Posts Tagged ‘ யுத்தம் ’

இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 30

April 22, 2013
By

ஆங்கில மூலம் : எஸ். லக்ஷ்மிநாராயணன் தமிழாக்கம்      : எஸ். ராமன் 30.1 நன்னடத்தையே நல்ல பாதுகாப்பு தரும் அசோக வனத்திலிருந்த சீதையை அழைத்து வருமாறு இராமர் விபீஷணனிடம் கேட்டுக்கொண்டார். இராவணனின் அரண்மனைக்குள் அந்த வனம் இருந்ததால் அவள் அங்கு காவலில் வைக்கப்பட்டு  இருந்தாள். கைகேயிடம் சொன்னபடி அந்தப் பதினான்கு வருஷங்களும் அவர் காட்டை விட்டுவிட்டு ஒரு கிராமத்தின் எல்லையைகூடத் தாண்டவில்லை. அதனால் அவர் சீதை இருக்குமிடம் தேடி இலங்கைக்குள் நுழைந்திருந்தால், அது ஒரு விதி மீறலாகி இருந்திருக்கும். சீதையை மீட்பதற்குத்தானே அவர்கள் கடலில் பாலம் கட்டியும், பலத்த இழப்புடனும் அரக்கர்களுடன் போரிட்டார்கள் என்பதால்,... [மேலும்..»]

இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 29

March 30, 2013
By

வால்மீகி இராமாயணத்தில் எழுதியிருக்கும் போர் முறைகளும், தளபதிகள் வகுக்கும் வியூகங்களும், சண்டையில் நடக்கும் பேச்சுக்களும் வாள் வீச்சுக்களும், ஆயுதங்கள் பற்றியும் அவைகளைக் கையாளும் விதமும் என்று விதவிதமாக விவரங்கள் இருப்பதும், அதை அவர் விவரிக்கப் பயன்படுத்தும் வார்த்தைகளும் அவரைப் போரில் ஒரு கை தேர்ந்த கலைஞர் என்றுதான் காட்டுகிறது. அவரது சொற்களும், விவரிப்புகளும் ஒரு பத்திரிக்கையின் போர் நிருபரையே பிரமிக்க வைக்கும் அளவு இருக்கின்றன.... இராமாயணக் காலத்திலிருந்து இன்றைய போர் முறைகள் வெகுவாகவே மாறியிருந்தாலும், போர் புரிய வேண்டிய மனோநிலை, வேண்டிய தைரியம், திறன், முயற்சி, பொறுமை என்ற எல்லாக் குணங்களும் இன்றும் போருக்கு வேண்டிய முக்கியமான... [மேலும்..»]

இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 27

February 20, 2013
By

தன் உடன் பிறந்தவர்களின் சாவுக்குப் பழி வாங்க வேண்டும் என்று அதிகயா துடித்துக்கொண்டு இருந்தான். அவன் தேரில் ஏறிப் போர்க்களத்துக்குப் போகும் வழியிலேயே பல வானரர்களை வெட்டிச் சாய்த்துக்கொண்டே போனான். லக்ஷ்மணன் அவனைத் தடுத்து நிறுத்தித் தன்னுடன் மோதுவதற்குச் சவால் விட்டான். போர் புரிய வக்கில்லாச் சிறுவன் என்று லக்ஷ்மணனை ஒதுக்கிவிட்டு அதிகயா போனான். மேலும் லக்ஷ்மணன் உடலைத் தன்னுடைய அம்புகளால் துளைத்து அவன் நிற்கும் பூமியை ரத்தக் களம் ஆக்குவேன் என்றும் அவன் சொல்லிக்கொண்டே போனான். வெறும் வார்த்தைப் பந்தல்களே   அதிகயாவை வீரனாக்கிவிடாது என்று அதற்கு லக்ஷ்மணன் பதிலடி கொடுத்தான். ஒரு சண்டையில் எதிரியை வெல்ல... [மேலும்..»]

இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 26

January 30, 2013
By

ராவணன் ஒரு மகாவீரன் மட்டும் அல்லாமல் ஒரு கைதேர்ந்த போர்த் தலைவன் ஆனதால், அரக்கர்களின் மூர்க்கமான தாக்குதலால் வானரர்கள் பக்கம் சரிவு ஏற்பட்டு பலத்த இழப்பு நேர்ந்தது. ஒரு கட்டத்தில் இராமரே வானரர் படையை முன்னின்று இயக்கி, ராவணனையும் நேருக்கு நேர் சந்திக்கலாமா என்று யோசித்தார். ஆனால் ராவணனுடன் நேரடித் தாக்கலில் தானே ஈடுபட விரும்புவதாக லக்ஷ்மணன் தெரிவித்தான். அதற்கு ஒத்துக்கொண்ட இராமர் எதிரியின் பலவீனத்தை பயன்படுத்தவும், தன் பலவீனத்தை எதிரி பயன்படுத்தாது இருக்குமாறும் போர் புரிய வேண்டும் என்று லக்ஷ்மணனுக்கு அறிவுறுத்தினார். எதிர்பாராமல் இருக்கும்போது எதிரிக்கு அடிகொடுக்கும் அதே சமயம், எதிரி எளிதில் தாக்கவோ, காயப்படுத்தவோ... [மேலும்..»]

இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 25

December 10, 2012
By

வானரர்கள் இலங்கை மாநகரைத் தாக்குவதற்குத் தயாராக முதலில் அதைச் சுற்றி வளைத்துக்கொண்டார்கள். அவர்களின் தளபதிகள் மேலிடத்தில் இருந்து வரவேண்டிய ஆணைக்குக் காத்திருக்க, போர் தொடங்குவதற்கான எல்லா அறிகுறிகளும் தெரிந்தன. அப்போதும் இராமர், ஒரு வேளை மனம் மாறி தனக்கும் தன் வீரர்களுக்கும் போரினால் வரக்கூடிய அழிவுகளைத் தவிர்ப்பதற்காகவே, ராவணன் திருந்துவானா என்று கடைசியாக ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் என்று சிறிது காத்திருந்தார். அனாவசியமான போர்ச் சேதங்களையும், கொலைகளையும் தடுப்பதற்காக அந்நாளில் எதிரிகளுக்கு நிறைய கால அவகாசம் கொடுத்த பின்பே போர்கள் தொடுக்கப்படும். இங்கு அங்கதன் மூலம் இராமர் அனுப்பிய செய்தியும் அந்தப் பண்டைய வழக்கத்தை ஒட்டியதுதான்.... [மேலும்..»]