விதியே விதியே… [நாடகம்] – 2

ஆயா கதை சொல்லு ஆயா – குழந்தைகள் நச்சரிக்கின்றன. ஆயா : ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம். தில்ஷன் (பக்கத்தில் இருக்கும் இன்னொரு குழந்தையிடம்): ரெண்டு ராஜா இருந்தா நாடு தாங்காது…. மதி: எதிரியோட பலம், வியூகம் தெரியாம சண்டை போடற எப்பவுமே முட்டாள்தனம்தான் இல்லையா? ஆயா : ஆனா, இந்த இடத்துல அபிமன்யு எதிரியோட பலம் தெரியாம மோதலை. ஒத்தைக்கு ஒத்தையா நின்னு போராட வேண்டிய இடத்துல ஒருத்தரை அதுவும் சின்னஞ்சிறு பாலகனை ஒரே நேரத்துல பலர் அநியாயமா சுத்தி வளைச்சுக் கொன்னுட்டாங்க. அபிமன்யுவை ஜெயிச்சது வீரத்தினால இல்லை, வஞ்சத்துனால. மகாபாரதத்துல ஒரே ஒரு அபிமன்யு. ஈழத்துல எல்லாருமே அபிமன்யு. வெளியேறும் வழி தெரியாமல் பத்ம வியூகத்தில் மாட்டிக்கொண்ட தேசம் அது…..

மரண தேவன் : தப்பு செய்தவருக்கு தண்டனை என்றால் அதை ஓரளவுக்குப் புரிந்து கொள்ள முடியும்.
பரம்பொருள் : என்ன நீ… புரியாமல் பேசிக்கொண்டே இருக்கிறாய். நல்லது செய்பவர்களுக்கு நன்மை… கெட்டது செய்பவர்களுக்கு தண்டனை என்பதா நம் தர்மம். அது மனிதர்கள் தங்கள் வாழ்க்கையை, வாழத் தகுந்ததாக ஆக்கிக் கொள்ள, தாங்களாக உருவாக்கிய ஒரு கற்பனை….தாக்குப் பிடிக்க முடிந்தவற்றுக்குத் தான் இந்தத் தரணி. நம் தர்மம் அதுவே. இதில் உணர்ச்சிகளுக்கு ஏது இடம்….

மனிதர்களுக்கான தெய்வம், குழந்தைகளைச் சந்திக்கக் கிளம்புகிறது. நெற்றி நிறைய திருநீறை எடுத்துப் பூசிக் கொள்கிறது. கைகளில் ஸ்ரீ சூர்ணம் இட்டுக் கொள்கிறது. தலையில் தொப்பி ஒன்றை அணிந்து கொள்கிறது. சிலுவைக் குறியிட்ட மாலையை கழுத்தில் அணிந்து கொள்கிறது. புத்தனின் பாதக் குறடுகளை அணிந்து கொள்கிறது…

View More விதியே விதியே… [நாடகம்] – 2

ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 3

ஒரு கர்மத்தைச் செய்வதால் அதன் விளைவாக ஒரு குறிப்பிட்ட இடத்தில் கிடைப்பதை நாம் பெறுவது ஆப்ய கர்மம்; கர்மம் செய்வதால் இப்போது இல்லாவிட்டாலும் வேறொரு காலத்தில் கிடைக்கும் என்பது உத்பாத்ய கர்மம்; ஒரு வடிவத்தில் இல்லாவிட்டால் உரு மாற்றி வேறொரு வடிவத்தில் காணலாம் என்பது விகார்ய கர்மம்; ஒரு பொருளின் மேல் உள்ள அசுத்தத்தை நீக்துவதம்மூலன் அந்தப் பொருளை நன்கு காணக்கூடியது சம்ஸ்கார்ய கர்மம்…. இருக்கும் ஆன்மாவை மறைக்கும் உபாதிகளை நீக்க வேண்டும் என்பதற்குத்தான் முயற்சிகள் எல்லாமே…

View More ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 3

ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 2

இறக்காமல் இருப்பதற்கு பிறக்காமல் இருக்க வேண்டும்; அது எப்படி என்று யோசிப்பவன்தான் முமுக்ஷூ என்ற சாதகன்… ஒன்றை அறிவது மட்டுமல்லாது, அந்த அறிவைப் பற்றி அறிவது என்பதில் மனிதன் மற்ற ஜீவராசிகளிடம் இருந்தும் வித்தியாசப்படுகிறான்… தவங்கள் செய்வதாலேயே ஒருவனுக்கு ஆன்மாவைப் பற்றிய அறிவு வளர்ந்துவிடாது. ஆனால் அவை ஆன்மாவைப் பற்றிய அறிவை வளரவிடாது தடுக்கும், நமது முந்தைய பாவச் செயல்களால் நாமே வளர்த்துவிட்டுள்ள, திரைகளை அகற்ற உதவும்… நாம் ஆன்மாவைப் பற்றிய போதத்தின் முதல் படியில் இருக்கிறோம்.

View More ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 2

பாரதியின் சாக்தம் – 5 [நிறைவுப் பகுதி]

கேவலம் ஒரு புவிப்பரப்பை தேவியின் சொரூபமாகக் கருதுவதா என்று நினைக்கும் கடுஞ்சாக்தர்கள் சாக்தத்தின் முக்கியமான கருத்தொன்றை நினைவுப்படுத்திக் கொள்வது நலம்… தம்முடைய வாழ்வியல் நெறியையும், ஆன்மிகக் கொள்கை விளக்கத்தையும் நன்கு நிறுவி ஒரு நூலாக இயற்றுவதற்கு வேண்டிய கால வசதி அந்தப் பெருமகனாருக்கு இல்லாமலே போய்விட்டது… நாம் இப் பாரத மாது நிரந்தர கன்னி யென்பதாகவும், இவளுக்கும் நரை, திரை முதலியன இல்லையென்பதாகவும் மிகுந்த நம்பிக்கை கொண்டிருக்கின்றோம்…

View More பாரதியின் சாக்தம் – 5 [நிறைவுப் பகுதி]