
பயங்கர வாத இயக்கத்திற்கு கழகங்கள் கொடுத்த அரசியல் அங்கீகாரம் என்ற கட்டுரையில் உள்ள கருத்துக்களுக்கு ஆட்சேபம் தெரிவித்து, ஆதாரங்கள் கோரி மனித நேய மக்கள் கட்சியின் சட்ட ஆலோசகர் கடிதம் எழுதியிருந்தார். அந்த ஆதாரங்களை கட்டுரையாசிரியர் இங்கு தொகுத்தளிக்கிறார்… அல்-உம்மா இயக்கத்திலிருந்து பிரிந்து தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் என்ற அமைப்பை தோற்றுவித்தனர், மனிதநேய மக்கள் கட்சி என்பது த.மு,மு.கவின் அரசியல் பிரிவு.. திரு. ஜவாஹிருல்லா சிமியிலும் பொறுப்பில் இருந்தார், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்திலும் பொறுப்பில் இருந்தார்… அவர் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப் பட்ட சம்பவமும் செய்தி ஊடகங்களில் பதிவு செய்யப் பட்ட ஆதாரபூர்வமான தகவல்..