ஸ்ரீமத் ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி – 5

ஒரு வீட்டில் ஒரு விசேஷம் நடக்கப்போகிறது என்றால் வீட்டில் உள்ள அனைவரையும் தவிர மற்ற உற்றார், உறவினர்களுடன் நண்பர்களும் அதற்கு இருக்க வேண்டும் என்று அந்த வீட்டின் தலைவர் விரும்புவதுதான் சாதாரணமாக நடக்கக்கூடிய விஷயம். ராமனுக்குத் தசரதர் மனத்தில் ஒரு தனி இடம் உண்டு என்றாலும், நாட்கள் கழிந்துப் பிறந்ததால் அவருக்கு நான்கு மகன்கள் மீதுமே மிக்க வாஞ்சை உண்டு. அதேபோல மற்ற மூன்று சகோதர்களுக்கும் ராமர் பெருந்தன்மை கொண்டவர், அனைவர்க்கும் மூத்தவர் என்று மதிப்பும், மரியாதையும் அவர் மீது நிறையவே உண்டு. இவ்வளவு இருந்தும் அவசரம் அவசரமாக விழாவிற்கான ஏற்பாடுகள் நடந்ததென்றால் அதை நாம் ராமராக அவதரித்துள்ள இறைவனின் லீலையாக இருக்கவேண்டும் என்றுதான் நினைக்க முடியும்…. ராமரை எப்படியும் திருப்பி அழைத்து வருவதாகச் சூளுரைத்துவிட்டு, துயரமுற்ற மக்கள் பலரையும் அழைத்துக்கொண்டு பரதன் வனத்திற்குச் சென்றான். இவ்வாறான தனது மகன் பரதனின் உண்மை உணர்வைப் புரிந்துகொண்ட கைகேயியும் தனது இயல்பான நற்குணங்களைத் திரும்பப் பெற்றாள்…

View More ஸ்ரீமத் ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி – 5

கம்பனும், வால்மீகியும் – இராமாயண இலக்கிய ஒப்பீடு

இராமகாதையைத் தமிழில் வடித்தெடுக்கும் பொது, கற்பிற் சிறந்த சீதையும், ‘பிறன் மனை நோக்காப் பேரறிவாளனும்’, ஒரு மனைவி உறுதியாளனுமான இராமனும், ஒருவரிடத்தில் மற்றொருவர் உள்ளத்தைப் பறிகொடுத்தால்தான் தமிழ் மரபுப்படி வடிவமைக்க இயலும் என்று களவியலையும், கம்பர் தனது இராமகாதையில் புகுத்தினார். முழுமையான களவு நடந்த பின்னர்தான், மாற்றுக் குறையாத கற்பு இருவரிடமும் நிலைக்கும் என்று கம்பர் முடிவு செய்திருக்க வேண்டும். அதுதான் இராமன்-சீதையின் முதற் சந்திப்பையும், கண்டதும் கொண்ட காதலையும் விவரித்து, இருவரின் கற்புக்கும் அடித்தளம் அமைத்திருக்க வேண்டும். மேலும், கடவுளர்களின் அவதாரங்களாகக் கம்பரால் எண்ணப்பட்ட இராமனும், சீதையும், மனித உருவில்தான் காதல் என்ற நுட்பமான உணர்வைப் பெற இயலும் என்ற எண்ணமும் அவருக்கு இருந்திருக்கக் கூடும். அதுவும் இன்னொரு காரணமாக இருந்திருக்கலாம் அல்லவா? மூலத்தை மாற்றினாலும், கவிச்சக்கரவர்த்தி கம்பன் எந்த உயர்வான எண்ணத்துடன் அவ்வாறு செய்தார் என்று நம்மால் பகுத்து அறிந்து கொள்ள முடிகிறது.

View More கம்பனும், வால்மீகியும் – இராமாயண இலக்கிய ஒப்பீடு