இரு துருவங்கள்: காந்திஜியும் நேதாஜியும்

இந்த நாடு சுதந்திரம் பெற உழைத்தவர்களுள் தலையாய இருவர் என மகாத்மா காந்திஜியையும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸையும் சொல்லலாம். இருவரின் வழிமுறைகள் வேறானவையாக இருந்தபோதும், இலக்கு ஒன்றாகவே இருந்தது.

காந்திஜியும் நேதாஜியும் ஒத்த கருத்துடன் செயல்பட்டிருந்தால் சுதந்திர இந்தியா வேறு வடிவில் எழுந்திருக்கும் என்பதே சரித்திர ஆய்வாளர்களின் கருத்து. நமது துரதிர்ஷ்டம், காந்திஜியும் நேதாஜியும் துவக்கக் காலம் (1922) முதலே உடன்பாடும் முரண்பாடும் கொண்டவர்களாகவே இயங்கி வந்துள்ளனர்…..

View More இரு துருவங்கள்: காந்திஜியும் நேதாஜியும்

நேதாஜி: தலைவர்களின் தலைவர்

பகவத்கீதை அவரது வழித்துணையாக இருந்தது. அவரது கைப்பெட்டியில் அது கடைசி வரை இருந்தது. சுதந்திரப் போருக்கு கீதை தூண்டுதலாக இருக்கும் என்று அவர் நம்பினார். அதேபோல, சுவாமி விவேகானந்தரே நாட்டில் எழுந்துள்ள நவ எழுச்சிக்குக் காரணம் என்று அவர் பலமுறை கூறி இருக்கிறார்… நேதாஜியின் வாழ்க்கையே ஒரு போர்க்களம். அவர் வாழ்ந்தது 48 ஆண்டுகள் மட்டுமே. அதற்குள் அவர் நிகழ்த்திய அரசியல் சாதனைகள், வெளிநாட்டுத் தலைவர்களுடனான சந்திப்புகள், போர்முனை சாகசங்கள் உள்ளிட்டவற்றை அறிகையில், அந்த மாபெரும் தலைவனின் பிரமாண்டம் புரிகிறது…

View More நேதாஜி: தலைவர்களின் தலைவர்

சின்னம்மாவும், நமது அரசியல் சிறுமையும்…

அதிமுகவின் தலைமைப் பொறுப்பு இப்போது விவாதப் பொருளாகி இருக்கிறது. சசிகலா பொதுசெயலாளர் ஆவாரா? முதல்வர் பதவியையும் கைப்பற்றுவாரா? நிர்பந்தங்களால் அரசியலிலிருந்தே ஒதுங்குவாரா? எல்லாம் காலத்தின் கரங்களில் இருக்கிறது. எது நடந்தாலும், அது தமிழகத்தின் அரசியலில் அழிக்க முடியாத கறையாகவே இருக்கும்.

காமராஜரும், ராஜாஜியும், சத்தியமூர்த்தியும், முத்துராமலிங்கத் தேவரும், திரு.வி.க.வும், பாரதியும், வ.உ.சி.யும், தன்னலமின்றி அரசியல் நடத்திய மண்ணில், சுயநலத்துக்காக அதிமுகவினர் எந்த அரசியல் பின்புலமும் அற்ற ஒருவரிடம் கையேந்துவதே நமது தர வீழ்ச்சியின் அடையாளம்.

View More சின்னம்மாவும், நமது அரசியல் சிறுமையும்…

ஜாதி அரசியலுக்கு தீர்வு என்ன? -3

நமது முன்னோடிகளான பல தேசத் தலைவர்களின் பிம்பம் ஜாதீயத் தலைவர்களாகக் குறுக்கப்பட்டிருக்கிறது. நம்மைப் பிணைக்கும் அன்பான தளைகளையே நம்மைப் பிரிக்கும் வேலிகள் ஆக்கி விட்டோம்…. உத்தப்புரத்தில் இருந்த தீண்டாமைச் சுவரை அகற்ற விஸ்வ ஹிந்து பரிஷத் பல மாதங்கள் அதே ஊரில் தங்கி நடத்திய அமைதியான பணிகள் யாருக்குத் தெரியும்? இயல்பாகத் தீர வேண்டிய பிரச்னையை ஊதிப் பெரிதாக்கிய மார்க்சிஸ்ட்கள் தான் ஊடக செய்திகளில் இடம் பெற்றார்கள்…. வன்கொடுமை தடுப்பு சட்டம் இந்த அளவுக்கு கடுமையாக இல்லாமல் இருந்தால், தலித் மக்கள் மீது ஆண்டாண்டு காலமாக ஆதிக்கம் செலுத்துவோர் திருந்தி விடுவார்களா என்ன?…

View More ஜாதி அரசியலுக்கு தீர்வு என்ன? -3

ஜாதி அரசியலுக்கு தீர்வு என்ன? – 1

மீண்டும் கிளர்ந்தெழும் ஜாதிக் கலவரங்கள்… தமிழகத்தில் அவ்வப்போது ஜாதிக் கலவரங்கள் நடப்பது வாடிக்கையாகி…

View More ஜாதி அரசியலுக்கு தீர்வு என்ன? – 1

போகப் போகத் தெரியும்-20

இந்தியர்கள் அனைவரும் ஒரு குரலாகக் கண்டனம் தெரிவித்த ஜாலியன் வாலாபாக் படுகொலையை ஆதரித்து அறிக்கை விட்ட பெருமை டாக்டர் டி.எம். நாயருக்கு உண்டு. இந்த டி.எம். நாயர் இந்திய சட்டமன்றத்திற்கான தேர்தலில் (1916) வி.எஸ். சீனிவாச சாஸ்திரியால் தோற்கடிக்கப்பட்டார். அதன் காரணமாக பிராமணர்கள் மீது இவருக்குக் காழ்ப்புணர்ச்சி ஏற்பட்டது…
…. இப்படி மூக்கறுபட்ட மூலவர்கள் சேர்ந்து அமைத்ததுதான் தென்னிந்திய நல உரிமை சங்கம்…

View More போகப் போகத் தெரியும்-20

ஏன் இத்தனை தெய்வங்கள் நம்மிடம் – பசும்பொன் தேவர் திருமகனார் விளக்கம்

“பரம்பொருள் ஒரே பிரம்மம், உல்கத்திலே துஷ்ட நிக்ரக பரிபாலனம் செய்ய பல ரூபத்தோடு பல காட்சிகளை எடுக்கிறார். இதை ஞாபகார்த்தம் செய்ய வேண்டுமென்பதற்காக, அந்தத்தத் திருக்கோலங்களாக – உருவங்களாக வைத்திருக்கிறார்கள். அத்தனை தெய்வம் இருக்கிறது என்று சொல்லவில்லை. இதுதான் ரகசியம். இதைச் சாதாரண அறிவற்ற நிலையில் “இத்தனை தெய்வங்களா ?” என்று கேட்பது நாலாம்தரக் கேள்வி…”

View More ஏன் இத்தனை தெய்வங்கள் நம்மிடம் – பசும்பொன் தேவர் திருமகனார் விளக்கம்