தன்னுடைய அடிமைகளாக சேவகம்புரிகிற ஹிந்து ராஜாக்களைப் போல சிவாஜியையும் சாதாரணமாக எடைபோட்டார் ஔரங்கஸிப். ஒரு ஹிந்து அரசனுக்குத் தான் மரியாதை தருவதா என்கிற அடிப்படைவாத மனோபாவமே அவரது அழிவுக்கும், முகலாய சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக்கும் அச்சாரம் போட்டது என்பதனை அந்த நேரத்தில் அவர் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை. சிவாஜிக்கு உரிய மரியாதைதந்து அவரைக் கவுரவித்திருந்தால் ஔரங்கஸிப்பிற்குத் தென்னிந்தியாவில் ஒரு பெரும் சக்தி துணையாகக் கிட்டியிருக்கும்.