Posts Tagged ‘ மத்திய அரசு ’

காவிரி மேலாண்மை வாரியமும் மத்திய பாஜக அரசும்

ஆறு வாரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது என்பதே தவறு. இது முழுக்க முழுக்க தமிழ் மீடியாக்களின் புரிதலில் ஏற்பட்ட கோளாறு அல்லது விஷமப்பிரச்சாரம். உச்சநீதிமன்றம் ஆறுவார காலத்தில் ஒரு செயல்திட்டத்தை உருவாக்கச்சொன்னது. அவ்வளவுதான். இதை ஆரம்பம் முதலே மக்களிடமும் மீடியாக்களிடமும் தெளிவாக விளக்காதது தமிழக பாஜகவின் தவறு.. அதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட மாநிலங்கள் தங்கள் வசம் உள்ள அணைகளின் கட்டுப்பாட்டை நதிநீர் ஆணையத்தின் வசம் ஒப்படைக்க ஒத்துக்கொள்ள வேண்டும். சம்பந்தப்பட்ட எந்த மாநிலமும் இதற்குத் தயாராக இல்லை. கர்நாடகம் , ஆந்திரம் , கேரளம் மட்டுமல்ல,... [மேலும்..»]

ஐஐடி விவகாரமும் மத்திய அரசின் பங்கும்

தலித்துகளை மையப்படுத்தி இருக்கின்ற பிரச்சினைகள் ஏராளமாக இருக்கின்றன. இதையெல்லாம் விட்டுவிட்டு பாஜக அரசாங்கத்தை மட்டும் குறிவைத்து நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதிலிருந்து - இந்துமதத்தை மட்டும் குறிவைத்து தாக்கி நிகழ்ச்சி நடத்தப்படுவதிலிருந்து இந்த அமைப்பின் நோக்கமும், இந்த அமைப்பினை பின்னால் இருந்து இயக்குகின்ற அமைப்பின் நோக்கத்தைப் புரிந்துகொள்ளலாம். [மேலும்..»]

புதிய கவர்னர்களை நியமிக்க முயற்சி

1977இல் இந்திரா காந்தியின் ஆட்சி தோல்வி அடைந்து, பல கட்சிகள் சேர்ந்து உருவாக்கிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தது. அப்படி வந்த பின்னர் இந்திரா காந்தி அரசியல் ஆதாயத்துக்காக நியமித்த பல கவர்னர்கள் நீக்கப்பட்டார்கள். அந்த இடத்திற்கு ஜனதா கட்சி புதிய கவர்னர்களை நியமித்தது. அப்படி தமிழ் நாட்டுக்கு நியமிக்கப்பட்டவர் பிரபுதாஸ் பட்வாரி என்பார். இவர் ஒரு சர்வோதயத் தலைவர். மது அருந்துவதோ, மாமிசம் சாப்பிடுவதோ இவருக்குப் பழக்கம் இல்லை, அதோடு மட்டுமல்லாமல் இவர் கவர்னராக இருந்த காலத்தில் இவரது கவர்னர் மாளிகையில் விருந்தினராக வந்து தங்கும் தலைவர்களுக்கும் மேற்படி சங்கதிகள் பரிமாறப் படுவதில்லை.... [மேலும்..»]

லோக்பால்- கனவு நிறைவேறுமா? -1

December 23, 2013
By

லோக்பால் மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 2013, டிசம்பர் 18-ல் நிறைவேறிவிட்டது. ஊழலுக்கு எதிரான போரில் நாடு இனி தயங்கி நிற்காது என்பது மக்களின் எதிர்பார்ப்பு. எந்தச் சட்டமும் அதை நிறைவேற்றுவோரின் உறுதிப்பாட்டில் தான் மதிப்பு பெறுகிறது. இந்த சட்டம் கொண்டுவரவே 50 ஆண்டுகளாகி இருப்பது, நமது உறுதிப்பாட்டின் லட்சணத்தை வெளிப்படுத்தக் கூடியது. இப்போது லோக்பால் சட்டம் குறித்த சில காலவரிசைப்படுத்தப்பட்ட தகவல்கள்…   லோக்பால்: அன்று முதல் இன்று வரை… ஊழல் பெருக்கத்தின் போது தான் அதை ஒழிக்க என்ன செய்வது என்ற சிந்தனை வரும். அவ்வாறே 1960களில் இந்தியாவில் ஊழல் நிலைகொள்ள ஆரம்பித்த தருணங்களில்... [மேலும்..»]

காங்கிரஸ் அரசு மீது இந்துக்களின் குற்றப் பத்திரிகை

ஹிந்துகளின் அறியாமையே காங்கிரசின் பலம். இப்படியே வளர்ந்துவிட்ட ஹிந்துக்களின் அறியாமையை விலக்க நாம் காங்கிரசிற்கு ஒட்டு அளிப்பதால் நாடு எதிர்நோக்கியுள்ள தீமைகளை விளக்கி சொல்ல வேண்டும். காங்கிரஸ் அரசாங்கத்தின் ஹிந்து விரோத, தேசியவிரோத கொள்கைகளை பொதுமக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டப் பட வேண்டும். காங்கிரஸ், அன்று மத அடிப்படையில் ஒரு கருவியாக இருந்து நாட்டை பிரித்தது. இப்போது இந்துக்களை வஞ்சித்து மைனாரிட்டிகளை திருப்தி படுத்துகிறோம் என்று நாட்டை நாசப் படுத்தி வருகிறது. நீங்கள் நேர்மையானவர், தேசியத்தின் மீது மனமார பற்றும் நம்பிக்கையும் கொண்டவர், இருந்தும் காங்கிரசிற்கு ஒட்டு அளிப்பவர் என்றால் இந்த கட்டுரை உங்களுக்குத்தான்..... [மேலும்..»]

விவசாயிகளின் வயிற்றில் அடித்த மத்திய அரசு

1,934 கோடி ரூபாய் வட்டி தள்ளுபடிக்குறிய விவரங்கள் அடங்கிய ஆவணங்களைக் கூட வங்கிகள் வைத்திருக்க வில்லை. தள்ளுபடி செய்யப்பட்ட வட்டி, வட்டி சதவீதம் என்ன? எந்த காலத்திற்கு வட்டி கணக்கிடப்பட்டது? மத்திய அரசு அறிவித்துள்ள திட்டத்தின் படி எந்த விவசாயிக்கு வட்டி தள்ளுபடி கிடைக்கும் என்பது பற்றி ஆவணங்கள் கூட சில வங்கிகள் வைத்திருக்க வில்லை. ஆந்திராவில் ஐந்து வங்கிகளில் 25 சதவீத தொகையான ரூ66.16 லட்சத்திற்குறிய அதாவது 75 சதவீதம் கட்ட வேண்டிய விவசாயி கட்டாமலே, வங்கி கட்டியதாக காட்டி மத்திய அரசிடமிருந்து 25 சதவீத தொகையை பெற்றுள்ளது என்பது தெரிய... [மேலும்..»]

காங்கிரஸை ஆதரிக்க கருணாவின் காரணங்கள்

கருணாவின் கட்சியை காங்கிரஸ் ப்யூரோ ஆஃப் இண்டெலிஜென்ஸை அதாவது சில நேரங்களில் அதை சி.பி.ஐ என்றும் அழைக்கப்படும் (அ) நம்பப்படும் ஒரு கும்பலை வைத்து திருக்குவளை முன்னேற்ற கழகத்தின் அனைத்து காய்களையும் நாசுக்காக கம்பி எண்ண வைத்தது நினைவிருக்கலாம். அத்தகைய நயவஞ்சக நண்பனான அந்நிய காங்கிரஸிற்கு தன் ஆதரவு கரத்தை மீண்டும் துடைத்து கொண்டு நீட்டி தன் விசுவாசத்தை குட்டிக்கரணம் அடித்து நிருபித்திருக்கிறார் அண்ணன் கருணா. அவரின் ராஜதந்திரத்தை மன்னிக்க "இராச தந்திர", "இன மான" உணர்வு மிக்க நகர்வை , மக்களை ஒடுக்க வந்த ஆரிய நச்சுக்களும், பார்ப்பன பதர்களும் ,மவுண்ட் ரோடு மகா விஷ்ணு... [மேலும்..»]

தமிழக அரசின் இலங்கை எதிர்ப்பு – ஒரு பார்வை

கருணாநிதியிடம் இருந்து தட்டிப்பறித்த ''தமிழினத் தலைவர்'' பட்டத்தைத் தக்க வைக்க மேலும் மேலும் தவறு செய்கிறார். ராஜீவ் கொலையாளிகளுக்கு ஆதரவாக சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார்; இலங்கை ராணுவ வீரர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சியை எதிர்க்கிறார்... தமிழக அரசின் நடவடிக்கைகளை தங்களுக்கான ஆதரவாக எடுத்துக்கொள்ளும் புலி ஆதரவாளர்கள் வரம்பு மீறுகின்றனர்... 80-களின் இறுதியில் தமிழகத்தில் நிலவிய பயங்கரத்தை நாம் மறந்துவிடக்கூடாது... சிங்களர்களுக்கு எதிரான வெறுப்புணர்வை தமிழகத்தில் வளர்ப்பது இலங்கை வாழ் தமிழர்களை மேலும் பாதிக்கவே செய்யும். [மேலும்..»]

ஊழலுக்காக நாடாளுமன்ற ஜனநாயகம் முடங்கலாமா?

September 4, 2012
By

அன்று ஸ்பெக்ட்ரம் ஊழல் (ரூ. 1.76 லட்சம் கோடி) குறித்து சி.ஏ.ஜி அம்பலப் படுத்தியவுடன் அதற்கு பொறுப்பாக இருந்த ஆ.ராசாவை பதவி விலகச் செய்த காங்கிரஸ் கட்சி, அதே போன்ற நிலக்கரி சுரங்க ஊழலை (ரூ. 1.86 லட்சம் கோடி) சி.ஏ.ஜி அம்பலப் படுத்தியவுடன் அதற்கு பொறுப்பாக இருந்த மன்மோகன் சிங்கை நீக்குவது தானே முறை? தொலைதொடர்புத் துறை அமைச்சராக இருந்த ஆ.ராசா ஸ்பெக்ட்ரம் ஊழலுக்காக பதவி விலகுவது கட்டாயம் என்றால், நிலக்கரித் துறையை 2005 முதல் 2009 வரை தன்வசம் வைத்திருந்த மன்மோகன் சிங் நிலக்கரி ஊழலுக்காக பதவி விலகுவது தானே சரியானது? ... [மேலும்..»]

ஊழல் நோய்க்கு உண்ணாவிரத மருந்து…

அண்ணா ஹசாரே ஜன லோக்பால் சட்டத்தை நிறைவேற்றக் கோரியும், ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அமைச்சர்கள் மீதான விரைவான விசாரணை கோரியும், நேற்று (ஜூலை 29) முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தை துவங்கி உள்ளார். திருட்டில் தொடர்புடைய ஒருவரிடம் இருந்து நேர்மையான விளக்கத்தை எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது. அதுவும் நாட்டையே திவாலாக்கும் ஊழல்களில் ஈடுபட்டவர்கள் தன்னிலை விளக்கம் அளிப்பர் என்று எதிர்பார்ப்பது பரிதாபமானது. இதைவிடப் பரிதாபம், இன்னமும், அண்ணா ஹசாரே, ‘’மன்மோகன் சிங் நல்லவர் தான்’’ என்று ஓயாமல் பேசிக் கொண்டிருப்பது. இதையே காங்கிரஸ் ஆதரவு ஊடகங்கள் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, ஹசாரே மீது நம்பிக்கையின்மை ஏற்படும்படியான செய்திகளை வெளியிடுகின்றன.... [மேலும்..»]