அஞ்சலி: மலர் மன்னன்

இரண்டு நாட்கள் முன் இருக்குமா? மலர்மன்னனிடமிருந்து வந்தது தொலை பேசி அழைப்பு ஒன்று. அவருக்கு என்ன பதில் சொல்வது என்று தயங்கிக் கொண்டே தொலை பேசியை எடுத்தேன். சந்தோஷமாக சிரித்துக்கொண்டே, ”உங்க ரங்கநாதன் தெரு கட்டுரை நம்ம சென்னையில் வந்திருக்கு இந்த மாதம். பாருங்கோ நெட்லே கிடைக்கும். அச்சிலே வரதுக்கு நாளாகும்” என்றார். ”பாக்கறேன். ஆனால் நெட் கனெக்‌ஷன் போயிடுத்து” என்று கொஞ்சம் நிம்மதி அடைந்து அவருக்கு பதில் சொன்னேன். அவருக்கும் எனக்கும் இடையே சுமார் இருபது நாட்களுக்கும் மேலாக அவருடைய புத்தகம் “திராவிட இயக்கம், புனைவும் உண்மையும்” பற்றித் தான் பேச்சு. அது பெற்றுள்ள வரவேற்பு பற்றி அவருக்கு ரொம்ப சந்தோஷம். ”ராமகோபாலன் பத்து காபி வாங்கிண்டு போயிருக்கார். அவரைச் சுத்தி எல்லாருக்கும் கொடுக்கறதுக்கு” என்று. சொன்னார். புத்தகம் ஸ்டாலுக்கு வரதுக்கு முன்னாலேயே நெட்லேயே எல்லாம் வித்துப் போச்சாம் என்று ஒரு செய்தி. ”இனிமே மறுபடியும் அச்சடிச்சு எனக்கு எப்போ காபி கொடுக்கப் போறாளோ தெரியலை,” என்று ஒரு நாள். “வைரமுத்து, கருணாநிதிக்குக் கூட இவ்வளவு வரவேற்பு இருந்ததா கேள்விப்படலையே ஸ்வாமி, எதுக்கும் ஜாக்கிரதையா இருங்கள். அரவிந்தன் புத்தகத்துக்கு நடந்தாப்போலே, பெரியார் திடல்லே கூட்டம் போடுவாங்க உங்களைத் திட்டறதுக்கு. இல்லாட்டா, ராமமூர்த்தி புத்தகத்து பதில் கொடுத்தாப்போல, உங்களுக்கு ஒரு 400 பக்கத்துக்கு பதிலடி கொடுக்க வீரமணி தயார் பண்ணிக் கணும்” என்று இப்படி ஏதோ பேசிக்கொள்வோம். பத்ரி இந்த புத்தகத்தை எழுதச்சொல்லி இவர் எழுதத் தொடங்கிய காலத்திலிருந்து இந்த தொலை பேசி சம்பாஷணை தொடர்ந்தது. புத்தகம் கைக்கு வந்ததும் எனக்கு ஒரு பிரதி அனுப்பி வைத்திருந்தார். அதிலிருந்து நான் அதைப் படித்தேனா என்று கேள்விகளுக்கும், படித்து விட்டேன் என்றதும் எப்படி இருக்கிறது புத்தகம்? என்றும் தொடர்ந்து கேள்விகள், பின்னர் எழுதத் தொடங்கியாயிற்றா?” என்று கேள்விகள் கேட்டு தொலை பேசி மணி அடித்தவாறு இருக்கும்.
ஒவ்வொரு தடவையும் திண்ணையில் அவர் எழுதும் கட்டுரைகள் மாத்திரம் அல்ல, பின்னூட்டங்கள் பற்றியும் கேட்பார். எனக்கு அவர் சளைக்காமல் காவ்யா, சுவனப்ரியன் (இப்படி அனேகர்), இவர்களின் விதண்டா விவாதங்களுக் கெல்லாம் பதில் அளித்துக்கொண்டிருப்பது அவர் தன் நேரத்தை வீணடிப்பதாக எனக்குப் படும். நான் சொல்வேன். ஆனால் அவர் கேட்கமாட்டார். ”எழுதி வைப்போம். இன்னம் படிக்கிறவர்கள் இருக்கிறார்களே, அவர்களுக்கு இது போய்ச் சேராதா,” என்பார். இந்த தீவிர முனைப்பும் சளைக்காத உழைப்பும், விசாலமான அனுபவம், வாசிப்பு, உற்சாகம் மிகுந்த துடிப்பு எல்லாம் அவரிடம் பார்த்து நான் பொறாமைப் பட்டதுண்டு. மேலும் மிகவும் மென்மையான சுபாவம். யாரையும் கடிந்து கொள்ள மாட்டார். சீற்றம் என்கிற சமாசாரம் அவரிடம் இருந்ததில்லை. தார்மீக காரணத்துக்கானாலும் சரிதான்….

View More அஞ்சலி: மலர் மன்னன்

மலர்மன்னன் இறைவனடி சேர்ந்தார்

தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர், அரசியல் செயல்பாட்டாளர், இந்துத்துவ போராளி, ஆன்மிகவாதி என்று…

View More மலர்மன்னன் இறைவனடி சேர்ந்தார்

திராவிட இயக்கம்: புனைவும் உண்மையும் – புதிய நூல்!

உண்மையில், திராவிட இயக்கம் என்பதாக ஒன்று இருந்ததுண்டா? அப்படியே இருந்தாலும், அதன் நூற்றாண்டைக்…

View More திராவிட இயக்கம்: புனைவும் உண்மையும் – புதிய நூல்!

நமக்கு எதற்கு வெ.சா.?

[…]வெசாவின் கட்டுரைகளில் நம் தலையில் அடித்து விழிப்புறச் செய்வது ‘பான்:ஸாய் மனிதன்’; 1964 இல் எழுத்து இதழில் வெளியானது. இறுதியாக இப்படி முடியும்: “ஒரு அடிப்படையான சாதாரண கேள்வி கேட்க எனக்கு உரிமை அளிப்பீர்களா? எருமைக்கு எதற்கு நீச்சுக்குளம்?” அந்தக் கட்டுரைக்குள் இருக்கும் கோபம் ஆதங்கம் பரவலாக தமிழனது மூளையில் இன்னும் இயங்கும் பாகங்களை சென்று சேர்ந்திருந்தால் தமிழ்நாட்டு ரசனை கொஞ்சமாவது ஏற்றமடைந்திருக்கும்.[…]

View More நமக்கு எதற்கு வெ.சா.?

திமுக உருவானது ஏன்? – மலர்மன்னன்

ஈ.வே.ரா என்றோ, கருணாநிதி என்றோ அவரவர் பெயரிலேயே குறிப்பிடுவது பண்பாடற்ற செயலாக தமிழர்களுக்கு தெரியப்படுத்தப் பட்டுள்ளது. மனிதர்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு பட்டங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. பட்டங்களைத் தாண்டி மனிதர் அறியப்படுவது தடைப்பட்டுள்ள சூழலில் சரித்திரமும் உண்மையும் செலாவணியற்றுப் போயுள்ளன. யாரும் எப்படி அறியப்படவேண்டும் என்பது நமக்குச் சொல்லப்படுகிறது

View More திமுக உருவானது ஏன்? – மலர்மன்னன்

கண் விழித்த கானகம்: புத்தக விமரிசனம்

கதாநாயகன் பிர்ஸா முண்டா தன்னை ‘மலையிலிருந்து வந்தவன்’ என்று சொல்லிக் கொள்கிறான். உலகத்தில் உள்ளவற்றில் சிறந்தவை எல்லாமே மலையிலிருந்துதான் வரும்… கடற்கரையில் காலார நடந்து பின் வீடுவந்து கால் அலம்பிய பின்னும் விரலிடுக்கில் சிக்கி உறுத்தும் மணல்போல, கதாபாத்திரங்கள் படித்து முடித்த பின்னும், நம்மனதில் புகுந்து உறுத்துகின்றன.

View More கண் விழித்த கானகம்: புத்தக விமரிசனம்

கலை, இலக்கியம்: மரபு மீறலும் மரபு சிதைத்தலும

திண்ணை (டிசம்பர்-27, 2007) இதழில் முதுபெரும் எழுத்தாளர் மலர்மன்னன் அவர்கள் எழுதிய அருமையான…

View More கலை, இலக்கியம்: மரபு மீறலும் மரபு சிதைத்தலும