Posts Tagged ‘ மூச்சுப்பயிற்சி ’

நம்பிக்கை – 12: உண்மையில் நான் யார்? [நிறைவு]

“இல்லை. தன்முனைப்பு என்பது பெருமை கொள்வதோ, கர்வமாக நடப்பதோ, சுயநலத்துடன் இருப்பதோ அல்ல. ‘நானே நினைப்பவன்; நானே செய்பவன்; நானே அனுபவிப்பவன்’ போன்ற எண்ணம் தான் தன்முனைப்பு என்பது. உன்னைப்பற்றி நீயே தவறாக அனுமானித்துக்கொள்வதுதான் தன்முனைப்பு (EGO)”. “நான் என்னைப்பற்றி இவ்வாறாக நினைத்துக்கொண்டிருக்கிறேன் என்று சற்று முன்பு சொன்னதெல்லாம் தான் தன்முனைப்பு என்கிறீர்களா?”... “நிச்சயமாக. நம்முடைய சேர்க்கையானது எப்போதுமே பொருட்கள், மக்கள் மற்றும் இடங்கள் போன்றவையுடன் தான் இருந்துவருகிறது. பொருட்கள், உறவுகள், செல்வம், ஆரோக்கியம், உடல், அறிவு என்று எல்லாமே நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். மாற்றதிற்குள்ளாகும் விஷயங்களுடன் தான் நம்முடைய சேர்க்கை எப்போதும்... [மேலும்..»]

நம்பிக்கை – 11: தியானம்

“நமது ஆள் வேலையாளிடம் தன்னை வீட்டிற்குக் கொண்டு செல்ல ஒரு வண்டியைத் தயார் செய்யச் சொன்னான்.; அதையும் உடனடியாக அவன் செய்து முடித்தான். அந்த வண்டியில் ஏறிக்கொண்டே, வீட்டுத் தோட்டத்தில் உள்ள புற்களையெல்லாம் வெட்டி, சுத்தம் செய்து, செடிகளுக்கெல்லாம் தண்ணீர் விடச் சொன்னான். வேலையாள் வேலை செய்யத் தோட்டத்திற்குப் போனவுடன் வண்டியை ஓட்டிக்கொண்டு தன்னுடைய குருநாதர் வீட்டுக்குச் சென்றான்”. “ஒளிந்துகொள்ளவா போனான்?” என்று சிரித்தபடியே கேட்டாள் ஸ்நேஹா... “ஜபத்தைப் பயிற்சி செய்யும்போது, நீங்கள் மந்திரத்தின் மீதும் உச்சாடனம் செய்யும் எண்ணிக்கை மீதும் கவனமாக இருப்பீர்கள். வழக்கமாக 108 முறை அல்லது 1008 முறை என்று செய்வீர்கள். போதுமன... [மேலும்..»]

நம்பிக்கை – 10: பிராணாயாமத்தின் பயன்கள்

இந்தப் பிராணாயாமத்தில் கபாலபாதி பிராணாயாமம் என்று ஒரு வகை உள்ளது. அதைச் செய்வதற்குத் தினமும் காலை நேரத்தில் சில நிமிடங்கள் போதும். இரண்டு டம்ப்ளர்கள் தண்ணீர் குடித்துவிட்டுச் செய்யலாம். (காலை எழுந்ததும் பல் துலக்கி, முகம், கை கால்கள் கழுவிக்கொள்ள வேண்டும். பிறகு அரை லிட்டர் தண்ணீர் குடித்துவிட்டு, காற்றோட்டம் உள்ள இடத்தில் சௌகரியமாக சம்மணம் இட்டு உட்கார்ந்துகொள்ள வேண்டும். முதுகை நேராக வைத்துக்கொண்டு நிமிர்ந்து உட்கார வேண்டும். வயிறு வரை மூச்சை உள்ளே இழுக்க வேண்டும்; பிறகு சைக்கிளுக்குக் காற்றடிக்கும் பம்பைப் போல வயிறை அழுத்திகொண்டு மூச்சை வெளியேற்ற வேண்டும். இதை 20 முறை செய்ய... [மேலும்..»]