Posts Tagged ‘ மதுரை ’

இலக்கியம், தொடர்

வஞ்சி மாநகர் புக்க காதை — மணிமேகலை 27

வஞ்சி மாநகர் புக்க காதை — மணிமேகலை 27

“மணிமேகலா! இது தொன்மையான ஊர். பல்வேறு சமய அறிஞர்கள் நிறைய இருப்பார்கள். உன்னை வாதத்திற்கு அழைப்பார்கள். அவர்கள் கூறுவதைச் செவிமடுத்துக் கேட்டுக்கொள். அனைத்தையும் உள்வாங்கிக்கொண்டு, நீ சார்ந்த புத்த சமய வாதங்களில் உள்ள மெய்ப்பொருளை நிறுவி, அவர்கள் சொன்ன எவற்றிலும் மெய்ப்பொருள் இல்லை என்பதை உறுதிப்படுத்து. உனக்கு வெற்றி உண்டாகட்டும்.” [மேலும்..»]

ஆன்மிகம், இலக்கியம், கோயில்கள், வரலாறு

மீனாட்சி என்னும் இன்பமாகடல்

மீனாட்சி என்னும் இன்பமாகடல்

அன்னைக்குப் பூஜை முடிந்ததும் தீபாராதனை எடுக்க வைத்திருந்த கற்பூரத்திலிருந்து இரு கட்டிகளை எடுத்தார். தனது கண்களில் வைத்துக் கொண்டு அதில் நெருப்புச் சுடரையும் வைத்தார். ஆஹா! கண்கள் பொசுங்கின! பார்வை பறிபோயிற்று! "அம்மா, தாயே, மீனாட்சி," எனப் புலம்பினார் தீக்ஷிதர்... வீரர்கள் சொன்ன செய்தியால் ஆச்சரியம் அடைந்தார் மன்னர் திருமலை நாயக்கர். திரை மறைவில் இதைக் கேட்டபடி இருந்த மகாராணி, இப்போது தைரியமாக மன்னர் முன் வந்தாள்... . தீக்ஷிதருக்குக் கண்கள் பொசுங்கியதால் தாம் படும் வருத்தத்தையும் வலியையும் விட, மன்னர் படும் துயரம் தாங்கொணாததாக இருந்தது. அடுத்து 61-வது ஸ்லோகத்தைப் பாடுகிறார் "இயற்கை அழகு வாய்ந்ததும்,... [மேலும்..»]

அனுபவம், இலக்கியம், வரலாறு

கலஞ்செய் கோவே கலஞ்செய் கோவே

November 4, 2014
-
கலஞ்செய் கோவே கலஞ்செய் கோவே

அந்த ஆலமரத்தடி சுடுகாட்டில் எனக்கு அந்தச் சிறு வயதில் பல ஆர்வங்கள் நிறைந்திருந்தன. கோவலன் பொட்டல் சுடுகாட்டில் பெரிய பெரிய பானைகளும் அந்தப் பானைகளில் இருந்து உடைந்த அழகான சின்னஞ் சிறு வழவழப்பான சில்லுகளும் நிறையைக் கிட்டும். ஒவ்வொரு முறை பிணம் தோண்டும் பொழுதும் இன்னுமொரு பெரும் மண்பானையை வெளியே எடுத்துப் போட்டிருப்பார்கள்... இதில் இருக்கும் சோகம் மனதை கலங்க அடிக்கும் ஒரு மாபெரும் சோகம். ஆழியை விடப் பெரிய ஒரு சோகத்தை இத்தனை சிறு வரிகளில் அடைத்து விட்டிருக்கிறார் அந்தப் புலவர்... [மேலும்..»]

இலக்கியம், கதைகள்

புதுமைப்பித்தனின் “அன்றிரவு” சிறுகதையை முன்வைத்து…

July 5, 2013
-
புதுமைப்பித்தனின் “அன்றிரவு” சிறுகதையை முன்வைத்து…

அடிப்படையில் இது ஒரு புராண மீட்டுருவாக்கக் கதை. இதை வைத்துக் கொண்டு ஒரு அழகான, கவித்துவமான, தத்துவமும் அங்கதமும் சுய விமர்சன நோக்கும் சுவாரஸ்யமும் இழையோடும் ஒரு இலக்கியத் தரமுள்ள ஒரு புதுமையான *நவீன* சிறுகதையை புதுமைப் பித்தன் எழுதியிருக்கிறார்... கட்டுடைப்பு” என்ற வகையில் கதையின் போக்கில் இரண்டு சிறிய மாற்றங்களை மட்டுமே செய்திருக்கிறார்... எது அந்த பொற்பிரம்பு? இயற்கையா? விதியா? பிரபஞ்ச லீலையின் ஒரு சாயலா? அல்லது இவற்றை எல்லாம் கட்டி வைத்து விளையாடும் ஒரு இலக்கிய கர்த்தாவின் எழுதுகோலா? அவனது எழுத்தே தானா அந்தப் பொற்பிரம்பு? ... [மேலும்..»]

அரசியல், நிகழ்வுகள்

ப.சிதம்பரம்: தரித்திரனிடம் தார்மிகம் பேசலாமா?

ப.சிதம்பரம்: தரித்திரனிடம் தார்மிகம் பேசலாமா?

2009 மே மாதம் நடந்த 15 வது நாடாளுமன்றத் தேர்தலில், அதிமுக வேட்பாளர் இல்லாத நேரம் பார்த்து, கடைசி சுற்றில் அதிக வாக்குகள் பெற்றதால், 3,354 வாக்குகள் வித்தியாசத்தில் ப.சிதம்பரம் வென்றதாக அறிவிக்கப்பட்டது. தேர்தலில் இரண்டாமிடம் பெற்ற ராஜ கண்ணப்பன் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். கடந்த ஜூன் 7 ம் தேதி, ராஜ கண்ணப்பனின் மனுவை எதிர்த்து ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி வெங்கட்ராமன், ப.சிதம்பரத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனால் ப.சி. நீதிமன்றக் கூண்டில் ஏற வேண்டி வரும். இதே... [மேலும்..»]

நிகழ்வுகள்

மதுரை ஆதீனத்துக்குப் புதிய தலைவர் – சில எண்ணங்கள்

மதுரை ஆதீனத்துக்குப் புதிய தலைவர் – சில எண்ணங்கள்

மக்களின் நம்பிக்கை, வழிபாடு, சமயம் சார்ந்த செயல்பாடுகள் இவற்றில் வழிகாட்டும் பொறுப்பில் இருக்கும் ஒரு மடத்துக்கு எந்த குற்றச்சாட்டோ அல்லது குறைபாடுகளோ இல்லாத நபர் தலைமை ஏற்பதுதான் பொருத்தமாக இருக்கும்... சிவ தீட்சை பெற்ற சிலர் அவர்கள் ஆதீன கோயில்களில் கட்டளைத் தம்பிரான்களாகப் பல காலம் பணியாற்றித் தங்களை பக்குவப் படுத்திக் கொண்டு அவர்களில் தகுதி அடிப்படையில் அந்த ஆதீனத் தலைமை பண்டாரமாக நியமிக்கப் பெறுகின்றனர், முதிய வயதில் கூட அந்தத் தலைமை கிடைக்காமல் போனவர்களும் உண்டு... பல சடங்குகள் இருக்க திடீர் சாம்பார் போல திடீர் மடாதிபதியாக ஆவது எப்படி என்பது புரியாத புதிராக... [மேலும்..»]

இந்த வாரம் இந்து உலகம், நிகழ்வுகள்

இந்த வாரம் இந்து உலகம் (மார்ச்-17, 2012)

இந்த வாரம் இந்து உலகம் (மார்ச்-17, 2012)

திருவிழாவின் போது நடுத்தெருவில் பொங்கல் வைத்ததாக குற்றம் சாட்டப் பட்டு 1000 பெண்களை திருவனந்தபுரம் காவல்துறை கைது செய்து தடை உத்தரவை மீறியதற்காக வழக்கும் பதிவு செய்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது... சிந்த் மாகாணத்தில் சிறுமிகள், திருமணமான பெண்கள் உட்பட 25-30 இந்துப் பெண்கள் ஒவ்வொரு மாதமும் கடத்தப் பட்டு மதமாற்றப் படுகிறார்கள்... மதுரை மீனாட்சி கோயிலைச் சுற்றி சட்டத்தை மீறிக் கட்டப்பட்டுள்ள 770 கட்டடங்கள் குறித்து இன்னும் 60 நாட்களுக்குள் நடவடிக்கை... உபனிஷத ஞானச் செல்வத்தினை வாராவாரம் தொலைக்காட்சித் தொடர் வடிவில் வழங்கும் ஒரு... [மேலும்..»]

சினிமா

அரவான் – அபத்தத்தில் இருந்து சொதப்பலுக்கு

அரவான் – அபத்தத்தில் இருந்து சொதப்பலுக்கு

காலக்கிரமமான சில சம்பவங்களை காலம், இடம், பேச்சு வழக்கு, வாழ்க்கை முறைகள், கள்ளர்களின் கலாசாரங்கள், உணர்ச்சி கொப்பளிக்கும் சித்திரங்கள் போன்ற எதைப் பற்றியும் எந்த பிரக்ஞையுமின்றி, சிறிது கூடக் கவலைப்படாமல் படு செயற்கையான சொதப்பலான ஒரு சினிமாவாக மாற்றியுள்ளார் இயக்குநர் வசந்தபாலன்... இப்படி, படம் முழுவதும் இவை போன்ற எண்ணற்ற பொருத்தமில்லாத, இயல்பில்லாத, செயற்கையான, அபத்தமான, செறிவற்ற, சொதப்பலான, ஆழமற்ற காட்சிகளாலும் வசனங்களினாலும் நடிப்பினாலும் நிரம்பி வழிகின்றன. [மேலும்..»]

இந்த வாரம் இந்து உலகம், சமூகம்

இந்த வாரம் இந்து உலகம் (ஃபிப்ரவரி – 03, 2012)

இந்த வாரம் இந்து உலகம் (ஃபிப்ரவரி – 03, 2012)

இந்து ஆன்மீக மற்றும் சேவைக் கண்காட்சியில் தமிழ்ஹிந்து பங்கு கொண்டது, ஒரிஸ்ஸா மாநிலத்தில், பூரி மாவட்டத்தில் கோனார்க்கில் கொண்டாடப்பட்ட மகா சப்தமி, "விஞ்ஞானம் - ஆன்மிகம் - சமூக சேவை' கருத்தரங்கம், பகவத் கீதை வெறும் மத நூல் அல்ல என்ற உயர்நீதி மன்ற தீர்ப்பு, தேசியக் கோடி ஏற்ற முயன்ற தலித் ஊராட்சித் தலைவர் தாக்கப் பட்டது, கோவிலில் மணி அடிக்க தடை பற்றி, போஜ்சாலாவில் இந்துக்களின் உரிமை, பார்சல் குண்டு வழக்கில் தீர்ப்பு, அடுத்த ஆண்டு விவேகானந்தர் நூற்றி ஐம்பதாவது ஆண்டு விழாக் கொண்டாட்டம், மேலும் பல செய்திகள்... [மேலும்..»]

அறிவிப்புகள்

அஞ்சலி – சிவானந்த விஜயலக்ஷ்மி

அஞ்சலி – சிவானந்த விஜயலக்ஷ்மி

தன் சிறு வயது முதல் தெய்வீக இசை பாடியும், சமயச் சொற்பொழிவுகள் நிகழ்த்தியும் இறைப்பணியில் இடையறாது ஈடுபட்டிருந்த டாக்டர் சிவானந்த விஜயலக்ஷ்மி அவர்கள் தமது 74வது வயதில் 2011 நவம்பர்-8 (செவ்வாய்) அன்று மறைந்தார். மதுரையைச் சேர்ந்த விஜயலக்ஷ்மி என்ற அந்த 13 வயதுச் சிறுமியின் இசைத் திறமைகளைக் கண்டு பூரித்த சுவாமி சிவானந்தர், ரிஷிகேஷ் வருமாறு பணித்தார். ராமாயணப் புத்தகத்தை அவளுக்குப் பரிசாக அளித்து இன்னும் சில மாதங்களிலேயே வால்மீகி ராமாயணச் சொற்பொழிவு செய்யும் அளவுக்கு பாண்டித்யம் உண்டாகும் என்றும் ஆசீர்வதித்தார். குருவின் கட்டளையைச் சிரமேற்கொண்ட அந்தப் பெண் ‘சிவானந்த’ என்ற குருவின் திருப்பெயரையும் தனது... [மேலும்..»]