மதுரைக் கலம்பகம் — 2

உமாதேவியுடன் வீற்றிருக்கும் பொழுது, குழலினும் யாழினும் இனிய மழலைமொழி பேசும் முருகனை மடியிலிருத்தி உள்ளம் பூரிக்க உச்சி முகந்து அணைத்துக் கொஞ்சுகிறீர்கள். உலகையெல்லாம் பெற்ற உங்களுக்கு உலகமக்கள் எல்லோருமே குழந்தைகள்தானே? அப்படியிருக்க முருகனை மட்டும் மடியிலிருத்திக் கொஞ்சுவது பட்சபாதம் அல்லவா?

View More மதுரைக் கலம்பகம் — 2

மதுரைக் கலம்பகம் — 1

ஐயன், மற்ற இடங்களில் தூக்கிய இடது திருவடியை வெள்ளியம்பலமாகிய மதுரையில் ஊன்றி கால்மாறி ஆடுகிறார். வீடுகள்தோறும் பிச்சைவாங்கப் பிச்சனைப்போல் செல்கிறார். அவருடைய கடைக்கண் பார்வையில் மன்மதன் எரிந்து சாம்பலானான். அவர் சிரிப்போ முப்புரங்களையும் எரித்தது. காபாலி என்று பெயர் கொண்ட அவர் கையில் சூலம் ஏந்தியிருக்கிறார்.

பிச்சியாரும் சிவவேடங் கொண்டு வீடுதோறும் பிச்சையெடுக்கிறார். இவரும் கால்மாற்றி ஆடுகிறார். இவருடைய கண்பார்வையும், புன்சிரிப்பும் மற்றவர்களைக் கொல்லாமல் கொல்கிறது. பிச்சியாரும் கையில் சூலம்தாங்கிச் செல்கிறார் .இருவருக்கும் பல ஒற்றுமைகள் இருப்பது கண்கூடு. சிவபெருமானுக்குப் பிச்சன் என்று பெயர் இருப்பதால் இவருக்குப் பிச்சியார் என்று பெயர் வழங்குவது பொருத்தமே

View More மதுரைக் கலம்பகம் — 1