குற்றாலக் குறவஞ்சி: ஓர் இலக்கிய அறிமுகம்

காதல் நோயால் வருந்தும் தலைவியைத் தேடிக் கொண்டு குறத்தி வருகிறாள். தங்களது குற்றால மலையின் அழகையும் வளத்தையும் வர்ணித்து அவள் பாடும் பாடல்கள் அற்புதமானவை. இன்றைய பொதுப்பயன்பாட்டில் குறவன், குறத்தி ஆகிய சொற்களை நாகரீமில்லாத காட்டுமிராண்டி மக்களைக் குறிப்பது போலப் பயன்படுத்துகிறோம். ஆனால் 200 ஆண்டுகளுக்கு முன்பு கூட, மலைவாழ் சாதியினரான குறவர்கள் தங்களது குலத்தின் கீர்த்தியைப் பெருமிதத்துடன் எடுத்துரைப்பதை இந்த நூலில் காண முடிகிறது: “அருள் இலஞ்சி வேலர்தமக்கு ஒருபெண்ணைக் கொடுத்தோம் – ஆதினத்து மலைகளெல்லாம் சீதனமாக் கொடுத்தோம்”… குறி சொல்வதற்கு முன் தெய்வ வணக்கம் செய்கிறாள் குறத்தி. சிவபெருமான், உமையம்மை தொடங்கி பன்றி மாடன், பிடாரி வரை அனைத்து தெய்வங்களையும் துதிக்கிறாள். வரலாறு, சமூகவியல், பண்பாடு குறித்த எந்த ஆழ்ந்த புரிதலும் இல்லாமல் சிறுதெய்வம் பெருந்தெய்வம் அது இது என்று தமிழ்நாட்டு “ஆய்வாளர்கள்” கூறும் ஆதாரமற்ற கற்பனைக் கோட்பாடுகளை எல்லாம் தவிடுபொடியாக்குவதாக உள்ளது அவளது துதிப்பாடல்…

View More குற்றாலக் குறவஞ்சி: ஓர் இலக்கிய அறிமுகம்

அருணையின் கருணை

ஒரு சாதாரணமான இரும்புக் குண்டு காந்த சக்தியுடைய இரும்புக் குண்டைச் சுற்றி வந்தால் அச்சாதாரண இரும்புக் குண்டு காந்தக் குண்டாக மாறுவதுபோல், சாதாரண மனம் (அதாவது சக்தி) சிவமாகிய திருவண்ணாமலையை கிரிவலம் வந்தால் முடிவில் மனம் சிவத்தில் கலந்து சிவமேயாகும்… பக்தியுடன் ஒருமைப்பட்ட மனதுடனும், இறைவனிடத்தில் நம் தேவைகளைப் பற்றி ஏதும் விண்ணப்பிக்காமல் கிரி வலம் செய்தோமானால் நம் தூல வாழ்விற்கும், ஆன்மீக வாழ்விற்கும் தேவையான பொருளும், அருளும் நம் பக்குவத்திற்கு ஏற்ப கொடுத்தருளுவார்.

View More அருணையின் கருணை

தேவன்குறிச்சி – சிறுமலையில் பெருந்தெய்வங்கள்

தே. கல்லுப்பட்டியிலிருந்து நடந்தும் (3 கி. மீ) அல்லது நகரப் பேருந்திலும் செல்லலாம். மலையை ஒட்டிய பாதை. உங்கள் இடப்புறம் ஒரு குட்டை. தண்ணீர் நிறைந்திருக்கும் நேரம் அதில் ஒரு ஆமை மூழ்கி இருப்பதுபோலவும் அதன் தலையும், ஓடும் மட்டும் வெளித்தெரிவதுபோலவும் தெரியும் ஒரு பாறை இருக்கும்.. மலை ஏறும் அனுபவம் மிக ரம்மியமான ஒன்று. கடைசி ஐந்து நிமிடங்கள் மலை மிகவும் செங்குத்தாகச் செல்லும். செல்லும் வழியெங்கும் விதவிதமான செடிகளைக் காணலாம்.

View More தேவன்குறிச்சி – சிறுமலையில் பெருந்தெய்வங்கள்