Posts Tagged ‘ மூன்றாவது அணி ’

தமிழகத்தில் அமைந்தது மாற்று அணி!

எண்ணியிருந்தது ஈடேறுகிறது! தமிழகத்தில் இரு திராவிடக் கட்சிகளுக்கும் மாற்றாக பாஜக தலைமையில் புதிய மாற்று அணி உருவாக வேண்டும் என்று தமிழ்ஹிந்து இணையதளம் கடந்த செப்டம்பர் மாதமே வலியுறுத்தியது. அநேகமாக, இந்தக் கண்ணோட்டம் அப்போது புதிய சிந்தனையாகவே இருந்தது. காண்க: தமிழகத்தில் மாற்று அணி அமையுமா?-1 பாஜகவின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படும் நரேந்திர மோடிக்கு மக்களிடம் பெருகிவரும் செல்வாக்கைப் பயன்படுத்தி தமிழ்கத்தில் தேமுதிக,  மதிமுக, பாமக கட்சிகளை ஒருங்கிணைத்து பாஜக தனி அணி அமைக்க வேண்டும் என்று நாம் வலியுறுத்தினோம். காண்க: தமிழகத்தில் மாற்று அணி அமையுமா?-2 இன்று நாம் எதிர்பார்த்த கூட்டணி அற்புதமாக அமைந்துவிட்டது. சில... [மேலும்..»]

மூன்றாவது அணி முரண்பாடுகளின் அணி

மூன்றாவது அணி என்பது முரண்பாடுகளின் மொத்த உருவம், ஆட்சிக்கு வரமுடியாது என்பது நன்கு தெரிந்தும், தேர்தல் களத்தில் நாங்களும் இருக்கிறோம் என்பதை காட்டுவதற்காகவே அரிதாரம் பூசிக் கொண்டு மேடையில் தோன்றும் பப்பூன்கள்... 80 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட உத்திர பிரதேசத்தில் இரு துருவங்களாக உள்ள முலாயமும், மாயவதியும் இணைந்து செயல்படுவார்களா என்பது சந்தேகம். இருவருக்குமே பிரதமர் பதவியின் மீது ஆசை, இருவருமே குறிப்பிட்ட பிரிவு மக்களின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக கூறிக் கொண்டு இருக்கிறார்கள்....தங்களுக்கு தொகுதி வேண்டுமானலும், எந்த தொகுதி என்று முடிவு செய்வதானாலும், ஜெயலலிதாவின் முடிவில் உள்ளது என்ற வாய் மூடி மௌனியாக... [மேலும்..»]