Posts Tagged ‘ மம்தா பானர்ஜி ’

ஜெயிக்கப் பிறந்தவர்!

December 11, 2016
By

ஜெயலலிதா ஒரு பெண்; வெளிப்பார்வைக்கு இறுகிய தலைவியாகக் காணப்பட்டாலும், இளகிய மனம் கொண்ட பெண். எனவே பணிந்தவர்களை அவர் மன்னித்தார். ஆண்களின் கொடுமையை உணர்ந்த பெண் என்பதால், அவர்களின் சரணாகதியை தனது அரசியல் அதிகாரத்தின் அடையாளமாக்கினார். அது ஒரு வகையில் ஆண்களிடம் வெறுப்புணர்வையும் பெண்களிடத்தில் பெருமிதத்தையும் ஏற்படுத்தியது. ஜெ.யின் வெற்றிக்கு பெண்களின் அமோக ஆதரவு அடிப்படையானதாக இருந்ததை இந்தக் கண்ணோட்டத்தில்தான் காண வேண்டும். அந்தக் காலகட்டத்தில்தான் அவர் அன்பு சகோதரி என்ற நிலையிலிருந்து அம்மாவாக உயர்ந்தார்; உயர்த்தப்பட்டார். மழலைப் பருவத்தில் அன்புக்கு ஏங்கிய சிறுமியாகவும், குமரிப் பருவத்தில் ஆணாதிக்கத் திரையுலகில் அலைக்கழிந்த நடிகையாகவும், அரசியலின் நாற்றங்கால் பருவத்தில்... [மேலும்..»]

கருப்புப்பண ஒழிப்பு: யாருக்கு நெருக்கடி?

November 20, 2016
By
கருப்புப்பண ஒழிப்பு: யாருக்கு நெருக்கடி?

உயர் மதிப்புள்ள ரூ. 500, ரூ. 1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் அறிவித்த நவ. 8-ஆம் தேதி இரவிலிருந்தே நாட்டில் பல அரசியல் தலைவர்களுக்கு தூக்கம் பறிபோய்விட்டது. அவர்களில் பலர் தற்போது என்ன பேசுகிறோம் என்பதே தெரியாமல் பிதற்றத் துவங்கிவிட்டனர். கருப்புப் பணத்தைப் பதுக்கியவர்கள் மீதான அரசின் நடவடிக்கைக்கு எதிராகக் கூப்பாடு போடும் இந்த எதிர்க்கட்சித் தலைவர்களின் நடவடிக்கையிலிருந்தே, மோடி கொடுத்த அடி இவர்களை எந்த அளவுக்கு பாதித்திருக்கிறது என்பதை உணர முடிகிறது. இவர்களில் தலையாயவர், தில்லி மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால். இந்திய வருவாய்த் துறை பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று அரசியலுக்கு வந்த... [மேலும்..»]

சாரதா மோசடி: மக்களைச் சுரண்டிய பிரமுகர்கள்

December 22, 2014
By
சாரதா மோசடி: மக்களைச் சுரண்டிய பிரமுகர்கள்

தற்போதைய அரசியல் வானில் சாரதா நிதி நிறுவன சூறாவளியின் தாக்கம் சற்று அதிகமாகவே உள்ளது. மேற்கு வங்கத்தில் நிலைகொண்ட இந்த  மோசடிப் புயலின் பாதிப்பு இப்போது தில்லியில் மையம் கொண்டிருக்கிறது. இந்த நிதி நிறுவன மோசடியில் தொடர்புடையவர்கள் பெரும்பாலோர் திரினாமூல் காங்கிரஸ் பிரமுகர்களாகவே இருப்பதால், அக்கட்சியின் தலைவியும் மேற்கு வங்க மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி நிலைகுலைந்து இருக்கிறார். இந்த மோசடியில் அவர் இதுவரை நேரடியாகக் குற்றம் சாட்டப்படவில்லை என்றாலும், விசாரணை வட்டத்துக்குள் வெகு விரைவில் அவரும் வரக்கூடிய நிலை காணப்படுகிறது. எனவே, இப்போதே தற்காப்புக்காக காற்றில் கத்தி வீசத் துவங்கிவிட்டார். சாரதா நிதி நிறுவன மோசடியை... [மேலும்..»]

பர்துவான் : மதச்சார்பின்மையின் பெயரால் பயங்கரவாதம்

மேற்கு வங்கம், பர்துவான்: குடிசை தொழிலாக வெடிகுண்டு தயாரித்து கொண்டிருந்த பயிற்சி பெற்ற பீவிக்கள், அலீமாக்கள் மற்றும் இதர ஜிகாதிகள். வெடிக்க தயார் நிலையில் கைப்பற்றப்பட்ட 1050 டெட்டனேட்டர்கள், 55 பிளாஸ்டிக் வெடிகுண்டுகள், 59 கையெறி குண்டுகள், ரிமோட் கண்ட்ரோல் ஐஇடிக்கள் மற்றும் ஆர்டிஎக்ஸ் வெடிபொருட்கள். எதிர்பாராத விதமாக உள்ளுக்குள்ளேயே ஒரு குண்டு வெடிப்பு நடந்த சிறிது நேரத்தில் வந்த மாநில காவல்துறையினர் அவசரம் அவசரமாக கைப்பற்றிய வெடி பொருட்களை மதியத்திற்குள் ஒரு ஏரியில் வைத்து வெடிக்க செய்து தடயத்தை அவசரமாக அழித்தனர். இந்த கேவலத்தை மதச்சார்பின்மையின் பெயரால் மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஆணையிட்டிருந்தார்...... [மேலும்..»]

பாஜக சாதிக்க இயலாத மாநிலங்கள்- ஒரு மதிப்பீடு

பாரதப் பிரதமராக மோடியை ஏகோபித்த ஆதரவுடன் இந்தியா தேர்ந்தெடுத்துவிட்டது. இதுவரை காணாத வகையில் பாஜக மட்டுமே தனித்து 282 இடங்களில் வென்றதுடன், மொத்தத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 336 இடங்களில் வென்றுள்ளது. அதேசமயம், தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், ஒடிசா மாநிலங்களில் மட்டும் பாஜகவால் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியவில்லை. இம்மாநிலங்களின் அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்க வேண்டிய தருணம் இது. இம்முறை நாடு முழுவதுமே பாஜக வலுவாகக் காலூன்றி உள்ளது. மோடியே சொன்னது போல, இது காங்கிரஸுக்கு எதிரான அலை மட்டுமல்ல, பாஜகவுக்கு ஆதரவான அலையும் கூட. அதனால் தான் இதுவரை கணக்கைத் துவங்காத பல... [மேலும்..»]

முகர்ஜியை ஜனாதிபதி ஆக்கிய பானர்ஜி

ஐ.மு.கூட்டணி ஆட்சியைப் பொறுத்த வரை, கட்சிக்கு சோனியா தலைவராகவும், ஆட்சிக்கு நிழல் தலைமை வகிப்பவராக முகர்ஜியும் இருந்தனர். எனவே தான் முகர்ஜியை வேவு பார்க்கும் பணிகளில் சோனியா சத்தமின்றி ஈடுபட்டுவந்தார்... பானர்ஜி மட்டும் கலாமை தனது விருப்பத் தேர்வாக முன்வைக்காமல் இருந்திருந்தால், அன்சாரியை ஜனாதிபதி ஆக்கி இன்னொரு பொம்மையை அங்கு அமர்த்தி இருப்பார் சோனியா. அதற்கு வழி இல்லாமல், இப்போது தன்னிச்சையாக இயங்கும் பிரணாப் முகர்ஜியை சோனியாவே அறிவித்திருக்கிறார்... கலாமை மீண்டும் தேர்வு செய்யும் அற்புதமான வாய்ப்பு அவர்கள் முன்பு வந்தது. ஆனால், குறுகிய அரசியல் லாபங்களுக்காகவும், தனிப்பட்ட அரசியல் அபிலாஷைகளுக்காகவும் இந்த வாய்ப்பை தவற... [மேலும்..»]

மக்கள் வழங்கிய மகத்தான தீர்ப்புகளின் பின்னணி – ஓர் அலசல்.

ஜனநாயகத்தில் தேர்தல்கள் வகிக்கும் பேரிடத்தை உணர, அண்மையில் நடந்த ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகளைக் காண வேண்டும்... புத்ததேவை வீட்டுக்கு அனுப்ப முடிவெடுத்துவிட்ட மக்களுக்கு, பாஜகவை திரும்பிப் பார்க்கவும் நேரமில்லை... மாநிலத்தில் காங்கிரஸ் அல்லாத கூட்டணி ஆட்சி அமைந்திருக்கும். அந்த வாய்ப்பை எதிர்க்கட்சிகள் தவற விட்டுவிட்டன... ராகுலின் பிரசாரமே இடது முன்னணிக்கு இறுதிநேர ஆசுவாசமாக அமைந்தது... பாஜக, ஜெயலலிதாவை எதிர்த்தும் பிரசாரம் செய்திருக்க வேண்டும்... [மேலும்..»]

பா.ஜ.க. கைவிட்ட ‘சமரசதா’

ராகுலின் பிறந்த நாளை சமரசதா தினமாகக் கடைப்பிடிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது என்ற செய்தியைக் கேட்டு மனதில் மகிழ்ச்சி பொங்கியது. [மேலும்..»]