Posts Tagged ‘ முத்துராமலிங்க தேவர் ’

அரசியல்

சின்னம்மாவும், நமது அரசியல் சிறுமையும்…

சின்னம்மாவும், நமது அரசியல் சிறுமையும்…

அதிமுகவின் தலைமைப் பொறுப்பு இப்போது விவாதப் பொருளாகி இருக்கிறது. சசிகலா பொதுசெயலாளர் ஆவாரா? முதல்வர் பதவியையும் கைப்பற்றுவாரா? நிர்பந்தங்களால் அரசியலிலிருந்தே ஒதுங்குவாரா? எல்லாம் காலத்தின் கரங்களில் இருக்கிறது. எது நடந்தாலும், அது தமிழகத்தின் அரசியலில் அழிக்க முடியாத கறையாகவே இருக்கும். காமராஜரும், ராஜாஜியும், சத்தியமூர்த்தியும், முத்துராமலிங்கத் தேவரும், திரு.வி.க.வும், பாரதியும், வ.உ.சி.யும், தன்னலமின்றி அரசியல் நடத்திய மண்ணில், சுயநலத்துக்காக அதிமுகவினர் எந்த அரசியல் பின்புலமும் அற்ற ஒருவரிடம் கையேந்துவதே நமது தர வீழ்ச்சியின் அடையாளம். [மேலும்..»]

சமூகம், தொடர், விவாதம்

ஜாதி அரசியலுக்கு தீர்வு என்ன? -3

ஜாதி அரசியலுக்கு தீர்வு என்ன? -3

நமது முன்னோடிகளான பல தேசத் தலைவர்களின் பிம்பம் ஜாதீயத் தலைவர்களாகக் குறுக்கப்பட்டிருக்கிறது. நம்மைப் பிணைக்கும் அன்பான தளைகளையே நம்மைப் பிரிக்கும் வேலிகள் ஆக்கி விட்டோம்.... உத்தப்புரத்தில் இருந்த தீண்டாமைச் சுவரை அகற்ற விஸ்வ ஹிந்து பரிஷத் பல மாதங்கள் அதே ஊரில் தங்கி நடத்திய அமைதியான பணிகள் யாருக்குத் தெரியும்? இயல்பாகத் தீர வேண்டிய பிரச்னையை ஊதிப் பெரிதாக்கிய மார்க்சிஸ்ட்கள் தான் ஊடக செய்திகளில் இடம் பெற்றார்கள்.... வன்கொடுமை தடுப்பு சட்டம் இந்த அளவுக்கு கடுமையாக இல்லாமல் இருந்தால், தலித் மக்கள் மீது ஆண்டாண்டு காலமாக ஆதிக்கம் செலுத்துவோர் திருந்தி விடுவார்களா என்ன?... [மேலும்..»]

சமூகம், பொது, விவாதம்

ஜாதி அரசியலுக்கு தீர்வு என்ன? – 1

ஜாதி அரசியலுக்கு  தீர்வு என்ன? – 1

மீண்டும் கிளர்ந்தெழும் ஜாதிக் கலவரங்கள்… தமிழகத்தில் அவ்வப்போது ஜாதிக் கலவரங்கள் நடப்பது வாடிக்கையாகி விட்டது.  பகுத்தறிவை வளர்ப்பதாக முழங்கிக்கொண்டு,  ஜாதி வேற்றுமையை ஒழிப்பதாக முழங்கிக்கொண்டு 60 ஆண்டுகளுக்கு மேலாக ஆதிக்கம் செலுத்திவரும் திராவிடக் கட்சிகளின் காலத்தில் தான் ஜாதி மிகவும் வெறுப்பூட்டும் கருவியாக மாறி இருக்கிறது. . இதன் காரணங்களை சமூக வளர்சசிக் கண்ணோட்டத்தில் ஆராய்ந்து தீர்வு காண்பதற்குப் பதிலாக, வாக்குவங்கி அரசியலில் கட்சிகள் ஈடுபடுவதன் காரணமாகவே, ஏற்கனவே சமூகத்தில் புரையோடி இருக்கும் ஜாதிக் காழ்ப்புணர்வு மேலும் வேகமடைந்து வன்முறைகளை உருவாக்கி வருகிறது.  இதற்கு என்ன தீர்வு? ஒரு நோய்க்கு மருந்து அளிக்க வேண்டுமானால், அந்த நோயை... [மேலும்..»]

வரலாறு

போகப் போகத் தெரியும்-20

April 18, 2009
-
போகப் போகத் தெரியும்-20

இந்தியர்கள் அனைவரும் ஒரு குரலாகக் கண்டனம் தெரிவித்த ஜாலியன் வாலாபாக் படுகொலையை ஆதரித்து அறிக்கை விட்ட பெருமை டாக்டர் டி.எம். நாயருக்கு உண்டு. இந்த டி.எம். நாயர் இந்திய சட்டமன்றத்திற்கான தேர்தலில் (1916) வி.எஸ். சீனிவாச சாஸ்திரியால் தோற்கடிக்கப்பட்டார். அதன் காரணமாக பிராமணர்கள் மீது இவருக்குக் காழ்ப்புணர்ச்சி ஏற்பட்டது... .... இப்படி மூக்கறுபட்ட மூலவர்கள் சேர்ந்து அமைத்ததுதான் தென்னிந்திய நல உரிமை சங்கம்... [மேலும்..»]

இந்து மத விளக்கங்கள்

ஏன் இத்தனை தெய்வங்கள் நம்மிடம் – பசும்பொன் தேவர் திருமகனார் விளக்கம்

ஏன் இத்தனை தெய்வங்கள் நம்மிடம் – பசும்பொன் தேவர் திருமகனார் விளக்கம்

"பரம்பொருள் ஒரே பிரம்மம், உல்கத்திலே துஷ்ட நிக்ரக பரிபாலனம் செய்ய பல ரூபத்தோடு பல காட்சிகளை எடுக்கிறார். இதை ஞாபகார்த்தம் செய்ய வேண்டுமென்பதற்காக, அந்தத்தத் திருக்கோலங்களாக - உருவங்களாக வைத்திருக்கிறார்கள். அத்தனை தெய்வம் இருக்கிறது என்று சொல்லவில்லை. இதுதான் ரகசியம். இதைச் சாதாரண அறிவற்ற நிலையில் "இத்தனை தெய்வங்களா ?" என்று கேட்பது நாலாம்தரக் கேள்வி..." [மேலும்..»]