Posts Tagged ‘ யாழ்ப்பாணம் ’

இலங்கைத் தமிழர், நிகழ்வுகள்

இந்துக்கோவிலின்மீது இலங்கைக் கிறித்தவரின் மதவெறித் தாக்குதல்

இந்துக்கோவிலின்மீது இலங்கைக் கிறித்தவரின் மதவெறித் தாக்குதல்

மன்னார் மாவட்டம் முழுவதுமே இந்துக்களைக் குறிவைத்துக் கிறித்தவராக்கும் நிலை இருந்துவருகிறது. நாற்பது விழுக்காடு இந்துக்கள் அங்கிருப்பினும், அவர்களது நெருக்கடியை நீக்க, அவர்களுக்காக வாதாட, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள்பிரதிநிதிகள் யாரும் இல்லை. அனைவரும் கிறித்தவர்களே! மேலும், மாவட்ட நிர்வாக, நீதித்துறை அதிகாரிகள் அனைவரும் அவர்கள்தாம். காவல் துறையோ பௌத்தர்கள் கையில்… [மேலும்..»]

அனுபவம், இலங்கைத் தமிழர், சமூகம், நிகழ்வுகள்

போர்க்கால யாழ்ப்பாணம் – சில நினைவுகள்

போர்க்கால யாழ்ப்பாணம் – சில நினைவுகள்

நாம் வாழும் வடஇலங்கையின் யாழ்ப்பாணப்பகுதியில் 1990ஆம் ஆண்டு யூன் மாதம் தொட்டு, கிட்டத்தட்ட 2000ஆம் ஆண்டு வரை மின்சாரமற்ற வாழ்வு நிலை கொண்டிருந்தது. விமானக்குண்டு வீச்சுக்களே இதற்கு முக்கிய காரணமாயின. தொலைத்தொடர்பு வசதிகள் முற்றாக இக்காலத்தில் செயலிழந்திருந்தன. நாங்கள் வாழ்ந்த வடபுலத்திற்கும் பிற பகுதிகளுக்குமான தரைவழிப்போக்குவரத்தும் இல்லாதிருந்தது. திடீரென்று நவீன உலகத்திலிருந்து ஆதிகாலம் போன்ற ஒரு உலகத்திற்கு தள்ளப்பட்டோம். ஆனால், என்ன அதிசயம் என்றால் இக்காலத்தில் மனிதவிழுமியங்கள் இப்போது நம் ஊர்களில் இருப்பதைக் காட்டிலும், மிக உயர்ந்த நிலையிலிருந்ததாக சொல்கிறார்கள்... உணவு, உடை போன்ற யாவற்றுக்கும் கப்பலை பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய நிலை வேறு இருந்தது. கப்பல்... [மேலும்..»]

இலங்கைத் தமிழர், சைவம், வழிகாட்டிகள்

ஆறுமுகநாவலரின் தமிழ் நடை

ஆறுமுகநாவலரின் தமிழ் நடை

நாவலரும் அவர் வழி வந்த நல்லறிஞரும் திருத்தி வளர்த்த நம் தமிழ்மொழி இப்போது சிதைக்கப்பட்டு வருவது கொடுமையானது. பத்திரிகைகள் முதலிய ஊடகங்களிலேயே பல எழுத்துப்பிழைகளும் சொற்பிழைகளும் மிக அதிகளவில் காணப்படுகின்றன. சிலரது எழுத்துக்களில் ஆங்கிலத்தில் வேற்றுமையுருபுகளை பெயருடன் சேர்க்காமற் பிரித்தெழுதுவது போல, தமிழில் எழுத முயல்வது தெரிகின்றது. புதிது புதிதாக பல மரபுகள் உருவாகின்றனவா? என்று ஐயமுண்டாக்குவதுபோல பலரது எழுத்துநடை உள்ளது. [மேலும்..»]

அரசியல், இலங்கைத் தமிழர்

வளரும் பாரதத்தின் உலக மேலாண்மை

வளரும் பாரதத்தின் உலக மேலாண்மை

நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு வெளியுறவுக் கொள்கையை முன்னிலைப்படுத்தி தேசத்தின் கௌரவத்தை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்ட பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் மட்டுமே. அவரது அடியொற்றி நரேந்திர மோடியின் வெளியுறவுப் பயணங்கள் அமைந்து வருகின்றன. ‘வசுதைவ குடும்பகம்’ என்ற குறிக்கோளுடன் செல்லும் இந்தியத் தலைவரின் எண்ணங்கள் பலிதமாகும் நாள் வரும்போது, உலகிற்கே வழிகாட்டும் திறனும் இந்தியாவுக்கு வாய்க்கும். [மேலும்..»]

அரசியல், இலங்கைத் தமிழர், தேசிய பிரச்சினைகள், நிகழ்வுகள்

பாரதப்பிரதமரின் விஜயம் ஈழத்து தமிழ்ஹிந்துக்களுக்கு நலம் தருமா?

பாரதப்பிரதமரின் விஜயம் ஈழத்து தமிழ்ஹிந்துக்களுக்கு நலம் தருமா?

சிறப்பான அம்சம் என்ன என்றால், போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடமாகாணத்திற்கு இந்தியப்பிரதமர் சென்றுள்ளமையே ஆகும். பாரதத்தின் பெருந்தலைவர் தமிழர் நலனில் அக்கறையோடு உரையாற்றியதுடன், தமிழர் பிரதிநிதிகளான தமிழ்க்கூட்டமைப்பினரையும் சந்தித்துப் பேசினார். தமிழர்களுக்கு உரிமையும் வளமும், நலமும் வாழ்வும் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திக் குறிப்பிட்டார்... மோடி அவர்கள் பிக்குமார்களுக்கு அளவுக்கு அதிகமான முதன்மையை தந்து வணங்கியதும், அநுராதபுரத்தில் பன்முறை மஹாபோதியை போற்றித் துதித்ததும், நகுலேஸ்வர வழிபாட்டை விட, அதிக முதன்மையான நிகழ்வுகள் என்பது இந்துக்களுக்கு ஒரு இந்து சமயியான உலகத்தலைவரின் வருகை என்ற எதிர்பார்ப்பை உடைத்து விட்டது. இவ்வாறு இந்துக்கள் அஞ்சுவதற்கு அடிப்படை என்ன என்றால் கடந்த... [மேலும்..»]

ஆன்மிகம், இலங்கைத் தமிழர், கோயில்கள், சைவம், வழிகாட்டிகள்

இலங்கை ஸ்ரீ. தா.மஹாதேவக் குருக்களுடன் ஒரு நேர்காணல்

இலங்கை ஸ்ரீ. தா.மஹாதேவக் குருக்களுடன் ஒரு நேர்காணல்

1994ஆம் ஆண்டுக்காலப்பகுதியில் பெரும்பகுதி யாழ்ப்பாண மக்கள் இடப்பெயர்வையும் பெரும் அவலத்தையும் சந்தித்தனர். இவ்வாறான ஒரு சூழலில் மஹாதேவக்குருக்கள் குடும்பமும் அவரது பாடசாலைச்சமூகமும் கூட, இதே துயரத்தை ஏற்று தென்மராட்சியின் உசன் பகுதிக்கு இடம்பெயர்ந்தது. அங்கும் கூட, குண்டு மழைக்குள்ளும் இலவச வேத, ஆகம வகுப்புகளும், பகவத்கீதா வகுப்புகளும் நடந்தமை வியப்பானது..."பல்கலைக்கழகம் சென்று கற்க வேண்டும் என்ற ஆவலும் ஆசையும் நிரம்ப இருந்தது. ஆனால், எனது குடும்பச்சூழல் அவற்றுக்கெல்லாம் இடம்கொடுக்கவில்லை. எம்முடைய தந்தையார் சைக்கிளில் கோவில் கோவிலாகச் சென்று உழைத்த பணத்தை வைத்தே எமது குடும்பம் வாழ்ந்தமையால் வறுமை கல்வியைத் தொடர இடம் தரவில்லை... " [மேலும்..»]

இலங்கைத் தமிழர், கோயில்கள், சைவம்

ஈழத்து வன்னிச் சிவாலயங்கள்

ஈழத்து வன்னிச் சிவாலயங்கள்

இலங்கையின் வன்னி பகுதி மேற்கே மன்னாரையும் கிழக்கே திருகோணமலையையும் எல்லையாகக் கொண்டது. இவ்விரு எல்லைகளிலும் தேவாரப்பாடல் பெற்ற திருத்தலங்களான திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வரம் ஆகியவை உள்ளன... இலங்கையைப் போர்த்துக்கேயர்கள் கைப்பற்றியபோது, அவர்கள் கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதற்காகவும், இந்துத் திருக்கோயில்களில் நிறைந்திருந்த செல்வங்களைக் கொள்ளையடிப்பதற்காகவும் இந்துக் கோயில்கள அனைத்தையும் இடித்துத் தரைமட்டமாக்கினார்கள்... கண்டியில் அரசுசெய்த ஜெயதுங்க வரராசசிங்கன் என்னும் மன்னனின் கனவில் கோணேஸ்வரப் பெருமான் தோன்றி தாம் உறைவதற்கு ஏற்றதான கோயிலை செந்நெல் விளையும் வயல்கள் சூழ்ந்த தம்பலகாமத்தில் அமைக்குமாறு கூறி மறைந்தார். இன்றும் இக்கிராமத்தில் இக்கோவில் சிறப்புடன் விளங்குகின்றது.... [மேலும்..»]

ஆன்மிகம், கலைகள், கோயில்கள்

போற்றிப் பேண வேண்டிய சாத்துப்படிக்கலை

போற்றிப் பேண வேண்டிய சாத்துப்படிக்கலை

இது ஒரு தெய்வீகக்கலையாகும். இது ஒரு அழகியற்கலையாகும். இன்னொரு சாரார் இதனை ஒரு கைவினையாகவும் கருதுவர். ஆக, இது கைவினையா..? அல்லது கலையா? என்ற கேள்வி உருவாகின்றது. என்றாலும் கைவினைக்கு அப்பாற்பட்ட ஒரு வித அருமைத்தன்மை காணப்படுதலால் இதனைக் கலையாகக் கருதலாம் என்பதும் பலர் கருத்து. சாத்துப்படி அலங்காரத்தில் கலைஞர்கள் ஒவ்வொருவராலும் மேற்கொள்ளப்படும் அலங்காரங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை இரசனைத்தன்மை கொண்டனவாயுள்ளன. கலைஞர்களின் தனிப்பட்ட திறமையும், நுணுக்கமான அசைவுகளும், சாத்துப்படி அலங்காரத்தில் இழையோடியிருப்பதைக் காணலாம். என்றாலும் சாத்துப்படி அலங்காரம் பற்றிப் பெரியளவில், ஆய்வுகள் நடந்ததாகத் தெரியவில்லை. அதனை ஒரு கலையாகக் கூட பலர் நோக்குவதாகத் தெரியவில்லை. [மேலும்..»]

இலக்கியம், சமூகம்

மதமாற்றம் எனும் கானல் நீர்

மதமாற்றம் எனும் கானல் நீர்

மதமாற்றம் என்பது தாழ்த்தப் பட்டவர்களைப் பொறுத்தவரையில் வெறும் கானல் நீரே என்கிறார் பிரபல ஈழ இலக்கிய நாவலாசிரியர் கே.டானியல்... ‘பஞ்சமர்’ நாவலில் உயர்சாதிக் காரர்களான வேளாளர்களின் சாதித் திமிரும் அட்டூழியங்களும், ‘கோவிந்தன்’, ‘அடிமைகள்’ நாவல்களில் வேளாளக் குடும்பங்களின் அழிவையும் சிதைவையும், காட்டிய டானியல் அவற்றினின்று மாறு பட்டு, ஒரு சீரான நடையில், அழகான வடிவமைப்பில் ‘கானல்’ நாவலைப் படைத்துள்ளார்... ”ஞான ஸ்நானங்களுக்குப் பின்னாலும் மார்க்கக் கல்யாணங்களுக்குப் பின்னாலும் தீட்சை நாமங்களுக்குப் பின்னாலும் எம்மவர்களின் நாமாவளிகள் மாறியதல்லாமல் நடைமுறையில் இன இழிவுப்பிரச்சினைகள் தீர்ந்த பாடில்லை... “ [மேலும்..»]

கோயில்கள், சமூகம்

யாழ்ப்பாணத்துத் தனித்துவமான சில சமய நம்பிக்கைகள்

யாழ்ப்பாணத்துத் தனித்துவமான சில சமய நம்பிக்கைகள்

.. யாழ்ப்பாணம் இந்து சமயம் சிறப்புற்றிருக்கும் பிற பிரதேசங்களை விடவும், இன்னும் இலங்கையின் பிற பகுதிகளை விடவும் சிறப்பான, தனித்துவமான பல பண்புகளை, நம்பிக்கைகளைக் கொண்டதாகவுள்ளது...ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் போன்ற பெரியவர்களும் அவர் வழி வந்தவர்களும் எவருக்கும் விட்டுக் கொடுக்காத வீரசைவ செந்நெறியை இங்கே வளர்த்திருக்கிறார்கள்.. [மேலும்..»]