Posts Tagged ‘ மதம் ’

ஆன்மிகம், கதைகள், சமூகம்

சுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 5

சுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 5

ஆக நம் நாட்டில் இரண்டுவகையான சுவாமிஜிக்கள் இருக்கிறார்கள். ஒன்று: தவறு செய்பவர்கள். இன்னொன்று தவறு செய்ததாக அவதூறு செய்யப்படுபவர்கள். நிஜத்தில் இரண்டு வகை சுவாமிஜிக்களுமே தோற்றவர்களாக இருக்கின்றார்கள். நமது கதாநாயகர் அடிப்படையில் நல்லவர் மட்டுமல்ல, அவருக்கு இழைக்கப்படும் அவதூறுகளையும் தீமைகளையும் வென்றுகாட்டக்கூடியவரும் கூட... ... நாம் லௌகிக இன்பத்தில் திளைக்க துறவிகளைக் காயடிக்கவேண்டுமா என்ன..? அவர்கள் நமக்குத் தரும் மன நிறைவுக்கும் வழிகாட்டுதலுக்கும் இன்ன பிற உதவிகளுக்கும் நாம் காட்டும் நன்றி விசுவாசம் என்பது இதுதானா? துறவிகள் திருமணம் செய்துகொள்ள அனுமதிப்போம். அந்தக் காலத்தில் ரிஷியும் ரிஷி பத்தினியுமாக வாழ்ந்ததில்லையா அதுபோல் வாழ அனுமதிப்போம் என்று சொல்கிறார்கள்...... [மேலும்..»]

ஆன்மிகம், கதைகள், சமூகம்

சுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 4

சுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 4

கோவிலைச் சுற்றி வசிப்பவர்கள் வீட்டில் யாருக்கேனும் உடல் நிலை சரியில்லாமல் இருந்தால் கோவில் சார்பில் பூஜாரியும் வேறு சில பக்தர்களும் சேர்ந்து நோய்வாய்ப்பட்டவர் வீட்டுக்குச் சென்று விரைவில் உடல் நலம் பெற பிரார்த்தனை செய்கிறார்கள். கோவிலுக்கு அருகில் மருத்துவமனைகள் இருந்தால் அங்கும் சென்று பிரார்த்தனை செய்கிறார்கள். பக்தர்கள் தமது நேர்ச்சையின் ஓர் அங்கமாக கோவில்களில் சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, பொங்கல் போன்றவற்றைத் தருவதுபோல் அக்கம் பக்கத்து குழந்தைகளுக்கு அவரவர் வகுப்புக்கான பாட புத்தகங்கள், சிடிக்களை வாங்கித் தரலாம் என்று சுவாமி அம்பேத்கர் சொல்கிறார்... கோவில்கள் என்பவை கலப்புத் திருமணம் செய்துகொள்ள விரும்புபவர்களுக்கு அடைக்கலம் தரும் பாதுகாப்பு மையமாகத்... [மேலும்..»]

ஆன்மிகம், கதைகள், சமூகம்

சுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 3

சுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 3

அந்த ஆரம்ப சுகாதார மையத்தின் திறப்பு விழாவுக்கு சுவாமி அம்பேத்கரை அழைக்காமல் எம்.எல்.ஏ.வே வந்து திறந்துவைக்க முடிவெடுக்கிறார். ஆனால், திறப்பு விழா அன்று ஒட்டு மொத்த கிராமமும் எம்.எல்.ஏ.வை எதிர்த்து நிற்கிறது. சுவாமி அம்பேத்கர்தான் வந்து திறக்கவேண்டும் என்று குரல் எழுப்புகிறார்கள். எம்.எல்.ஏ. அதற்கு மறுப்பு தெரிவித்ததும் ஒட்டு மொத்த கிராமத்தினரும் அந்த விழாவைப் புறக்கணிக்கின்றனர். எம்.எல்.ஏ.வுக்கு பெருத்த அவமானமாகப் போகிறது... கோவிலில் கருவறைக்குள் சென்று வழிபடவேண்டும் என்று விரும்புபவர்கள் முன்கூட்டியே தமது பெயரை பதிவு செய்துகொள்ளவேண்டும். அவர்களுக்கு அனுமதி கிடைக்கும் நாளில் காலையில் கோவிலுக்கு வந்து கோவில் குளத்தில் குளித்து சிறிய யாகம் செய்து சமஷ்டி... [மேலும்..»]

கதைகள், சமூகம்

சுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 2

சுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 2

ஆற்று நீரைக் குடித்துவிட்டுப் படுத்துக் கிடக்கும் நந்தனாரை ஒரு விவசாயி தனது வீட்டுக்கு வந்து உணவருந்தும்படி அழைக்கிறார். "அது சரிதான். ஆனா ஒரு மனுஷனை நேசிக்க எதுவுமே தடையா இருக்கக்கூடாது... இப்போ நான் ஒரு பறையனா இருந்தா என்ன செய்வீங்க"...பரிமாறுபவர் சட்டென்று நிறுத்திவிட்டு, "எழுந்திரிச்சு வெளிய போடான்னு சொல்லுவேன்". பரதேசிக்குத் தூக்கிவாரிப்போடுகிறது... "உங்களுக்குத் தனிச் சுடுகாடு, அவங்களுக்குத் தனி சர்ச்சுன்னு எத்தனை இடத்துல இருக்கு. உங்க அனுபவமே இருக்குமே. உங்களை உங்க சபையில எப்படி நடத்தறாங்க?" தலித் பாதிரியார் கொஞ்சம் மென்று முழுங்குகிறார். "தப்புச் செய்யற குழந்தைகளை தாய் மன்னிச்சு ஏத்துக்க எப்பவுமே தயாரா இருப்பா... அது... [மேலும்..»]

கதைகள்

சுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 1

சுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 1

இருளுக்குப் பழகிய கண்களும் நாற்றத்துக்குப் பழகிய நாசிகளும் கொண்டவர்கள் தத்தமது வளைகளுக்குள் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தனர். ஒளிக்கு ஏங்கிய கண்களும் தூய காற்றுக்கு ஏங்கிய நாசியும் கொண்ட நந்தன் ஊரைவிட உயரமாக, ஊரிலிருந்து சற்றே தொலைவில் இருந்த மலைக் கோவிலில் இருந்து தெரிந்த மெல்லிய பொன்னிற ஒளிப் புள்ளியை பார்த்தபடி நடக்கத் தொடங்கினான்... ஆச்சி வெளியே வந்து அரிசியைக் கொடுக்க முற்படுகிறார். நந்தனார் ஏந்திய திருவோட்டை மூடியபடியே, இன்று நான் பட்டினி கிடக்கவேண்டும் என்பது உங்கள் மருமகளின் விருப்பம் போலிருக்கிறது என்று சொல்லிச் சிரித்தபடியே வந்த வழியே திரும்புகிறார். ஆச்சி பின்னால் ஓடி வந்தபடியே கெஞ்சுகிறார். சாமி... [மேலும்..»]

பிறமதங்கள், வரலாறு

வன்முறையே வரலாறாய்… – 12

February 25, 2014
-
வன்முறையே வரலாறாய்… – 12

அவுரங்கசீப்பின் வாழ்க்கைக் குறிப்பைச் சொல்லும் மா-அசிர்-இ ஆலம்கிரி, 1669-ஆம் வருடக் குறிப்பொன்றில், "முட்டாள் பிராமணர்கள் தங்களுடைய கேவலமான புத்தகங்களை பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு - இந்து மற்றும் முஸ்லிம்களுக்கு - சொல்லித் தருகிறார்கள். அவர்களிடம் படிக்க தூர, தூரப் பிரதேசங்களிலிருந்தெல்லாம் மாணவர்கள் இவர்களின் கேவலமான அறிவியலைப் படிக்க வருவதாக அவுரங்கசீப்பிற்குத் தெரியவந்தது. இதனால் கடும் சினம் கொண்ட அவுரங்கசீப், எந்தவிதமான இரக்கமும் காட்டாமல் காஃபிர்களின் கோவில்களையும், அவர்களின் பள்ளிகளையும் தயக்கமின்றி இடித்துத் தள்ளும்படி அவரது ஆட்சியின் கீழிருந்த அத்தனை உயர் அதிகாரிகளுக்கும் (கவர்னர்கள்) உத்தரவிட்டதுடன், இனி ஒருபோதும் காஃபிர்கள் தங்களின் வேதங்களை ஓதுவதையும், ஆலயங்களில் பிரார்த்தனை செய்வதையும்... [மேலும்..»]

பிறமதங்கள், வரலாறு

வன்முறையே வரலாறாய்… – 11

February 22, 2014
-
வன்முறையே வரலாறாய்… – 11

இந்தியாவை வந்தடைந்த சூஃபிக்கள் இவர்களிடமிருந்து மிகவும் வேறுபட்டவர்கள். பெரும்பாலான இந்திய சூஃபிக்கள், இந்து காஃபிர்களுக்கு எதிராக ஜிகாத் செய்யவதற்காக இந்தியா வந்தவர்கள். வேறு சில இந்திய சூஃபிக்களோ தாங்களை இறை தூதர்களாக அழைத்துக் கொண்டவர்கள். அதன் காரணமாக இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் கொல்லவும் பட்டவர்கள். காலம் செல்லச் செல்ல ஜிகாதிப் போர்கள் குறைந்தன. எனவே ஜிகாதினை தங்கள் வழியாகத் தேர்ந்தெடுத்தவர்கள் (காஜிக்கள்) துறவிகளைப் போல அலைந்து திரிந்தார்கள். அல்லாவின் சுவனத்திற்குச் செல்ல எளீய நுழைவுச் சீட்டான ஜிகாது செய்யும் வாய்ப்பினைத் தேடியலைந்த பல முஸ்லிம்களும் இவர்களுடன் தங்களை இணைத்துக் கொண்டார்கள். காஜிக்கள் அல்லது முராபத்கள் என்று... [மேலும்..»]

பிறமதங்கள், பொது, வரலாறு

வன்முறையே வரலாறாய்… – 2

November 9, 2013
-
வன்முறையே வரலாறாய்… – 2

இந்திய ஹிந்துக்கள் ஒருபோதும் இஸ்லாமிய மதத்தின் மீது எந்தவிதமான மதிப்போ அல்லது மரியாதையோ உடையவர்களாக இருந்ததில்லை என்பதனையே காட்டுகிறது. தங்களால் இயன்ற அளவிற்கு இஸ்லாமிய மதத்திலிருந்து வெளியேறி ஹிந்துக்களாக மாறவே அவர்கள் பெருவிருப்பம் கொண்டிருந்தனர். இடைக்கிடையே மதவெறி குறைந்த இஸ்லாமிய ஆட்சியாளர்கள் வருகையில், இஸ்லாம் இந்தியாவில் தாழ்ந்தும், ஹிந்துமதம் மேலோங்கியும் இருப்பதையே வரலாற்றின் பக்கங்களில் காணலாம். இந்த உண்மை இஸ்லாமிய வரலாற்றாசிரியர்களாலேயே கூட கசப்புடன் ஒப்புக் கொள்ளப்படுவதனையும் காணலாம். "காஷ்மீரில் நடந்த கட்டாய மதமாற்றங்கள் காரணமாக ஏறக்குறைய 95 சதவீத ஹிந்துக்கள் இஸ்லாமியர்களாக மதமாற்றம் செய்யப்பட்டனர். இருப்பினும் அவர்கள் தங்களின் பழைய ஹிந்து மத பழக்க வழக்கங்களையே... [மேலும்..»]

பிறமதங்கள், வரலாறு

வன்முறையே வரலாறாய்… – 1

October 28, 2013
-
வன்முறையே வரலாறாய்… – 1

“அமைதி மார்கமென” அறியப்படுகிற இஸ்லாம் பரவியது அமைதிவழியிலா அல்லது வாள் முனையிலா என்பது என்றும் நிலவும் ஒரு விவாதக் கருப்பொருள். M.A. Khan அவர்கள் இஸ்லாம் பரவியது வாள் முனையிலேயே என்று தகுந்த ஆதாரங்களுடன் நிருபிப்பதுடன், கலாச்சாரத்திலும், கல்வியிலும், செல்வத்திலும் மிக, மிக முன்னேறி இருந்த இந்தியா போன்ற நாடுகள் எவ்வாறு இஸ்லாமியர்களால் சின்னாபின்னப்படுத்தப்பட்டன், படுத்தப்பட்டுக் கொண்டிருகின்றன என்பதனைவும் மிக விளக்கமாக அவரது புத்தகத்தில் எடுத்துரைக்கிறார். இஸ்லாமிய ஆக்கிரமிப்புகளின் போது, இந்திய மக்கள் மிக மிக அபூர்வமாகவே, விருப்பத்துடன் தங்களை இஸ்லாமியர்களுடன் இணைத்துக் கொண்டார்கள் என்பதே உண்மை. தொடர்ந்து ஹிந்து ஆண்கள் போரிட்டு மடிய, அவர்களின்... [மேலும்..»]

அறிவியல், இந்து மத மேன்மை, பொது

இந்திய பாரம்பரிய அறிவியல்

இந்திய பாரம்பரிய அறிவியல்

இந்தியாவில் எல்லாம் இருந்தது என்று சொல்லாதீர்கள், இந்தியாவில் ஒன்றுமே இல்லையென்றும் சொல்லாதீர்கள்.ஒரு நாகரிகம் எல்லாவற்றையும் கண்டுபிடித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.உண்மையிலேயே இங்கே என்ன இருந்தது என்று தெரிந்துகொண்டு அதை மட்டும் சொல்லுங்கள்!... நமது ரிஷிகள் தெளிவாகவே இவை அனைத்தும் வெறும் செவிவழிச் செய்தியல்ல, உலக நன்மைக்காக அனுபவத்தாலும், பயனை திரும்பத்திரும்ப பரீட்சித்துப் பார்த்தும், முறையாக வளர்த்தெடுக்கப்பட்ட அறிவு என்று தெரிவிக்கிறார்கள்... வெவ்வேறு சொற்களைக் கொண்டு எண்களைக் குறிப்பது சுலபம். கூடுதலாக கவியுணர்வும், அழகியல் உணர்வும் இருக்கும். படித்து மனனம் செய்யவும் ஏதுவாக இருக்கும்... [மேலும்..»]