நம்மிடமிருந்து விலகிச்செல்லும் இஸ்லாமியர்கள்: ஒரு சாமானிய தமிழனின் பார்வை

அல்ஜீரியாவிலும் துனிசியாவிலும் இருந்து வந்த பயங்கரவாதிகளுக்காக, தான் என்றும் பார்த்திராத யூதர்கள் என்ற ஒரு இனக்குழுவின் மேல் ஒரு கடுமையான ஆதாரமில்லாத குற்றச்சாட்டை வைப்பது – இதை எப்படி செய்ய முடிகிறது? அந்த பயங்கரவாதிகளை ஏன் காக்க வேண்டும் – அவர்களுடன் என்ன உறவு, மத ரீதியிலானதை தவிர?… முன்பெல்லாம் இஸ்லாமியர் வீட்டுப் பெண்கள் நம் வீட்டு பெண்களை போல் தான் இருந்தார்கள். அவர்கள் எல்லா சுதந்திரத்தையும் அனுபவித்தார்கள். அயத்துல்லா கொமேனி ஈரானில் கல்லூரி படிக்கும் பெண்களை கருப்பு அங்கியால் மூடியபோது கூட நம் ஊர் முஸ்லிம் பெண்கள் சாதாரண ஆடைதான் அணிந்திருந்தார்கள்… ”இந்த அங்கியை அணிந்தால் தலை வேர்த்து கசகசவென்று ஆகி இப்படி நடக்கிறது. தலை வேறு வலிக்கிறது” என்று அழாக்குறையாக அந்தக் குழந்தை சொன்னது சுருக்கென்று தைத்தது. ஆனால் அவள் தந்தையோ கண்டும் காணாமல் இருந்தார். 7 வயது குழந்தைக்கு ஹிஜாப் என்ற அந்தக் கருப்பு அங்கியை அணிவிக்க வேண்டிய கட்டாயம் என்ன?…

View More நம்மிடமிருந்து விலகிச்செல்லும் இஸ்லாமியர்கள்: ஒரு சாமானிய தமிழனின் பார்வை

ஈராக் நேற்றும் இன்றும் : புத்தக அறிமுகம்

ஈராக்கில் வசிக்கும் ஒருவரால் நேரடியாகத் தமிழில் எழுதப்படும் புத்தகம் இது. ஒரு பயணக் கட்டுரை போலவும் இல்லாமல், ஆய்வுக்கட்டுரை போலவும் இல்லாமல், இரண்டுக்கும் இடையேயான ஒரு பொதுப்பாதையைப் பற்றி இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. ஈராக் என்றதுமே நமக்கு நினைவுக்கு வருவது பாலைவனமும் ரத்தமும் துப்பாக்கியும்தான். இது ஈராக்கின் ஒரு பக்க முகம் மட்டுமே. ஜெயக்குமார் ஸ்ரீனிவாசன் ஈராக்கின் இந்தப் பக்கத்தோடு, அதன் வளமை, ஈராக்கியர்களின் அன்பு, இந்தியர்கள் மீதான மரியாதை என்ற இன்னொரு பக்கத்தையும் இப்புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார்….

View More ஈராக் நேற்றும் இன்றும் : புத்தக அறிமுகம்

மத்திய கிழக்கில் தொடரும் மதப்போர்கள்

இப்போது மத்திய கிழக்கிலே நடப்பது ஆயிரம் வருசம் பழைமையான சண்டை. ஷியா ஈரான் ஆனது தன்னுடைய பழைய பேரரசை கட்டியமைக்க முயற்சி செய்கிறது. சவூதியோ தன் பங்குக்கு தானும் ஒரு பேரரசை கட்டியமைக்கவேண்டும் என விரும்புகிறது… மத்திய கிழக்கில் நடக்கும் ஷியா-சுன்னி மதவாத சண்டைகளில் இப்போ புதிதாக பாகிஸ்தானும் தலையிட ஆரம்பித்துள்ளது… முன்பு பஹ்ரைனில் நடந்த கிளர்ச்சியை இதே போல் சவூதி ராணுவத்தை அனுப்பி கிளர்ச்சியை அடக்கியது நினைவிருக்கலாம். இப்போது ஏமனில் ஷியா கிளர்ச்சியாளர்கள் 20 வருடம் ஆண்ட மன்சுர் ஹடியின் கட்சியின் ஆட்சியை துரத்தி விட்டு தாங்களே ஆட்சியாளர்கள் என அறிவித்து உள்ளார்கள். .. அமெரிக்கா மத்திய கிழக்கிலே தன்னுடைய கையை கழுவும் பட்சத்திலே இது இன்னும் பெரும் பிரச்சினைகளை கொண்டுவரும். காரணம் இப்போது அமைதியாக இருக்கும் இஸ்ரேல்…

View More மத்திய கிழக்கில் தொடரும் மதப்போர்கள்

இஸ்ரேல் பாலஸ்தீனப் பிரசினையும், ஹமாஸ் பயங்கரவாதமும்

ஹாமஸ் துவங்கப்பட்ட போது, அதன் நோக்கம் தெளிவாக சொல்லப்பட்டது – முதலாவதாக, மேற்குக் கரை, காஸா உட்பட இஸ்ரேலின் வசம் இருக்கும் பாலஸ்தீனிய நிலப்பரப்பு முழுவதையும் வென்றெடுப்பது, இஸ்ரேலை இருந்த இடம் தெரியாமல் அழித்தொழிப்பது. இரண்டாவதாக, தப்பித்தவறி பாலஸ்தீன் என்றாவது ஒரு நாள் மதச்சார்பற்ற தனியொரு தேசமாக அறியப்பட வேண்டி வருமானால், அதை எதிர்த்தும் போராடுவது, பாலஸ்தீனை ஒரு முழுமையான இஸ்லாமிய தேசமாக மாற்றுவது… துப்பாக்கி தூக்குவதற்கும், கார் வெடி குண்டுகள், சொந்த ராக்கெட் என அதிநவீனத் தாக்குதல்களை தொடர்ந்து நடத்துவதற்கு அதிக அளவில் நிதி தேவைப்படுகிறது. பதினொரு வழிகளில் ஹமாஸூக்கு தேவையான நிதி ஆதராங்கள் கிடைத்துக் கொண்டிருப்பதாக பல்வேறு நாடுகளில் உள்ள உளவுத் துறையினர் தெரிவிக்கிறார்கள்….இவ்வாறு கூச்சல் போடும் இஸ்லாமியர்கள், முஸ்லீம்களுக்கு ஆதரவான அரசியல் கட்சிகள் இதுவரை, சிரியாவில் 1,50,000 சன்னி முஸ்லீம்கள் சியா முஸ்லீம்களால் படுகொலை செய்யப்பட்டது இவர்கள் கண்களில் படவில்லை….

View More இஸ்ரேல் பாலஸ்தீனப் பிரசினையும், ஹமாஸ் பயங்கரவாதமும்

அரபு நாடுகளில் பணிப்பெண்கள்: தொடரும் கொடூரங்கள்

குறைந்தது தினமும் 18 மணி நேர வேலை, மறந்தும் கருணை காட்டாத மேடம்கள். கற்பழிக்கும் ஸ்பான்சர்கள் மற்றும் அவர்களின் வயதுக்கு வந்த தடிமாடு போன்ற மகன்களின் சில்மிஷங்கள்…. அரபிகளின் முக்கிய பொழுதுபோக்கே கார்கள், மொபைல் போன் மற்றும் அநாதரவாய் இருக்கும் பெண்கள் தான். கூட்டு வல்லுறவு செய்து சாலையில் தூக்கி வீசிச் செல்லுதல், கடலில் தூக்கி வீசுதல் எல்லாம் சாதாரணமாய் நடக்கும்… இதெல்லாம் நடப்பதற்கு முக்கிய காரணம் பாதிக்கப்படும் பெண்கள் / மக்கள் வாழும் நாடுகள் சவூதி அரேபியாவை தண்டிக்கும் அளவு பலம் வாய்ந்தது கிடையாது என்பது தான்.. 2011ல் வெளிவந்து ”கதாமா” என்ற மலையாளத் திரைப் படம் இத்தகைய ஒரு பெண்ணின் உண்மைக்கு மிக அருகிலான அனுபவங்களை சித்தரிக்கிறது…

View More அரபு நாடுகளில் பணிப்பெண்கள்: தொடரும் கொடூரங்கள்