Posts Tagged ‘ மன்மோகன் சிங் ’

அரசியல், பயணங்கள்

70 ஆண்டுகள் காத்திருந்த இனிய நட்பு!

70 ஆண்டுகள் காத்திருந்த இனிய நட்பு!

இந்தப் பயணத்தின் மூலம் இஸ்ரேல் சென்ற முதல் இந்தியப் பிரதமர் என்ற சாதனையை மோடி படைத்துள்ளார். அவரை வரவேற்ற இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, “இது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள். இந்தியப் பிரதமருக்காக 70 ஆண்டுகள் காத்திருந்தோம்” என்று உணர்ச்சிவசப்பட்டுக் கூறினார்... உலகம் முழுவதும் யூதர்கள் வேட்டையாடப்பட்டபோது அவர்களுக்கு புகலிடம் கொடுத்த பாரதத்தின் பிரதமரை இஸ்ரேல் எப்போதும் நன்றியுடனும் அன்புடனும் எதிர்நோக்கி இருந்திருக்கிறது. அதனைப் புரிந்துகொண்டு செயல்படும் அரசுத் தலைமை இந்தியாவில் உருவாக நமக்கு இத்தனை ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது... [மேலும்..»]

அரசியல்

போலி கோஷத்தின் பொல்லாத பின்னணி

போலி கோஷத்தின் பொல்லாத பின்னணி

  ‘ஆசை இருக்கிறது தாசில் செய்ய அதிர்ஷ்டம் இருக்கிறது கழுதை மேய்க்க’ என்ற பழமொழியைக் கேட்டிருப்பீர்கள். இது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, தமிழகத்தை ஆளும் கனவுடன் வலம் வந்துகொண்டிருக்கும் பாமகவுக்கு நிச்சயமாகப் பொருந்தும். பாமகவினர் அண்மைக்காலமாக செய்துவரும் அலப்பறைகளைக் கண்ணுறும் எவரும், சற்றே கதிகலங்கிப் போவார்கள். உண்மையிலேயே அன்புமணிக்கு முதல்வர் கனவு வந்துவிட்டதா? அல்லது, தந்தையின் இயக்கத்தில் முதல்வன் வேடத்தில் அன்புமணி நடிக்கும் ஏதாவது புதிய திரைப்படம் தயாரிக்கும் முஸ்தீபா? “அன்புமணியை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி” என்று எப்படித்தான் நெஞ்சு நிமிர்த்தி அறைகூவல் விடுக்கிறார் ராமதாஸ்? காண்க: அன்புமணியே முதல்வர் வேட்பாளர் பா.ஜ.,வுக்கு ராமதாஸ்... [மேலும்..»]

அரசியல்

காங்கிரஸ்: புயலிலே ஒரு தோணி

காங்கிரஸ்: புயலிலே ஒரு தோணி

முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர் சிங் எழுதியுள்ள சுயசரிதை காங்கிரஸ் கட்சிக்குள் கலகத்தைக் கிளப்பி உள்ளது. 2004-ம் ஆண்டில் சோனியா காந்தியை பிரதமராக விடாமல் தடுத்தது ராகுல் காந்தி தான். சோனியா காந்தி சொந்த விருப்பத்தின் பேரில் பிரதமர் பதவியை துறக்கவில்லை என்று போட்டு உடைத்திருக்கிறார் நட்வர் சிங். இதுவரை, தேடிவந்த பிரதமர் பதவியை மறுத்த தியாகியாக, பாரத தேசத்தைக் காக்கவென்றே இத்தாலியில் பிறப்பெடுத்துவந்த அன்னையாக  காங்கிரஸ்காரர்களால் புகழ் பாடப்பட்டுவந்த சோனியா அம்மையார், உயிரச்சத்திற்குப் பயந்தே அந்தப் பதவியை மறுத்தார் என்பது இப்போது தெரிய வந்திருக்கிறது. “சோனியா காந்தி உண்மையிலேயே தனது மனசாட்சி கூறியதன் காரணமாக பிரதமர்... [மேலும்..»]

அரசியல், தேசிய பிரச்சினைகள்

தேசிய நீதி ஆணையம்: காலத்தின் கட்டாயம்

தேசிய நீதி ஆணையம்: காலத்தின் கட்டாயம்

தற்போதைய தேவை, நீதித்துறையில் தேர்ச்சி மிகுந்த வல்லுநர்கள், மத்திய சட்ட அமைச்சகம், உச்ச நீதிமன்றம், மத்திய ஊழல் கண்காணிப்பகம், எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள், முன்னாள் நீதிபதிகள் அடங்கிய தேசிய நீதி ஆணையம் அமைப்பதே ஆகும். இதன் நடத்துநர்களாக தேசிய நீதி ஆணையத் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, மத்திய சட்ட அமைச்சர் ஆகியோர் இருக்கலாம். இதன் தலைவராக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியே இருக்க வேண்டும். இந்த ஆணையம் ஜனாதிபதிக்கு மட்டுமே பதில் அளிக்கும் அதிகாரம் பெற்றதாக அமைக்கப்படலாம். [மேலும்..»]

அரசியல்

மோடி அரசின் ஆரம்பமே அசத்தல்!

மோடி அரசின் ஆரம்பமே அசத்தல்!

நாட்டின் 15வது பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடியின் ஆரம்பமே அசத்தலாக உள்ளது. தனது பதவியேற்பு விழாவிலேயே தெற்காசிய நாடுகளின் தலைவர்களை அழைத்து பிரமிப்பூட்டிய மோடியின் ஒவ்வொருநாள் நடவடிக்கையும் ஊடகங்களால் பெரிதும் வியந்தோதப்படுகிறது. டி.என்.சேஷனால் தேர்தல் ஆணையத்திற்குக் கிடைத்த மரியாதை போல, இதுவரையிலும் இழந்துபோன பிரதமர் பதவியின் மதிப்பு மோடியால் மீட்கப்படும் காட்சி தெளிவாகவே தென்படுகிறது. பிரதமர் மோடியின் முதல் ஒருவாரகால செயல்பாடுகள் அவர் செல்லும் திசையை தெளிவாகவே காட்டுகின்றன. ‘தனது அரசு ஏழைகளின் அரசாக இருக்கும்’ என்று துவக்கத்திலேயே பிரகடனம் செய்துள்ள பிரதமர் மோடி, அரசியல் கருத்து வேறுபாடுகளை மறந்து அனைவரும் இணைந்து நாட்டை உயர்த்த வருமாறு... [மேலும்..»]

அரசியல்

காங்கிரஸ் தோல்வி: சொல்லப்படாத நான்கு முக்கிய காரணங்கள்

காங்கிரஸ் தோல்வி: சொல்லப்படாத நான்கு முக்கிய காரணங்கள்

தேசத்தை புரிந்த அமைச்சர்கள் இருந்தாலும் கூட அவர்களும் தேர்ந்தெடுக்கப்படாத இந்த நிழல் அமைச்சரவையான என். ஏ.சி.க்குத்தான் அடிபணியும் நிலை... பொதுமக்களோடு சற்றும் தொடர்பில்லாத, அவர்களது அத்தியாவசியத் தேவைகளை சற்றும் புரிந்து கொள்ளாமல் அவர்களை அவமதித்து வந்த திட்டக் கமிஷன் துணைத் தலைவர் அலுவாலியா...எந்த நிலையிலும், பிரதமர் மன்மோகன்சிங் அதிகாரம் படைத்தவராக ஆகிவிடக் கூடாது என்று காங்கிரஸ் கட்சி பார்த்துக் கொண்டது. எனவே அவரையும் பொதுமக்களோடு தொடர்பற்றவாராகவே இருத்திவந்ததது. காங்கிரஸ் கட்சியின் அனைத்துத் தலைவர்களும் அவர் பலவீனமற்றவாராக இருப்பதையே விரும்பினர்... " உலகு தழுவிய ஜிகாதிய பயங்கரவாதம் அல்ல, தேசமெங்கும் பரவியுள்ள பெரும்பாண்மை... [மேலும்..»]

தேசிய பிரச்சினைகள், பொருளாதாரம்

இந்தியப் பொருளாதார வீழ்ச்சி சரியாகுமா?

இந்தியப் பொருளாதார வீழ்ச்சி சரியாகுமா?

மனித வாழ்வுக்கு  அடிப்படையாக விளங்குவது  பொருளாதாரமே ஆகும்.  எனவே நாட்டு மக்களின் வாழ்வாதாரத்துக்கும், முன்னேற்றத்துக்கும் ஏதுவான  சூழ்நிலைகளை உருவாக்கிக் கொடுப்பது அரசின் தலையாய கடமையாகிறது. மேலும் அதற்குத் தேவையான அடித்தளங்களை அமைத்து, பொருத்தமான கொள்கைகளை வகுத்துக் கொடுப்பது ஒவ்வொரு அரசும் செய்ய வேண்டிய  அத்தியாவசியப் பணியாகும். இந்தியப் பொருளாதாரத்துக்கென ஒரு நீண்ட பாரம்பரியம் உள்ளது. உலகின் முதல் பொருளாதார நூலான அர்த்த சாஸ்திரத்தில், பொருளாதாரம் வலிமையாக இருக்க வேண்டியது ஒரு நாட்டுக்கு எவ்வளவு அவசியம், பொருளாதாரம் நன்கு செயல்படுவதற்கு அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறைகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றியெல்லாம்  தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. காலனி ஆதிக்கக்... [மேலும்..»]

அரசியல், வரலாறு

யார் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்?

யார் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்?

5.3.2014-ம் தேதி மகாராஷ்டிரத்தில் உள்ள ஔரங்காபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி வரம்பு மீறிப் பேசியுள்ளார்.  பாரதிய ஜனதா கட்சி தனது பொதுக்கூட்டங்களில் “காங்கிரஸ் கட்சியை ஆட்சியை விட்டு வெளியேற்றுவோம் ” என்று  பேசி வருவதை ஜீரணிக்க முடியாத ராகுல் காந்தி,  மேற்படி பொதுக்கூட்டத்தில்  “இந்தியாவிலிருந்து பிரிட்டீஷாரை வெளியேற்றியது  போல்,  பாஜகவையும் நாட்டை விட்டு வெளியேற்றுவோம்”  என்று கொக்கரித்துள்ளார்.  யார் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்ற் கேள்விக்கு மக்கள் தகுந்த நேரத்தில் பதில் கொடுப்பார்கள். 1947 ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி நாடு விடுதலை பெற்ற தினத்திலிருந்து, இன்று வரை நாட்டிற்கு... [மேலும்..»]

அரசியல், தேசிய பிரச்சினைகள், பொருளாதாரம்

ஐ.மு.கூ ஆட்சி: பத்து வருட பகாசுர ஊழல்கள் – 2

ஐ.மு.கூ ஆட்சி: பத்து வருட பகாசுர ஊழல்கள் – 2

ஒரு பில்லியனராக ஆக, டாட்டாவுக்கு 50 ஆண்டுகள் பிடித்த்து. ஆனால் சோனியாவின் மருமகன் ராபர்ட்வதேராவிற்கு பில்லியனராக மாற வெறும் மூன்று ஆண்டுகள் மட்டுமே பிடித்தன. டி.எல்.எப். விவகாரத்தில் சோனியாவின் மருமகன் பெயர் அடிப்பட்ட போது, அது ஒரு தனிநபர், ஒரு நிறுவனம் சம்பந்தப்பட்டது என காங்கிரஸ் ஒதுங்கிக் கொண்டது. மருமகன் அடித்த கொள்ளையைப் பற்றி இதுவரை திருமதி சோனியா காந்தி வாய் திறக்கவில்லை.... மந்திரி சபையிலேயே யோக்கியமானவர் என பெயர் பெற்றவரும் ராணுவ அமைச்சருமான ஏ.கே. அந்தோனி என்பவர் இருந்தாலும, அவரின் துறையில் ஹெலிகாப்டர் வாங்கியதில் ரூ350 கோடி லஞ்சமாக கொடுக்கப்பட்டது... [மேலும்..»]

அரசியல், தேசிய பிரச்சினைகள், பொருளாதாரம்

ஐ.மு.கூ ஆட்சி: பத்து வருட பகாசுர ஊழல்கள் – 1

ஐ.மு.கூ ஆட்சி: பத்து வருட பகாசுர ஊழல்கள் – 1

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அடித்த கொள்ளை தொகையின் அளவு, நாம் வெளிநாடுகளில் பெற்ற கடனை அடைக்க காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் கொள்ளையடித்த தொகையில் 25 சதவீத கொள்ளை பணத்தை பயன்படுத்தினால் கடன் அடைபடும் என பலர் கூறுகின்றனர்... பாரதிய ஜனதா கட்சி கேள்வி கனைகளை தொடுத்த போது, பிரதமர் உட்பட கேபினட் அமைச்சர்கள் அனைவரும், ஊழல் நடக்கவில்லை என்றே வாதிட்டார்கள். சி.ஏ.ஜி அறிக்கை வெளி வந்த பின்னர் தான் ஸ்பெக்ட்ரம் மோசடி ஊழலில் அரசுக்கு ஏற்பட்ட இழப்பீடு தெரியவந்தது. இதில் ஒரு லட்சத்த்து 76 ஆயிரம் கோடி இழப்பீடு என்ற மதிப்பீடு... [மேலும்..»]

Josh Oliver Authentic Jersey