எங்கே பெண்ணுரிமைகள்?: சர்வதேச மகளிர் தினத்தை முன்வைத்து

இந்த நூறு ஆண்டுகளில் தங்களது தொடர்ச்சியான செயல்பாடுகள் மூலமாக பெண்ணுரிமை இயக்கங்கள் உலகெங்கிலும், குறிப்பாக மேற்குலகிலும் பெற்றிருக்கும் வெற்றிகள் மகத்தானவை… ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையே பகிர்தல் உணர்வும், பரஸ்பர மதிப்பும் கூடுவது குடும்பங்களுக்கும், அதன் மூலம் ஒட்டுமொத்த சமூகத்திற்குமே பெரிய நன்மை செய்யும்… மேற்கத்திய நுகர்வுக் கலாசாரம் உருவாக்கிய தினம் அல்ல மகளிர் தினம். உண்மையான சுதந்திர தாகத்தின், மானுட சமத்துவத்தின் குரலாக எழுந்த தினம் அது.

View More எங்கே பெண்ணுரிமைகள்?: சர்வதேச மகளிர் தினத்தை முன்வைத்து

சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – 5

“ஸ்ரீ ஐயன் காளியின் ஆக்ஞைக்கு இணங்க நமது சகோதரிகளின் கல்மாலைகளை அறுத்தெறியவே நாம் முழு சம்மதத்துடன் இங்கு கூடியிருக்கிறோம்.” அம்மேடையிலேயே அருவாள் கொண்டு கல்மாலைகள் அறுத்தெறியப் பட்டன.. ”எனது இனத்தவர்களுக்கு வீடோ, பூஜை நடத்த கோவிலோ கிடையாது. எனவே இவ்விஷயத்தில் வேறு சமுதாயத்தினருக்குச் செய்வதை விடக் கூடுதலாக எங்களுக்கு அரசாங்கம் செய்து தரவேணுமென்று வேண்டுகிறேன். எங்கள் தேவைகளுக்காக கிணறுகளும், கோயில்களும் நிர்மாணித்துத் தரவேண்டும்”

View More சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – 5

சோழவரம் இந்து முன்னணி தலைவர் குரூர படுகொலை

சர்வேஸ்வரா கோயிலுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து அங்கு மசூதி ஒன்றைக் கட்ட மதவெறி அமைப்புகள் முயன்றதாகவும் அதை எதிர்த்து சோழவரம் முன்சீஃப் நீதிமன்றத்தில் மூர்த்தி அவர்கள் வழக்குத் தொடர்ந்தார் என்றும் ஊர்மக்கள் கூறுகின்றனர்… பூதூர் பாபா தர்கா அருகில் இவர் காலை 11 மணிக்கு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது உடலில் 10 இடங்களில் வெட்டுக் காயங்கள் இருந்தன.. இந்த மரணத்திற்கு நீதி கிடைக்கும் வரை ஓயாமல் போராடும் மன உறுதியை இறைசக்தி இந்தக் கிராம மக்களுக்கு அளிக்கட்டும்.

View More சோழவரம் இந்து முன்னணி தலைவர் குரூர படுகொலை

கூகுள் கொண்ட கோபம்

அரசின் சைபர் ஒற்று வேலைகள் இதில் 4-வது விஷயத்தில் கைவைப்பதாக கூகுள் நினைத்தால் ஆச்சர்யப்பட என்ன இருக்கிறது? அதை வைத்துத்தான் மற்ற மூன்று விஷயங்களும் கட்டியெழுப்பப்பட்டு விரிவாக்கப்பட வேண்டும். அந்த ஆதார உளியே களவாடப்பட்டால் கடையை மூட வேண்டியதுதான் ஆக, புதிய மாபெரும் சந்தை என்பதை விட, வாழ்வா சாவா பிரச்சனையாகவே இவ்வகை தாக்குதல்களையும் வேவு வேலைகளையும் கூகுள் போன்ற நிறுவனங்கள் பார்க்கும். அதனால்தான் இவ்வளவு ஆர்ப்பாட்டமும். இது ஒரு வியாபார அவசியமே ஒழிய மனித உரிமைமேல் வந்த திடீர் ஆர்வமெல்லாம் இல்லை.

View More கூகுள் கொண்ட கோபம்

திண்டுக்கல்லில் அன்னிய மத ஆக்கிரமிப்பு: சொந்த ஊரில் தமிழ் ஹிந்துக்கள் அகதிகளான அவலம்

நிலத்தகராறு, அதில் விவசாயி கொலை என செய்தி படித்தது நினைவுக்கு வந்தது, ஏதோ சில உண்மைகள் மறைக்கப்படுகின்றனவோ என்று தோன்றியது … தன் கணவனை இழந்து தானும் அடிபட்டு திருமணம் நிச்சயிக்கப்பட்ட தன் மகளின் அனாதரவான நிலையை எண்ணி அழுவதா, சொந்த ஊரில் இந்துக்கள் பட்ட அடியை தட்டிக் கேட்க நாதியற்ற நிலையில் நிற்கும் தன்னையும் தன்னுடன் அடிபட்ட பெண்களையும் எண்ணி அழுவதா, இழந்த கணவனை எண்ணி அழுவதா என அழுது அழுது கண்ணீர் வறண்டு நிற்கும் அந்த சகோதரி.

View More திண்டுக்கல்லில் அன்னிய மத ஆக்கிரமிப்பு: சொந்த ஊரில் தமிழ் ஹிந்துக்கள் அகதிகளான அவலம்

அறம் காக்கப் போராடும் மலேசிய மங்கையர்: பங்காரம்மா,ரேவதி

இது வெறும் செய்தியல்ல. ஒரு அரசின் மதவெறிக்கு எதிராக போராடும் ஒரு இளம் பெண்ணின் உண்மைக் கதை… ங்காரம்மா இஸ்லாமியர் என ஷரியா நீதிமன்றங்கள் தீர்ப்பளிக்கும் பட்சத்தில் அவர் ஹிந்துவானது சட்டப்படி குற்றமாகக் கருதப்படும். அவர் தனது கணவர் மற்றும் குழந்தைகளிடமிருந்து பிரித்து இஸ்லாமிய சீர்திருத்த நிலையத்தில் அடைக்கப்பட்டு மூளைச்சலவை செய்யப்படுவார். பலவித மன-சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்படுவார்.

View More அறம் காக்கப் போராடும் மலேசிய மங்கையர்: பங்காரம்மா,ரேவதி

கீழ்விஷாரம்: சொந்த மண்ணில் திம்மிகளாக வாழ மறுத்த தமிழ் இந்துக்களின் போராட்டம்

தமிழகத்தின் ஒரு பஞ்சாயத்து முழுவதும் பஞ்சாயத்து தலைவர்கள் முதல் வார்டு உறுப்பினர்கள் வரை அனைவரும் இஸ்லாமிய ஜமாத்தால் தேர்ந்தெடுக்கப்படுவதைப் பற்றி நீங்கள் அறிவீர்களா??… திம்மிகளாக வாழ மறுத்து சட்டரீதியாகவும், ஜனநாயக முறையிலும் உறுதியாகப் போராடி வெற்றி பெற்றிருக்கின்றனர் கீழ்விஷாரம் இந்துக்கள். அவர்களுக்கு நமது வாழ்த்துக்கள்!

View More கீழ்விஷாரம்: சொந்த மண்ணில் திம்மிகளாக வாழ மறுத்த தமிழ் இந்துக்களின் போராட்டம்

நான் (சரவணன்) வித்யா.

திருநங்கை – பெயரே நாகரீகமாக இல்லை? இப்படி ஒரு பெயரை அறிமுகம் செய்தவருக்கு திருநங்கைகள் நிச்சயம் நன்றி சொல்ல வேண்டும். இதுபோக அரவாணிகள், மூன்றாம் பாலினம் என்னும் வார்த்தைகளும் பயன்படுத்தப்படுகின்றன. எது வல்லமை உள்ளதோ அது நிற்கும்.

View More நான் (சரவணன்) வித்யா.

வேதாளம் சொன்ன கதை: குமரி மாவட்டத்தில் ஒரு பிள்ளையார் கோவில்

வேதாளம் எள்ளி நகைத்து “மகனே நீ ஏன் இப்படி கஷ்டப்படுகிறாய்? நீ உனக்காக கஷ்டப்படுகிறாயா அல்லது வேறு யாருக்காகவோவா? இந்த உலகத்தில் நன்றி கெட்டவர்கள் உண்டு அவர்கள் உன்னை பயன்படுத்திக்கொண்டு பிறகு அதிகாரத்துக்கு வந்த உடனேயே ஆதாயத்துக்காக உன் எதிரிகளுடன் சேர்ந்து கொண்டு உனது நியாயமான கோரிக்கைகளை கூட நிராகரித்து விடுவார்கள். இதற்கு உதாரணமாக நடந்த ஒரு சம்பவத்தை சொல்கிறேன் கேள் …

View More வேதாளம் சொன்ன கதை: குமரி மாவட்டத்தில் ஒரு பிள்ளையார் கோவில்

மதங்களும் மாற்றுத் திறன் கொண்டவர்களும்

கண்ணனின் கீதைக்கு நிகராக அஷ்டவக்ர கீதை என்ற புகழ்பெற்ற நூலை அருளிய அஷ்டவக்ரர் உடலில் எட்டு கோணல்களைக் கொண்டவர். நவக்ரஹங்களில் ஒரு தெய்வமான சனி பகவான் ஒரு கால் இல்லாதவர்… மிராக்கிள் ஹீலிங் (Miracle Healing) என்றொரு தனி அறிவியலையே இவர்கள் கண்டுபிடித்து வைத்திருக்கிறார்கள். இவர்கள் குறிவைப்பது ஏழை எளியவர்கள், நோயாளிகள் மாற்றுத் திறன் கொண்டவர்கள் போன்றவர்களைத்தான்….

View More மதங்களும் மாற்றுத் திறன் கொண்டவர்களும்