Posts Tagged ‘ மாநில முன்னேற்றம் ’

காவிரி மேலாண்மை வாரியமும் மத்திய பாஜக அரசும்

ஆறு வாரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது என்பதே தவறு. இது முழுக்க முழுக்க தமிழ் மீடியாக்களின் புரிதலில் ஏற்பட்ட கோளாறு அல்லது விஷமப்பிரச்சாரம். உச்சநீதிமன்றம் ஆறுவார காலத்தில் ஒரு செயல்திட்டத்தை உருவாக்கச்சொன்னது. அவ்வளவுதான். இதை ஆரம்பம் முதலே மக்களிடமும் மீடியாக்களிடமும் தெளிவாக விளக்காதது தமிழக பாஜகவின் தவறு.. அதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட மாநிலங்கள் தங்கள் வசம் உள்ள அணைகளின் கட்டுப்பாட்டை நதிநீர் ஆணையத்தின் வசம் ஒப்படைக்க ஒத்துக்கொள்ள வேண்டும். சம்பந்தப்பட்ட எந்த மாநிலமும் இதற்குத் தயாராக இல்லை. கர்நாடகம் , ஆந்திரம் , கேரளம் மட்டுமல்ல,... [மேலும்..»]

தில்லி சட்டசபைத் தேர்தல் – ஒரு அலசல்

திட்டமிட்ட ஒருங்கிணைந்த வெகுஜன மக்கள் தொடர்பை இலக்காகக் கொண்ட தேர்தல் ப்ரசாரம். ஆப்புக்கட்சி இந்த யுக்தியை முழுமையாக தில்லி தேர்தலில் உபயோகித்துள்ளது. பாஜக தரப்பில் இதன் சுவடு கூட காணப்படவில்லை என்பது கசப்பான உண்மை... ஃபோர்டு ஃபவுண்டேஷன், பரங்கிய க்றைஸ்தவ தேவாலயங்கள், இஸ்லாமிய அடிப்படைவாதிகள் போன்றோரின் பணக்குவியல்கள் மற்றும் ஆசீர்வாதப் பின்னணியில் ஹிந்துஸ்தான அரசியல் அரங்கில் மூக்கறுபட்ட போலி மதசார்பின்மையை தாத்காலிகமாக மீட்டெடுத்து ஆட்சியைக் கைப்பற்றியுள்ளார் ஸ்ரீ கேஜ்ரிவால்... உண்மை பாதி உண்மை போன்று காட்சியளிக்கும் பொய் பாதி போன்ற காரணிகள் - லவ் ஜிஹாத், கர்வாப்ஸி, த்ரிலோக்புரி மற்றும் பவானா போன்ற சில... [மேலும்..»]

டெல்லி ஏன் முழு மாநிலமாக அங்கீகாரம் பெறவில்லை?

டெல்லியில் தான் அனைத்து தேசிய அலுவலகங்களும், பன்னாட்டின் அலுவலகங்களும் உள்ளன என்பதும், தலைநகரின் பாதுகாப்பு, தேசத்தின் இமேஜை மற்ற நாடுகளுக்குக் காண்பிக்க, தலைநகரின் சட்ட ஒழுங்கைக் காக்க, தலைநகரின் மேம்பாட்டில் நலம் செலுத்த , நாட்டின் அனைத்து பெருந்தலைவர்களும் வசித்து வருவதால் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, மற்ற நாடுகளின் embassy இங்குள்ளது என பல காரணங்களை முன்வைத்தே இதுவரையிலான மத்திய அரசுகள் டெல்லியை முழு மாநிலமாக அறிவிக்காமல் உள்ளது...முழு மாநிலமாக அறிவிக்க சட்டத் திருத்தம் தேவை. அதை பாராளுமன்றத்தில் வெற்றி பெற்றே நிறைவேற்ற இயலும். அதுவரையில் டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கப்பட இயலாது.... [மேலும்..»]

மோடி – மகத்தான மன்னன்! முன்னேறும் முதல்வன்!

November 17, 2010
By

நற்சான்றிதழைத் தன்னுடைய அலுவலகத்தில்- தன் அறையில்- மாட்டி வைத்துவிட்டு, ஆரவாரமின்றி, அமைதியாகத் தன்னுடைய பணிகளைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார் முதல்வர் மோடி... பல முன்னேற்றத் திட்டங்களைச் செயல்படுத்துவதால், குஜராத் முஸ்லிம்கள் பா.ஜ.க நோக்கி வரத்தொடங்கிவிட்டனர்... மோடி பெற்றுள்ள அமோக வெற்றி, காங்கிரஸ் மற்றும் போலி மதச்சார்பின்மை பேசும் அரசியல் கட்சிகள், ஊடகங்கள் ஆகியவற்றுக்கு விழுந்துள்ள மறுக்கமுடியாத, மறக்கமுடியாத அடி... [மேலும்..»]