Posts Tagged ‘ மோதி அரசு ’

அரசியல்

ராகுல்ஜியின் சீன தூதரக சந்திப்பு: வெளிவராத உண்மைகள் :)

ராகுல்ஜியின் சீன தூதரக சந்திப்பு: வெளிவராத உண்மைகள் :)

எங்க தலைவரு கொதிக்காரு, ஒமக்கு ஜோக்கா இருக்கு என்னா?... சரி, மேலே... போற வழில சீன தூதரகத்தப் பாத்துட்டாரு. அதென்னா சைனீஸ்ல எழுதீருக்கான்? நிறுத்துன்னுட்டாரு... நானும் போனேனா? உள்ள போனவரு “உங்க செஃப் எங்க?"ன்னு ரிசப்ஷன்ல கேட்டாரு... அவன் சீஃப்னு நினைச்சிகிட்டு தூதரைப் பாக்க வந்திருக்காருன்னு , ஒரு ஃபார்ம் கொடுத்து ’நிரப்பு’ன்னுட்டான். அதுல இங்க்லிஷ்லயும் சைனீஸ்லயுமா எழுதியிருந்திச்சா, அண்ணன் குழம்பிட்டாரு... ஒரு வெண்பா சொல்லுங்க. அப்படியே கட்சி இதழ்ல போட்டுருதேன்... கொடுத்துருவம்... [மேலும்..»]

அரசியல், கேள்வி-பதில், தேசிய பிரச்சினைகள், பொருளாதாரம், விவாதம்

ஜிஎஸ்டி: சில கேள்விகள், விளக்கங்கள்

ஜிஎஸ்டி: சில கேள்விகள், விளக்கங்கள்

அதிகபட்ச விலைக்கும்(MRP) ஜிஎஸ்டிக்கும் என்ன வித்தியாசம்? ஏன் ஜிஎஸ்டியை சிலர் இப்படி எதிர்க்கிறார்கள்? பிஸ்கட் ஜிஎஸ்டி வரி 18% - உண்மை என்ன? ஜி எஸ் டியிலே சினிமா வரியிலே இவர்களின் கோரிக்கை தான் என்ன, அது நியாயமானதா? ஜிஎஸ்டியின் மிகப்பெரும் நன்மை என்ன?.... முன்னாடி மாநில வரி, மத்தியவரி, கலால் வரி, சுங்க வரின்னு நூத்துக்கணக்கிலே வரி தாக்கல் செய்யனும். இருந்தப்பவும் ஒண்ணும் சொல்லல. கணக்கு காட்டினால் தானே எத்துணை வரி, எம்புட்டு சான்றிதழ் என கவலைப்படணும். அதான் வரியே கட்டப்போறதில்லே. அப்புறம் எத்தனைன்னு எதுக்கு கவலைப்படணும்? இப்போ? வாங்கினாலும் வித்தாலும் எப்படியும் கணக்கு... [மேலும்..»]

அரசியல், தேசிய பிரச்சினைகள், விவாதம்

உதயகுமார் விவகாரம்: சூதுசெய்யும் படித்தவர்கள் – 2

உதயகுமார் விவகாரம்: சூதுசெய்யும் படித்தவர்கள் – 2

வெளிநாட்டு அமைப்புகளிடம் இருந்து நிதி வாங்கிக் கொண்டு இந்தியாவைத் துண்டாடுகிறார்கள் என்று ஜெயமோகன் கடுமையான குற்றசாட்டுக்களை வைக்கும் அருந்ததி ராயும், எம்.டி.எம், அ.முத்துக்கிருஷ்ணன் போன்ற எழுத்தாளர்களும் இந்த உதயகுமாரை விட எளிமையாக நடிப்பார்களே? ஏன் அவர்களைக் கொஞ்சிக் குலாவுவது கிடையாது? ஏன் இவருக்கு மட்டும் சிறப்பு சலுகை?... அணு உலை மீது குற்றம், சந்தேகம் இருந்தால் அந்தத் துறையின் விற்பன்னர்களிடம் அல்லவா முதலில் கேட்க வேண்டும்? அப்படி சந்தேகம் ஏற்படும் அளவுக்கு விக்ரம் சாராபாயும், அப்துல் கலாமும், டாக்டர் சிதம்பரமும், ராஜா ராமண்ணாவும் பொய்யர்களா அயோக்கியர்களா என்ன? இந்தியா வெற்றிகரமாக ராக்கெட்டுகளையும் சாட்டிலைட்டுகளையும் ஏவவில்லையா? அவர்கள்... [மேலும்..»]

அரசியல், சமூகம், தேசிய பிரச்சினைகள், வரலாறு

நெருக்கடி நிலை யாருக்கு?

நெருக்கடி நிலை யாருக்கு?

தனது தோல்வியை ஏற்ற பிரதமர் இந்திரா, 1977 மார்ச் 21-இல் நெருக்கடி நிலையை விலக்கிக் கொள்வதாக அறிவித்தார். ஜனநாயகம் மீண்டது. மக்களின் அடிப்படை உரிமைகள் மீளக் கிடைத்தன. அந்த அடித்தளம் மீது நின்றுகொண்டுதான் இப்போது நாம் பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமைகள் குறித்து முழங்குகிறோம். வரலாற்றிலிருந்து பாடம் கற்காதவர்கள் முட்டாள்கள். நாட்டுக்கு துயரமான அனுபவத்தை அளித்த காங்கிரஸ் கட்சியின் கொடிய முகத்தை உணர்ந்த பலர் இப்போது பல்வேறு அரசியல் கட்சிகளாக இருக்கிறார்கள். இன்றைய பாரதீய ஜனதா கட்சி, நெருக்கடி நிலையைக் களையப் போராடிய சக்திகளுள் தலையாயது. 25 ஆண்டுகால தொடர்ந்த முயற்சிகள் அதனை அதீத பலமுள்ள மத்திய ஆளும்... [மேலும்..»]

அரசியல், தேசிய பிரச்சினைகள், விவாதம்

உதயகுமார் விவகாரம்: சூதுசெய்யும் படித்தவர்கள் – 1

உதயகுமார் விவகாரம்: சூதுசெய்யும் படித்தவர்கள் – 1

தேர்தல் மனுவில் உதயகுமார் சமர்ப்பித்த விவரங்களில் உள்ள இந்த சொத்துக்கள் எல்லாமே கூடங்குளம் போராட்டம் ஆரம்பித்த 1989க்குப் பிறகுதான் சேர்க்கப் பட்டுள்ளன. ரிபப்ளிக் டிவி அவர் வாயில் இருந்தே எனக்கு சர்ச்சுகள் மூலமாக வெளிநாட்டு பணத்தை அனுப்புங்கள் என்று சொன்னதை படம் பிடித்து வெளியிட்டுள்ளது. வாங்கினால் என்ன தப்பு என்று கேட்கிறார் அவர். வந்து வக்காலத்து வாங்குகிறார்கள் பி.ஏ.கிருஷ்ணன், ஜெயமோகன் உள்ளிட்ட தமிழக எழுத்தாளர்கள். தான் காந்தியின் தொண்டன், நேருவின் பக்தன் என்று சொல்லிக் கொண்டே, தமிழகத்தை இந்தியாவில் இருந்து பிரிக்க வேண்டும் என்று மேடையில் பேசும் உதயகுமாருக்கு, இந்தியாவை உடைக்கத்... [மேலும்..»]

அரசியல், நிகழ்வுகள்

பாஜகவின் ஜனாதிபதி தேர்வு ராம்நாத் கோவிந்த்: சில கண்ணோட்டங்கள்

பாஜகவின் ஜனாதிபதி தேர்வு ராம்நாத் கோவிந்த்: சில கண்ணோட்டங்கள்

கோலி என்னும் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த கோவிந்த் அதை ஒரு பொருட்டாக எண்ணாமல் உழைத்தவர் இன்று நாட்டின் உயர்ந்த பதவியை அலங்கரிக்க இருக்கிறார். இந்திய குடிமை பணியில் வெற்றி பெற்றவர் தான் விரும்பிய துறை கிடைக்காததால் சட்டம் படித்து வழக்கறிஞர் ஆனவர். அரசியல் சாசன சட்டத்தில் மிக தேர்ச்சி உள்ளவர் என்று சொல்லப்படுகிறது அதோடு பெரும் அறிஞர். இந்திய கலாச்சாரத்திலும் பண்பாட்டிலும் மிகுந்த நம்பிக்கை உடையவர்.... அப்துல் கலாம், பி.ஏ. சங்மா, இப்போது ராம்நாத் கோவிந்த் - பாஜக அடுத்தடுத்து சிறுபான்மையினர் மற்றும் தலித்களையே உயர்பதவிகளுக்கு முன்நிறுத்துகிறது. இது சந்தர்ப்பவாத , தாஜா அரசியல் அல்லவா என்று... [மேலும்..»]

அரசியல், நிகழ்வுகள், பொருளாதாரம்

கருப்புப் பணமும் கள்ள பத்திரிகைகளும்

November 15, 2016
-
கருப்புப் பணமும் கள்ள பத்திரிகைகளும்

பயணம் முழுவதும் பல்வேறு தரப்பு மக்களிடம் பேசிக் கொண்டேயிருந்தேன். சிலர் முதல் வாரத்திற்குப் பதிலாக இரண்டாவது மூன்றாவது வாரத்தில் இதைச் செய்திருக்கலாம் என்றுசொன்னார்களே தவிர எவரும் கண்டிக்கவோ மோடியை எதிர்க்கவோ இல்லை. இதை ஒரு மாபெரும் துணிவான புரட்சிகரமான நடவடிக்கை என்றே ஏகோபித்துப் பாராட்டினார்கள். வங்கிகளில் காத்திருத்தலை ஒரு தேச தேச சேவையாகவே பலரும் எடுத்துக் கொண்டார்கள்... நிச்சயமாகப் பல எளிமையான வணிகர்களும் பொதுமக்களும் பாதிக்கப் பட்டிருப்பார்கள். சிலர் அவசரத்தேவைகளுக்காகத் தவித்திருப்பார்கள். இருந்தாலும் இங்கு மனிதர்கள் ஒருவருக்கொருவர் அந்நியப் பட்டவர்கள் அல்லர். கூடுமானவரை பரஸ்பர புரிதலுடன் அனுசரித்துச்செல்கிறார்கள். எவரும் எவரையும் பெரும் கஷ்டங்களுக்கு உள்ளாக... [மேலும்..»]

அரசியல், சமூகம், தேசிய பிரச்சினைகள்

தமிழ்நாட்டைக் காப்பாற்ற பாஜகவுக்கு வாக்களியுங்கள் (தேர்தல் 2016: பகுதி 6)

தமிழ்நாட்டைக் காப்பாற்ற பாஜகவுக்கு வாக்களியுங்கள் (தேர்தல் 2016: பகுதி 6)

வெற்றி பெறும் கட்சிக்குத்தான் ஓட்டுப் போடுவேன் என்ற கேவலமான மனநிலையில் இருந்து வெளியே வாருங்கள். நீங்கள் உங்கள் எதிர்காலம் வெற்றி பெறுவதற்கான கட்சிக்கு வாக்களியுங்கள். அந்தக் கட்சி பாஜக, அதன் சின்னம் தாமரை... மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன் - தயவு செய்து தமிழ் நாட்டைக் கைவிட்டு விடாதீர்கள். மீண்டும் நரகத் தீக்குள் முழுகி விடாதீர்கள். தமிழ் நாட்டை நாசக்காரர்களிடமும் மோசடிப் பேர்வழிகளிடமும் ரவுடிகளிடமும் கொள்ளையர்களிடமும் அடமானம் வைத்து விடாதீர்கள். உங்கள் சந்ததியினருக்குப் பாவத்தை இழைத்து விடாதீர்கள். அவர்களின் எதிர்காலத்தைப் பாழடித்து விடாதீர்கள். உங்கள் பிள்ளைகளின் கல்வியைக் கேலிப் பொருளாக்கி அவர்களை எதற்கும் உபயோகமில்லாத வீணர்களாக மாற்றி விடாதீர்கள்.... [மேலும்..»]

அரசியல், சமூகம், தேசிய பிரச்சினைகள்

பா.ஜ.கவுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் (தமிழக தேர்தல் 2016: பகுதி 5)

பா.ஜ.கவுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் (தமிழக தேர்தல் 2016: பகுதி 5)

முதலில் பி ஜே பி அரசு தமிழ்நாட்டுக்காக என்ன செய்திருக்கிறது என்பதைப் பார்ப்போம். முல்லைப் பெரியாறு விஷயத்தில் கேரளத்தின் அடாவடியையும் மீறி தமிழ் நாட்டிற்கு அதிக நீர் வருவதற்காக அணையின் உயரத்தை உயர்த்த ஆட்சிக்கு வந்தவுடனேயே உத்தரவிட்டது. காங்கிரஸ் திமுக அரசாங்களினால் தடை செய்யப் பட்ட ஜல்லிக்கட்டை முறையாக நடத்த ஏற்பாடுகளை செய்தது. இன்று தமிழகத்தில் ஓரளவுக்கு மின் வெட்டு இல்லாமல் இருப்பதன் காரணம் அகந்தையும் மூர்க்கமும் நிறைந்த ஜெயலலிதா அரசு அல்ல. மத்திய அரசு கடந்த 2 ஆண்டுகளில் மத்திய மின் பகிர்மான கட்டுமானங்களை துரித கதியில் நிர்மாணித்து மத்திய தொகுப்பில்... [மேலும்..»]

அரசியல், சமூகம், தேசிய பிரச்சினைகள்

தமிழக தேர்தல் 2016: ஒரு வேண்டுகோள் – 4 (வேண்டும் பா.ஜ.க)

தமிழக தேர்தல் 2016: ஒரு வேண்டுகோள் – 4 (வேண்டும் பா.ஜ.க)

தமிழ் நாடு அழிவுப் பாதையில் இருந்தும், ஊழல்களின் பிடியில் இருந்தும், வன்முறைகள் பயங்கரவாதப் பிடிகளில் இருந்தும், அழிந்து கொண்டிருக்கும் கல்விகளில் இருந்தும், சூழல் அழிவுகளில் இருந்தும், கடன்களில் இருந்தும் விட்டு விடுதலையாகி வளர்ச்சிப் பாதையில் சென்று ஒளி மயமான ஒரு எதிர்காலத்தை நோக்கிச் செல்ல வேண்டும் என்றால் தமிழ் நாட்டு வாக்களர்களின் முன்னால் இருக்கும் ஒரே ஒரு தேர்வு பா ஜ க கட்சி மட்டுமே. பா ஜ க எந்த வகையில் முந்தைய நான்கு கட்சிகளை விட வேறு பட்டது? ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்... அவர்கள் இது வரை என்ன செய்திருக்கிறார்கள் என்று கேட்கலாம். தாங்கள் ஆளும்... [மேலும்..»]