Posts Tagged ‘ மோடி ’

மோதி – ஜின்பிங் மாமல்லபுர மாநாடு: ஒரு பார்வை

இன்றைய சீன அதிபர் ஜின்பிங் பெரும் வரலாற்றுணர்வு மிக்க மனிதர். சீனா இழந்த கலாச்சாரச் செல்வங்களை மீட்டுக் கொண்டுவருவதில் மிகவும் ஆர்வமுடையவர் ஜின்பிங். அவரை, இன்னொரு வரலாற்று ஆர்வலரான பிரதமர் மோடி மாமல்லபுரத்திற்கு அழைத்துச் சென்றது பெரும் ஆச்சரியமில்லை... மோடி-ஜின்பிங் மாமல்லபுர சந்திப்பினால் இந்திய-சீனா இடையே உள்ள பிரச்சினைகள் தீர்ந்துவிடப் போவதில்லை. எனினும் இரண்டு பழம்பெரும் நாகரிகங்கள் தங்களின் கடந்தகால வரலாற்றை உணர்ந்து கொள்ள இந்தச் சந்தர்ப்பம் உதவியிருக்கிறது. இந்திய-சீனப் பொருளாதார யுத்தம் முக்கியமான பிரசினை. சீனா இந்தியாவின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட எல்லா வழிகளிலும் முயல்கிறது. இன்றுவரை அதில் வெற்றியும் பெற்றிருக்கிறது என்றாலும் எதிர்காலத்திலும்... [மேலும்..»]

பாஜகவும் கூட்டணிகளும்: அடல்ஜியின் அனுபவம் வழிகாட்டட்டும்

1999-இல் அதிமுகவாலும், 2004-இல் திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளாலும் வஞ்சிக்கப்பட்டவர் வாஜ்பாய். அதனை மறக்க முடியவில்லை. அதனால்தானோ, இன்று நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு அதீத வலிமையுடன் கூட்டணிக் கட்சிகளைச் சாராமல் செயல்படும் வகையில் மக்கள் வாக்களித்திருக்கின்றனர்... இன்று பாஜகவுடன் நெருக்கம் காட்ட அனைத்துக் கட்சிகளும் திரைமறைவு பேரம் நடத்துகின்றன. மத்திய அரசின் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளால் கதிகலங்கியுள்ள பல கட்சிகள் பாஜகவுடன் தோழமை பூண்டு தப்பிக்க விழைகின்றன. இந்த நேரத்தில்தான் பாஜக சாதுரியமாகவும், தெளிவாகவும் முடிவெடுக்க வேண்டும். தனது முதுகில் குத்திய கட்சிகளை பாஜக மன்னிப்பதை அக்கட்சியின் தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள். அடல் பிகாரி... [மேலும்..»]

2019 தேர்தல்: வாராது போல வந்த மாமணியைத் தோற்போமோ?

March 18, 2018
By

மோடி எப்படியாவது ஒழிய வேண்டும் என்பதே இவர்களது ஒரே குறி. அதற்காக எவருடனும் கூட்டணி வைக்கவும் எதைச் செய்யவும் சோனியாவும், கம்னியுஸ்டுகளும் பிற மாநிலக் கட்சிகளும் தயாராக இருக்கிறார்கள். காங்கிரஸ் ஜெயிக்கா விட்டாலும் பரவாயில்லை, எப்படியாவது மோடி அகற்றப் பட வேண்டும், எவர் வந்தாலும் தங்கள் கொள்ளைகளைக் குறையாமல் அடிக்கலாம் என்ற நம்பிக்கையில் இருக்கும் காங்கிரஸும், இந்தியாவைத் துண்டு துண்டாகப் பிரித்து பலவீனப் படுத்த விரும்பும் அத்தனை நாசகார சக்திகளும் கொண்டாட்டங்களுடன் காத்திருக்கின்றன... ஒருவேளை மோடியும் பிஜேபியும் அழியுமானால் என்னென்ன நடக்கப் போகின்றன? வலிமையற்ற கொள்ளைக்காரர்களினால் சீன பாக்கிஸ்தானியக் கைக்கூலிகளினால் ஆன அரசாங்கம் நிலையற்ற இந்தியாவை... [மேலும்..»]

இலங்கைத் தேர்தல் முடிவு புதிய விடியலைத் தருமா?

இலங்கைத் தேர்தல் முடிவு புதிய விடியலைத் தருமா?

இலங்கையில் அதிகாரப் பரவல் சாத்தியமாக வேண்டும்; ஈழத்தமிழர்களும் மாகாண சுய ஆட்சியைப் பெற வேண்டும்; வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து ராணுவம் வெளியேற வேண்டும்: போர்க்காலக் காயங்கள் ஆற்றப்பட வேண்டும்; குடிபெயர்ந்த தமிழர்கள் மறுகுடியமர்த்தப்பட வேண்டும்; போர்க்குற்றங்கள் தண்டிக்கப்பட வேண்டும். சிங்கள ஆதிக்கம் குறைக்கப்பட்டு உண்மையான சமஷ்டிக் குடியரசாக இலங்கை மலர வேண்டும். இந்தியாவுடன் பிராந்தியரீதியான நல்லுறவை இலங்கையின் புதிய அதிபர் சிறிசேனா வலுப்படுத்த வேண்டும். அப்போது பல பிரச்னைகளுக்கு தீர்வு காண இலங்கை அரசால் முடியும். இவை அனைத்தும் நடக்குமா? நல்லது நடக்கும் என்று நம்புவோம். [மேலும்..»]

தேவையா இந்த வடமொழி வாரம்?

அண்மையில் 'புதிய தலைமுறை’ இதழில் ஒரு கார்ட்டூன் வெளிவந்திருக்கிறது. பசியுடன் அமர்ந்திருக்கிறான் ஒரு இந்தியன். எதிரில் காலி வாழை இலை. நரேந்திர மோதியோ ஒரு பழைய புத்தகத்தை அவனிடம் நீட்டுகிறார். அதில் சமஸ்கிருதம் என எழுதியிருக்கிறது. ... பாரதீய கலாச்சாரப் பண்பாட்டிற்கு இருப்பிடமாக உள்ள சம்ஸ்கிருத மொழியை இந்நாட்டில் பிறந்த ஒவ்வொருவரும் கற்பது அவசியம் [மேலும்..»]

குஜராத்தின் இந்துத்துவ மகாராஜா

உதாரணமாக மிகக் கொடுமையான சாதிய சூழ்நிலை தாண்டவமாடிய திருவிதாங்கூரை எடுத்து கொள்வோம். எல்லாவிதமான சாதிய வக்கிரங்களும் நிலவிய பிரதேசம் அது. சுரண்டல், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான சாதிய வன்கொடுமைகள் எல்லாம் நிலவியது மிக தெளிவாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் ... [மேலும்..»]

மோடியின் வெற்றி

மோடியை எந்த அளவுக்கு நீங்கள் தாக்குகிறீர்களோ எந்த அளவுக்கு அவருக்கு பிரச்சனைகளை ஏற்படுத்துகிறீர்களோ எந்த அளவுக்கு அவரை சுற்றி சக்கர வியூகங்கள் அமைக்கிறீர்களோ அந்த அளவுக்கு அவர் மேலும் மேலும் தடைகளை உடைத்து வளர்ந்து வருகிறார். அவருக்கு எதிராக நீங்கள் அமைக்கும் ஒவ்வொரு அவதூறு பிரச்சாரமும் இறுதியில் அவரது பாதையில் மலர்களாகவே விழுகின்றன. [மேலும்..»]

மோடி எனும் அபாயம்

எந்த ஒரு அரசு திட்டமும் செயல்படுத்தப்படும் போது எந்த அளவு ஊழலைக் கொண்டதாக அறியப்படுகிறதோ அந்த அளவு ஜனநாயகத்தன்மையை கொண்டதாக இருக்கிறது. உண்மையில் இது ஒரு இடையறாத உரையாடல். இந்த உரையாடலை சமூகமும் அரசு இயந்திரமும் ஊடகமும் நடத்திக் கொண்டே இருக்கிறது. அந்த உரையாடலின் திரண்ட பருப்பொருள் வடிவம்தான் ஊழல். ஏன் இன்றைக்கு சுவிஸ் வங்கி கணக்குகள் என்றெல்லாம் பேசப்படுகிறதே. இதன் அடிப்படை பார்வை ஒரு உலகளாவிய பார்வை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ எனும் சங்க புலவனின் பார்வையில் தொடங்கிய அந்த நம் பண்டை தொல்மரபை மீட்டெடுத்தவர் ஜவஹர்லால்... [மேலும்..»]

அரசியல் ஷரத்து 370 ஐ பற்றிய விவாதம் தேவையா?

ஜம்முவில் நடந்த பாரதிய ஜனதா கட்சியின் பொதுக் கூட்டத்தில் பிரதம வேட்பாளரும், குஜராத் மாநில முதல்வருமான திரு.நரேந்திர மோடி அவர்கள், அரசியல் ஷரத்து 370வது பிரிவு காஷ்மீர் மக்களுக்கு நன்மை அளிக்கிறதா என்பது குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும்’  என்றார்.  மோடி தெரிவித்த கருத்திற்கு காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர்கள் வழக்கம் போல் தங்களது எதிர்ப்பை தெரிவித்து விட்டார்கள்.  இவர்களுடன் கூட்டு சேர்ந்துக் கொண்டு மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், காஷ்மீரில் உள்ள மக்கள் ஜனநாயக கட்சியும் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்கள்.  ஆனால் மக்கள் ஜனநாயக கட்சியின் எதிர்ப்பின் காரணமாக  தெரிவித்த கருத்து வன்மையாக கண்டிக்க தக்கது.  ‘காஷ்மீர் மாநிலத்திற்கு... [மேலும்..»]

பாட்னா குண்டுவெடிப்பு: இந்துக்கள் கைது ஊடகங்கள், காங்கிரஸின் திசை திருப்பல்.

சென்ற திங்கள் கிழமை 11ம் தேதி செய்தி தாள்களில் தலைப்பு செய்தி பாட்னா குண்டு வெடிப்பு தொடர்பாக 4 இந்துக்கள் கைது. திசை திரும்புகிறதா வழக்கு ? என்றும், இஸ்லாமிய ஆதரவு ஊடகங்கள் குண்டு வைத்து விட்டு பழியை வழக்கம் போல் இஸ்லாமியர்கள் மேல் போடும் காவி பயங்கரவாதிகளை ஒழிக்க கைகோர்ப்போம். என்பது மாதிரி கடுமையான பிரச்சாரங்கள். முகனூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும், காட்சி ஊடகங்களிலும் மதசார்பின்மை மன நோய் உள்ளவர்கள், போலியாக தங்கள் ஜாதிய அடையாளங்களை மறைப்பதற்காக வேஷம் போடும் ஞாநி, கவின்மலர் தோழர் மருதையன் வகையறாக்கள் இந்துக்களை வசை பாடி, காவி பயங்கரவாதம், ஆர்.எஸ்.எஸ்... [மேலும்..»]