
..அரசன் ஒருவனுக்கு எதை வேண்டுமானாலும் அழிக்கவும், மாற்றவும் சர்வ உரிமை இருக்கிறது. அப்படி இருந்தும் அவன் தவறு செய்தவர்களை மட்டும்தான் தண்டிக்கவேண்டும்; அதுவும் தவறுக்கு ஏற்றபடி கூடுதலோ குறைவோ இல்லாது தண்டனை அமையவேண்டும். அவனிடம் ஏகபோக உரிமை இருக்கிறது என்பதற்காக அவன் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்பது நியாயம் அல்ல. அரசன் மட்டுமல்ல, இந்த நீதி சமூகத்தில் எந்த விதமான உரிமைகளும் இல்லாதவர்களுக்கும் உள்ளதுதான். பிராமணர்கள் தினப்படி செய்யவேண்டிய சந்தியா வந்தனத்திலும், “சூர்யஸ்ச மாமன்யுஸ்ச மன்யுபதஸ்ச மன்யுக்ருதேப்யஹ பாபேப்யோ ரக்ஷந்தாம்” என்று கோபத்தினால் வரும் பாவச் செயல்களைச் செய்யாமல் தவிர்க்கக் கடவுளை வேண்டுவதாக வருகிறது. ..