Posts Tagged ‘ மந்திரம் ’

இந்து மத விளக்கங்கள், கவிதை, வேதம்

மித்திரன் சூரியன் வருணன்: மூன்று வேதப் பாடல்கள்

June 14, 2019
-
மித்திரன் சூரியன் வருணன்: மூன்று வேதப் பாடல்கள்

மித்ரன் ஒளியையும் உறவையும் நட்பையும் வளர்க்கும் வேத தெய்வத்தின் பெயர். சூர்ய தேவனுடைய கண்ணாக இந்தத் தெய்வத்தின் சக்தி கருதப்படுகிறது. இந்தியப் பண்பாடு மட்டுமின்றி, பண்டைய பாரசீகப் பண்பாட்டிலும் ஜராதுஷ்ட்ர மதத்திலும் மித்ர என்ற இதே பெயருடன் இக்கடவுளை வழிபட்டனர்... "சத்தியத்தின் ஒளியினாலும் கண்ணுக்குப் புலனாகும் ஒளியினாலும் அமரரையும் மனிதரையும் தத்தம் தொழில்களில் புகுத்தி பொன்மயமான தேரில் சுற்றி வருகிறான் ஸவித்ரு தேவன். உலகங்களையெல்லாம் நன்கு பார்வையிட்டுக் கொண்டு சஞ்சரிக்கிறான்"... 'இமம் மே வருண' என்ற இந்தப் புகழ்பெற்ற மந்திரம் தினந்தோறும் சாயங்கால சந்தியாவந்தனத்தில் உபஸ்தான (வேண்டுதல்) மந்திரமாக மேற்கு நோக்கி நின்று சூரியனைத் தொழுது கூறப்படுவது...... [மேலும்..»]

கவிதை, வேதம்

கோபத்தின் தேவதைக்கு ஒரு வேதப்பாடல்: மன்யு சூக்தம்

February 5, 2018
-
கோபத்தின் தேவதைக்கு ஒரு வேதப்பாடல்: மன்யு சூக்தம்

மன்யுவே எங்களிடம் வருக - வலியர்களிலும் வலியன் நீ - உனது நட்பான தவத்துடன் இணைந்து - எமது பகையை வென்றிடுக - நட்பற்றவர்களைத் துரத்துவோன் நீ - விருத்திரர்களை தஸ்யுக்களைத் துளைப்பவன் நீ - செல்வங்களை எமக்கு நல்கிடுக... கோபத்தின் தேவதையாக மன்யுவை வேதம் கூறுகிறது. 'ருத்திரனே உன்னுடைய கோபத்திற்கு நமஸ்காரம்' (நமஸ்தே ருத்ர மன்யவ) என்று தான் புனிதமான ஸ்ரீருத்ரம் தொடங்குகிறது. மன்யு என்ற சொல்லுக்கு கோபம், ஆவேசம், குமுறல், சீற்றம் (fury),உணர்ச்சிகரம் (passion),பேரார்வம் (zeal) ஆகிய அர்த்தங்கள் உண்டு. இந்தத் தேவனின் அருள் என்றென்றும் தர்மவீரர்களான நமக்கு வேண்டும். மன்யு சூக்தம்ரி... [மேலும்..»]

இந்து மத விளக்கங்கள், கோயில்கள், சைவம்

ஆகம வழிபாட்டில் மகத்துவம் மிக்க தீக்ஷை முறைகள்

ஆகம வழிபாட்டில் மகத்துவம் மிக்க தீக்ஷை முறைகள்

சிவாகம தீக்ஷை சைவசித்தாந்த தத்துவ உட்செறிவு மிக்கது. இதனால், இக்கிரியையில் வெளிப்படையான சடங்குகளை விட, உள்முகமான செயற்பாடுகளே அதிகமாக இருக்கக் காணலாம்... சாந்தீத கலை, சாந்தி கலை, வித்யாகலை, பிரதிஷ் டா கலை, நிவிர்த்தி கலை ஆகிய கலைகளை குறிக்குமாறு முறையே சிரசு, நெற்றி, மார்பு, நாபி, முழங்கால் ஆகியவற்றில் பூக்கள் கட்டித் தொங்க விடப்படும். பின், மந்திர பூர்வமான ஹோமங்கள் நடந்து அந்த நூல் கழற்றி, சிவகும்பத்தின் முன் வைக்கப்படும். பிறகு இரவு யாகசாலைக்கு அருகில் சீடனை தூங்கச் செய்வார். மறுநாள் துயில் நீங்கி அதிகாலை எழுந்ததும் குருவும் சீடனும் நித்திய கருமங்கள் முடித்து, சிவபூஜை... [மேலும்..»]

ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், சைவம்

தவ முனிவனின் தமிழாகமம்

தவ முனிவனின் தமிழாகமம்

திருமுறைகள் இருக்கு முதலிய வேதங்களை பெயர் சுட்டிக் குறிப்பிடுவதும் அவை விதித்த கருமங்களை செய்யுமாறு பணிப்பதும் பல இடங்களில் காணலாம். சைவத்தின் சிறப்பு நூலான ஆகமங்களின் கருத்துக்கள் பலவற்றை திருமூலர் பெருமான் அருளிய திருமந்திரத்தில் பரக்கக் காணலாம்... ககாராதி ஐந்தும், அகாராதி ஆறும், சகாராதி நான்கும் என்றெல்லாம் இந்தப் பாடலில் உள்ளது. இப்படி எல்லாம் தமிழ் நெடுங்கணக்கில் எழுத்துக்கள் உள்ளனவா.? இல்லை. இது பிரசித்தி பெற்ற பஞ்சதசாக்ஷரி என்ற ஸ்ரீ வித்யா உபாசனையின் மஹாமந்திரமே ஆகும்... சிவாகம ஆய்வுகள் மேம்படுத்தப்பட வேண்டும். ஆகமங்கள் குறித்து நடைபெற்று வரும் ஆய்வுகள் போதுமானதாக இல்லை என்றே... [மேலும்..»]

கவிதை, தத்துவம், வேதம்

ரிக்வேதத்தின் அக்னி சூக்தங்கள்

April 5, 2012
-
ரிக்வேதத்தின் அக்னி சூக்தங்கள்

ஆலமரத்தைத் தன்னுள் அடக்கிய விதை போல, இந்து ஞான மரபின் வளர்சிதை மாற்றங்களுக்கான கூறுகள் ரிக்வேதத்திலேயே உருவாகத் தொடங்கிவிட்டன... அந்த மாபெரும் ஒரே கல்தான் இந்தக் கோயிலும் அதன் விமானமும் அதன் பிராகாரங்களும்; அதன் சிவலிங்கமும் கூட. அதன் மீது நான் நின்று கொண்டிருக்கிறேன். அதையே வணங்கிக் கொண்டிருக்கிறேன்... அனைத்து இந்தியர்களின் தொல்மூதாதைகளான ரிஷிகள் வளர்த்த அக்னியே வேள்வித் தீயாக, ஆசைத் தீயாக, சக்தித் தீயாக, உயிர்த் தீயாக, அறிவுத் தீயாக, கலைத் தீயாக, யோகத் தீயாக, ஞானச் சுடராக பல்வேறு தோற்றம் கொண்டு வளர்ந்து இன்றும் சுடர்விட்டு எரிந்து கொண்டிருக்கிறது... [மேலும்..»]

ஆன்மிகம், தொடர், வைணவம்

பழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி – பகுதி 2

பழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி – பகுதி 2

"வேத முதல்வன்" என்று திருமாலைக் கூறியதற்குப் மறைவழியும், தத்துவார்த்தமாகவும், புராணச் செய்தி வழியும், உலகவழக்குப்படியும் பல விதமாக விளக்கம் காண இயலும். இத்தொடரில் வந்துள்ள முதற்பகுதியைப் போலவே, வரப்போகும் மற்ற பகுதிகளைப் போலவே, இவ்வனுபவங்களுக்கான அடிப்படை மரபினைச் சங்கநூலிலும் இடைக்காலக் காப்பியங்களிலும் கண்டுவிட்டு [மேலும்..»]

ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள்

போகியை யோகி எனல்

போகியை யோகி எனல்

உடலின் எல்லாச் செயல்பாடுகளுக்கும் ஒத்துழைத்தாலும் எதுவும் தனது சுய நலனுக்காக அல்ல. இதை ஆத்மாவுக்கு அனுசரணையாகப் பக்குவப்பட்ட உள்ளம் உணர்ந்திருக்குமானால் அதன் செயல், காமத்தின் விளைவாக நிகழும் செயலாகவே இருப்பினும் அது உள்ளத்தையும் உள் அந்தரங்கமான ஆத்மாவையும் பாதிப்பதில்லை. இதனால்தான் போகியை யோகி என்று கூற முடிகிறது. [மேலும்..»]

ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், பண்டிகைகள்

மகத்துவம் மிக்க மஹாகும்பாபிஷேகம்

மகத்துவம் மிக்க மஹாகும்பாபிஷேகம்

ஸ்வாமி ஸ்திரமாக பாலாலயத்தில் இருக்காமல் விரைவில் பணிகள் நடந்து கருவறையிலே எழுந்தருள வேண்டும் என்பதற்காக பாலஸ்தாபனக் கும்பாபிஷேகத்தை ஸரராசியிலே, தேய்பிறையிலே செய்கிற வழக்கம் இலங்கையில் உள்ளது... காப்பணிந்து கொண்ட குருமார்கள் கோயிற் சூழலை விட்டு காப்புக் கழற்றும் வரை செல்லலாகாது. சவரம் செய்தலாகாது. அதே வேளை அவர்களின் உறவுகளுக்குள் ஏற்படும் ஜனன மரண ஆசௌசமும் அவர்களை இக்காலத்தில் தாக்காது... ஆனால் அதியுன்னதமான இக்கிரியைகளைப் படம் பிடிப்பதை அனுமதிக்கக் கூடாது என்பதில் மாறுபாடான கருத்தில்லை. [மேலும்..»]

ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், இலக்கியம், தத்துவம்

பாரதியின் சாக்தம் – 4

பாரதியின் சாக்தம் – 4

மேல்படிந்த தூசுகளையும் குப்பைகளையும் அகற்றி உயர்ந்த சிந்தனைகளின் உள்ளபடியான உருதுலக்கிக் காட்டும் மேதைமையோர் மிக அரியராகத்தான் தென்படுகின்றனர்... பாரதி மனம் போன போக்கில் செய்யும் விடுதலைக் காதல் தனக்கு உடன்பாடில்லை என்பதை வெளிப்படையாகப் பதிவு செய்கிறார்... காளி அன்னையில் இந்தியாவையும் இந்தியாவின் உருவில் காளி அன்னையையும் காண முனைந்தது வங்காளம். வங்காளம் போல் பெரிதும் உணர்ச்சியின் வசப்படாமல் ஆழ்ந்த நிதானத்தில் தான் பெற்ற ஒளியைப் பயன்படுத்தியது தமிழ்நாடு. [மேலும்..»]

ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், இலக்கியம், தத்துவம்

பாரதியின் சாக்தம் – 3

பாரதியின் சாக்தம் – 3

சக்தி வழிபாட்டைக் கூறவந்த சாக்தம் ஏன் வைஷ்ணவம், சைவம், சாக்தம் என்பனவற்றின் இடையே இருக்க வேண்டிய பரஸ்பர பாவங்களைப் பற்றிப் பேசுகிறது?... மகளிரைத் தேவியின் உருவங்களாகக் கண்டு வழிபடுவது என்பது விவேகானந்தரின் கருத்துப்படி அவர்களுக்குக் கல்வி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல், தன்னம்பிக்கை வளர்வதற்கான சூழ்நிலைகளை அமைத்துக்கொடுத்தல், வாழ்க்கையின் சரிநிகரான துணைவர்களாய் மதித்து நடத்துதல்... சக்தியைத் தாய் என்று போற்றும் தக்ஷிணாசாரம், துணைவி என்று கண்டு போற்றும் வாமாசாரம் இரண்டையும் ஒரே பாடலில் பாரதி இணைத்துப் பாடும் அழகு... [மேலும்..»]