Posts Tagged ‘ மீட்புப் பணிகள் ’

கஜா புயல் சேதம்: சேவாபாரதி நிவாரணப் பணிகள்

கஜா புயலால் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ள வேதாரண்யம், திருத்துறைபூண்டி, பேராவூரணி, புதுக்கோட்டை பகுதிகளில் ஆர்எஸ்எஸ் - சேவா பாரதி புயல் நிவாரண பணி முகாம்கள் நடந்து வருகின்றன. இதற்கு பொருளாகவும், பணமாகவும் உதவி செய்ய விரும்புவோருக்கான தொடர்புகள் கீழே... புயலுக்கு பின் முதலில் களத்திற்கு வந்த சேவாபாரதி சாலைகளில் விழுந்துள்ள மரங்களை அப்புறப்படுத்த முடிவு செய்து பணியை துவக்கியது. பெட்ரோலால் இயங்கும் ரம்பங்கள் திருப்பூரிலிருந்து வாங்கி அனுப்பப்பட்டது. அதோடு 10,000 எம் ஏ எச் திறனுள்ள பவர் பேங்க் 200 முழுமையாக சார்ஜ் ஏற்றப்பட்டு அங்கு நிவாரணப்பணியில் களத்தில் இருப்பவர்களுக்கும், அரசு நிர்வாகத்தில் இயங்குபவர்களுக்கும்... [மேலும்..»]

சென்னை மழைவெள்ளம்: பா.ஜ.க அவசர சேவை உதவி எண்கள்

தமிழக பாரதிய ஜனதா கட்சி மழைவெள்ள நிவாரணத்திற்காக எமர்ஜென்ஸி எண்கள் அறிவித்துள்ளது. அதுபற்றிய அமைச்சர் திரு. பொன்னார் அவர்களின் செய்தி கீழே. [மேலும்..»]

சென்னை மழைவெள்ளம்: சேவாபாரதி மீட்புப் பணிகள்

வரலாறு காணாத மழை வெள்ளம் சென்னை நகரத்தைப் பேரிடரில் ஆழ்த்தியுள்ளது. இந்தச் சூழலில் அயர்வின்றி ஓய்வுப் பணியில் ஈடுபட்டிருக்கும் அனைத்து அரசு அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள், சேவை அமைப்புகளுக்கும் நமது இதயபூர்வமான நன்றிகள். குறிப்பாக, மாநகர போக்குவரத்து, காவல் துறை, தீயணைப்புத் துறை, மாநகராட்சி, மத்திய/மாநில பேரிடர் மீட்புப் பணியாளர்களின் இடையறாத சேவை போற்றுதலுக்குரியது. இந்த இடரிலிந்து சென்னை விரைவில் மீண்டு வர இயற்கையை இறைஞ்சுகிறோம். சேவா பாரதி அமைப்பு நகரத்தின் பல இடங்களில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. உதவி வேண்டுவோர் கீழ்க்கண்ட எண்களைத் தொடர்பு கொள்ளலாம். Sri.... [மேலும்..»]

நேபாள பூகம்ப நிவாரணத்துக்கு உதவுங்கள்

இந்த இயற்கைப் பேரிடரில் மரணமடைந்தவர்களுக்கு இதயபூர்வமான கண்ணீர் அஞ்சலியையும், துயருறும் உற்றார் உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். இந்திய ராணுவ வீரர்கள் மிகப் பெரிய அளவில் மீட்பு மற்றும் நிவாரண உதவிகளைச் செய்து வருவது குறித்து உலகெங்கும் உள்ள ஊடகங்கள் செய்திகளைத் தந்த வண்ணம் உள்ளன. ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் சகோதர அமைப்புகளின் நிவாரணப் பணிகளுக்ககு நன்கொடை அளித்து பொருளுதவி செய்யுமாறு கோருகிறோம். விவரங்கள் கீழே.. [மேலும்..»]

உத்தராகண்ட் வெள்ளப் பேரிடர்: பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவுங்கள்

உத்தராகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட மாபெரும் வெள்ளிப் பேரிடரினால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நமது சகோதர சகோதரிகள் மரணித்துள்ளனர். அவர்களுக்கு நமது இதய அஞ்சலி. உற்றாரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் நமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். இமயச் சாரலில் உள்ள நூற்றுக் கணக்கான மலைக்கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. அம்மக்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளது. பாரதத்தின் பல பகுதிகளிலும் இருந்து புனித யாத்திரைக்காக வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கேதார்நாத், பத்ரி நாத், ருத்ரபிரயாகை, உத்தரகாசி, கௌரி குண்டம் ஆகிய இடங்களில் சிக்கித் தவிக்கின்றனர். இந்திய ராணுவ வீரர்கள் வரலாறு காணாத வகையில் மாபெரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.... [மேலும்..»]

சிக்கிம் பூகம்ப நிவாரணத்துக்கு உதவுங்கள்!

இடைவிடாது பெய்யும் பலத்த மழை, அடுத்தடுத்த ஏற்பட்ட நிலச்சரிவுகள், துண்டிக்கப் பட்ட சாலைத் தொடர்பு போன்றவைகள் நிலைமையை இன்னும் மோசமாக்கி விட்ட நிலையில் மீட்புப் பணிகளை மிகுந்த சிரமத்திற்கிடையில்... ராஷ்டிரீய ஸ்வயம் சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) மற்றும் சேவாபாரதி தொண்டர்கள் பலர்... சிக்கிம் உங்களுடைய உதவியை நாடி நிற்கிறது... [மேலும்..»]

லடாக் பகுதியில் இயற்கைப் பேரழிவு: மீட்புப் பணியில் இந்து இயக்கங்கள்

அரசு நிர்வாகம் மீட்பு, நிவாரணப் பணிகளில் மெதுவாகவே ஈடுபடுகிறது... லே அருகில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பயிற்சி முகாம் (ஐ.டி.சி) நடந்து வந்தது. அந்த சமயத்தில் தான் வெள்ளச்சேதம் ஏற்பட்டது. உடனடியாக முகாம் ரத்து செய்யப்பட்டு, அங்கிருந்த தொண்டர்கள் அனைவரும் வெள்ளப் பகுதிக்கு விரைந்தனர். யாருக்காகவும் காத்திருக்காமல் மீட்புப் பணியைத் துவங்கிவிட்டனர்... கடுமையான இயற்கைச் சீற்றத்துக்கு ஆளாகித் தவிக்கும் லே சகோதரர்களுக்கு நம்மால் நேரடியாக உதவ முடியாமல் இருக்கலாம். இந்த இயக்கம் ஆற்றும் மீட்புப் பணிகளுக்கு நிதி வழங்கி அவர்களுக்கு தோள் கொடுக்கலாமே! [மேலும்..»]

Josh Oliver Authentic Jersey