
அடியே, மனைவி கணவனை விரும்புவதனால் கணவன் அன்பிற்கு உரியவன் ஆவதில்லை. தன்னை (ஆத்மாவை) விரும்புவதாலேயே கணவன் அன்பிற்கு உரியவனாகிறான்… வீணை இசைக்கப் படும்போது அதன் பிரத்யேக அதிர்வுகள் புறத்தே உணரப் படுவதில்லை. அவை வீணையின் நாதத்தில் இணைந்துள்ளன. வீணையைப் பல்வேறு விதமாக இசைக்கும்போது எழும் ஓசைகளும் அவ்வாறே… வானுக்கும் மேலுள்ளதும், பூமிக்கும் கீழுள்ளதும், வானுக்கும் பூமிக்கும் இடையிலுள்ளதும், கடந்தவையும் நிகழ்பவையும், வருபவையும் ஊடும் பாவும் போல விரவியுள்ளதும் ஆகாசம் (வெளி)….