொள்பவரையும் அழிக்கிறது. அது ஓர் அழிவு சக்தி. அது மரணத்திற்கே எப்போதும் சேவை செய்கிறது. அதன் காரணமாகவே வீஸல் மரணதண்டனையையும்….

“ஆனால் சகிப்புத்தன்மையற்றவர்களிடம் சகிப்புத் தன்மையோடு இருக்க என்னால் இயலாது, சகிப்பின்மை என்பது அடிப்படைவாதிகள், வெறியர்களுக்கு மட்டுமே எப்போதும் சேவை செய்து வருவது…”

View More எலீ வீஸல் [Elie Wiesel] – நாஜி சிறைமுகாமிலிருந்து ஒரு சமாதானத் தூதுவர்