Posts Tagged ‘ மௌலானா முகமது அலி ’

[பாகம் -22] இந்து அரசுக்குக் கீழ்படியும் தன்மை முஸ்லீம்களிடம் அறவே இல்லை – அம்பேத்கர்

... இந்துக்களால் இந்துக்களைக் கொண்டு நடத்தப்படும் ஓர் அரசாங்கத்தின் அதிகாரத்துக்கு முஸ்லீம்கள் எந்த அளவுக்குக் கீழ்ப்படிவார்கள்?... திரு.முகம்மது அலி, "திரு.காந்தியின் குணப்பண்பு எவ்வளவுதான் தூய்மையானதாக இருந்தாலும் சமயக் கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும்போது, பண்பே இல்லாத எந்த ஒரு முசல்மானைவிடவும் கீழானவராகவே எனக்குத் தோன்றுகிறார்... ஆம், என்னுடைய மதத்தின்படி, என்னுடைய சித்தாந்தத்தின்படி, ஓர் ஒழுக்கங்கெட்ட, இழிவடைந்த முசல்மானை திரு.காந்தியைவிட மேம்பட்டவனாகவே கருதுகிறேன்’’என்றார்... வரலாற்றுச் சிறப்புமிக்க இதே பானிபட் சமவெளியில் இந்துக்களும் முஸ்லீம்களும் நான்காவது போர் ஒன்றைப் பரீட்சார்த்தமாக நடத்திப் பார்த்துவிடலாம் என்று மௌலானா அக்பர் ஷா கான் தெரிவித்தார்... [மேலும்..»]

[பாகம் -19] இஸ்லாமியர்களின் தேசிய உணர்வு, தேச பக்தி – அம்பேத்கர்

[பாகம் -19] இஸ்லாமியர்களின் தேசிய உணர்வு, தேச பக்தி – அம்பேத்கர்

...இதுதான் அகில உலக இஸ்லாமியத்தின் ஆதார சுருதி. இதுதான் நான் முதலில் ஒரு முஸ்லீம், பின்னர்தான் இந்தியன் என்று இந்தியாவிலுள்ள ஒவ்வொரு முசல்மானையும் மார்தட்டிக் கொள்ள வைக்கிறது. இந்தியாவின் முன்னேற்றத்தில் ஓர் இந்திய முஸ்லீம் மிகச்சிறிய பங்கே ஆற்றி வருவதற்கும், அதேசமயம் முஸ்லீம் நாடுகளின் நலன்களுக்காக அவன் அயர்வு சோர்வின்றி பாடுபட்டு வருவதற்கும் அவனுடைய சிந்தனைகளில், எண்ணங்களில் முஸ்லீம் நாடுகள் முதல் இடத்தையும் இந்தியா இரண்டாவது இடத்தையும் பெற்று வருவதற்கும் இந்த உணர்வே காரணம்... [மேலும்..»]

[பாகம் -18] இஸ்லாமிய அரசு,சட்டங்கள்,சமயப் போர் – அம்பேத்கர்

இந்தியாவிலுள்ள முஸ்லீம்கள் ஹிஜ்ரத்தில் ஈடுபட்ட நிகழ்ச்சிகளைப் போலவே ஜிஹாதைப் பிரகடனம் செய்யவும் அவர்கள் தயங்கவில்லை என்பதைக் காட்டும் நிகழ்ச்சிகளும் உள்ளன. 1857ஆம் வருடக் கலக வரலாற்றை நுணுகி ஆராயும் எவரும் அந்தக் கலகத்தில் குறைந்தபட்சம் ஒரு பகுதியாவது உண்மையில் பிரிட்டிஷாருக்கு எதிராக முஸ்லீம்கள் பிரகடனம் செய்த ஜிஹாத்தாக இருப்பதைக் காண்பார்கள்...ஒருநாடு முஸ்லீம்களால் ஆளப்படும்போது தார்-உல்-இஸ்லாம் எனவும், முஸ்லீம்கள் ஆட்சியாளர்களாக இல்லாமல் குடிமக்களாக மட்டுமே இருக்கும்போது தார்-உல்-ஹார்ப் எனவும்... [மேலும்..»]