
உலகெங்கும், வரலாற்றில் கொடுமைகளுக்கு இரையான மக்களையும், சமூகங்களையும் நினைவில் நிறுத்த வேண்டும் என்ற அறிவார்ந்த கொள்கை செயல்படுகிறது, ஆனால், இந்தியாவிலோ, (இடதுசாரித் தரப்பின் ஆதிக்கத்தால்), வரலாற்றில் கொடுமைகளுக்கு இரையாகி மடிந்தவர்கள், அவர்களது நினைவுகள் மறக்கடிக்கப் படுவதன் மூலமும், சில சமயங்களில் இழிவு செய்யப் படுவதன் மூலமும் இரண்டாவது முறையாக சாகடிக்கப் படும் அவலம் நிகழ்கிறது… மாற்றுக் கருத்து கொண்ட இந்திய வரலாற்றாசிரியர்களை அறிவுபூர்வமாக விமர்சிப்பதற்குப் பதிலாக, இடதுசாரித் தரப்பு அவர்களை தேசியவாதிகள் என்றோ வகுப்புவாதிகள் என்றோ முத்திரை குத்தி நிராகரிப்பதையே வழக்கமாகக் கொண்டுள்ளது. (காங்கிரசின்) அரசியல் ஆதரவு மூலமாக திணிக்கப் பட்ட கருத்துகளுக்கு ஒத்து ஊத மறுத்ததனால், பல திறமையுள்ள கல்விப்புல அறிஞர்கள் பாதிக்கப் பட்டு, ஒதுக்கி வைக்கப் பட்டனர். நல் வாய்ப்புகளை இழக்குமாறு செய்யப் பட்டனர்…