Posts Tagged ‘ மின்னூல் ’

மூத்தாப்பாட்டி சொன்ன கதைகள்

இக்கதைமுறையை மீட்டெடுப்பதும் இவை போன்ற கதைகளை மீண்டும் சிறுவர்களுக்கு அறிமுகப்படுத்துவதும் நம் பழம் தலைமுறையையும் அவர்களது மதிப்பீடுகளையும் மீட்டெடுக்கும் என்று நம்புகிறேன். மேலைநாட்டில் எழுதப்படும் கிறித்துவ சார்பான புராண/மாயாஜாலக் கதைகள் கொண்டாடப்படுகின்றன. நம் ஊரிலும் அதே கதைகளைக் கொண்டாடுகிறார்கள். ஆனால் அதுவே நம் மரபான கதைகள் என்றால் இவர்கள் இன்னொரு நிலைப்பாட்டுக்குப் போய்விடுகிறார்கள். இந்த இரட்டை நிலைப்பாட்டை முதலில் நாம் புரிந்துகொண்டால்தான் இக்கதைகளுக்கு மீண்டு வரமுடியும். அதுவே இக்கதைகளின் நோக்கம்... என் மகனுக்கும் மகளுக்கும் என் அண்ணாவின் குழந்தைகளுக்கும் பற்பல கதைகளைச் சொல்லி இருக்கிறேன். அவர்கள் விழிவிரியக் கேட்பதைப் பார்ப்பதே பேரானந்தம். அதே பேரானந்தத்தை இக்கதைகளைப் படிக்கும்... [மேலும்..»]

அருட்செல்வப் பேரரசனின் முழுமஹாபாரதச் சிறுகதைகள்

வியாச மகாபாரதத்தை முழுமையாக தமிழில் மொழிபெயர்த்து 2013ம் ஆண்டு முதல் தனது இணையதளத்தில் பதிப்பித்து வரும் செ.அருட்செல்வப் பேரரசன், அண்மையில் மகாபாரதத்தில் உள்ள தனிக்கதைகளை மின்னூல்களாகவும் (E-books) வெளியிட்டிருக்கிறார். இதுவரை உதங்க சபதம், கருடனும் அமுதமும், நாகவேள்வி, நாகர்களும் ஆஸ்திகரும், துஷ்யந்தன் சகுந்தலை, யயாதி ஆகிய நூல்கள் வந்துள்ளன. இவற்றை எளிய வடிவில் கதைகளாக மட்டுமே படித்து அறிந்த வாசகர்களுக்கு, வியாச மகாரபாரத்தில் உள்ளதன் நேரடியான வடிவத்தை வாசிப்பது என்பது முற்றிலும் புதிய அனுபவமாக இருக்கும். இவற்றுக்குக்... [மேலும்..»]

மோடியின் திருச்சி உரை டி.வி.டி. தயார்!

மோடியின் திருச்சி உரை டி.வி.டி. தயார்!

தமிழகத்தின் திருச்சியில் ‘இளந்தாமரை மாநாடு’ செப்டம்பர் 26, 2013-இல் நடைபெற்றதை அனைவரும் அறிவர். பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பிரசார யாத்திரை திருச்சியிலிருந்தே துவங்கியது  எனலாம். கிட்டத்தட்ட 3.5 லட்சம் மக்கள் கூடிய இளந்தாமரை மாநாடு, தமிழக பாஜகவின் சரித்திரத்தில் ஒரு மைல்கல். இதை பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியே அந்தக் கூட்டத்தில் தெரிவித்துப் பாராட்டினார். தேசத்தில் ஏற்பட்டுவரும் மாற்றத்துக்கு கட்டியம் கூறுவதாக அமைந்த நிகழ்வு அது. அந்த மாநாட்டில் திரு. நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழ் வடிவம் மின்னூலாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழ் ஹிந்து தளத்தில் எழுதுபவரும், ஈரோடு ஸ்வயம்சேவகருமான திரு.சு.சண்முகவேல் இதனை மின்னூலாக... [மேலும்..»]