Posts Tagged ‘ மெக்காலே கல்வி ’

அழகிய மரமும் பூதனையின் பாலும்

லயோலா போன்ற கிறித்துவர்களின் கல்வியோ தெரசா போன்றோரின் உதவியோ, எல்லாமே கிறித்துவ மத மாற்றத்திற்கான ஒரு கருவியே. இதனாலே தான் கிறித்துவர்கள் கொடுக்கும் கல்வி பூதனையின் பால் போன்றது. அதில் சில நச்சு வஸ்துக்கள் சேர்க்கப்பட்டிருக்கும். மிதமான வகையில் கிறித்தவத்தின் மீது ஒரு நன்றியும்,நன்மதிப்பும் கொடுக்கும்; சராசரியாக இந்து மரபின் மீது ஒரு அக்கறையின்மையும் ஏளனமும் உண்டுபண்ணும்; தீவிரமாயின் இந்து சமய பண்டிகைகள் கொண்டாடினாலோ, மரபின் அடையாளங்களை அணிந்தாலோ தண்டிக்க கூடச்செய்யும். அண்மையில் கூட அத்தகைய செய்திகள் வந்துள்ளன.... இந்த பொய் வரலாற்றிற்கு வைரமுத்து போன்றோர் சாட்சி கூறிவருவது மிகவும் ஈனச்செயல். "கிறிஸ்துவர்கள்... [மேலும்..»]

அழகிய மரம்: பாரதத்தின் பண்டைய பாரம்பரியக் கல்வி

1200 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட சோழர்கால ஐம்பொன் உலோக சிலைகளை பார்க்கும் பொழுது வியப்பாக உள்ளது. ஒன்றிண்டு சிலைகளைத் தவிர , மற்ற எல்லா விக்கிரங்களும் , எந்தக் குறைபாடும் இல்லாமல் (corrosion, erosion, cracks) இன்றளவும் நமது வழிபாட்டில் உள்ளன... இந்தக் கல்வி முறைக்கான நிதி வசதி என்பது (ஆசிரியர் சம்பளம் முதலியன) அந்த கிராமமோ , சமூகமோ , கல்வி கற்கும் மாணவர்களோ ஏற்றுக் கொண்டார்கள் . பிரிட்டிஷ் அரசு எந்த விதமான உதவியும் செய்யவில்லை. ஓரிரு இடங்களைத் தவிர, அனைத்து இடங்களிலும் சூத்திரர் சாதி எண்ணிக்கை மாணவர்கள்தான், மற்ற அனைத்து சாதி எண்ணிக்கை... [மேலும்..»]

அழகிய மரம் (இந்தியப் பாரம்பரியக் கல்வி) – புத்தக அறிமுகம்

1931-ல், லண்டனில் மகாத்மா காந்திஜி ஓர் உரை நிகழ்த்தினார். அதில், அப்போதைய பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்த கல்வியின் நிலையைவிட, ஐம்பது நூறு ஆண்டுகளுக்கு முன்பாக, இந்தியாவில் கல்வி நிலை ஒப்பீட்டளவில் சிறப்பாக இருந்திருக்கிறது. பிரிட்டிஷார் அமல்படுத்திய நிர்வாக நடைமுறைகள், இந்தியப் பாரம்பரியக் கல்வி என்ற அழகிய மரத்தை வேரோடு பிடுங்கி எறிந்துவிட்டது என்று சொன்னார். காந்திஜியின் அந்தக் கூற்று, 18-19-ம் நூற்றாண்டுகளில் இந்தியாவின் கல்வி தொடர்பான மிகப்பெரிய விவாதக் கதவுகளைத் திறந்துவிட்டது. அந்த விவாதங்கள் மற்றும் அது தொடர்பான தரவுகளின் முழுமையான தொகுப்பே இந்தப் புத்தகம். காந்தியவாதியும் வரலாற்றாசிரியருமான தரம்பால், பிரிட்டிஷாரின் ஆவணங்களின்... [மேலும்..»]

ஆணல்லன் பெண்ணல்லன்… பாலினங்கள் தொடர்-2

பண்டைய பாரதம் சமுதாய தீமைகளே இல்லாத பொற்காலம் என்று சொல்ல முடியாது. அன்றைய சமூக சூழ்நிலை, பொருளாதார உற்பத்தி உறவு முறைகள், அரசு சூழல்கள், பேரரசுகளின் உருவாக்கங்கள் இவை எல்லாம் சேர்ந்துதான் அன்றைய சமுதாயத்தை அமைத்திருக்கும். ஆனால் அதையும் மீறி மாற்றுப்பாலினங்களுக்கான ஒரு மரியாதையான இடம் இந்த பண்பாட்டில் இருந்து வந்திருக்கிறது. ... இயற்கைக்கு புறம்பானதாக சில வேட்கைகளை சிலர் சித்தரிக்கிறார்கள். எது இயற்கை? என்பதை அவர்கள் எந்த வரையறையை வைத்து தீர்மானிக்க முடியும். இனப்பெருக்கம் மட்டும் தான் இயற்கையா? இயற்கை என்று அவர்கள் நிர்ணயித்துள்ள கோட்பாடே அடிப்படை தவறானது. [மேலும்..»]