Posts Tagged ‘ யோகம் ’

அனுபவம், ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், தத்துவம்

நம்பிக்கை – 12: உண்மையில் நான் யார்? [நிறைவு]

நம்பிக்கை – 12: உண்மையில் நான் யார்? [நிறைவு]

“இல்லை. தன்முனைப்பு என்பது பெருமை கொள்வதோ, கர்வமாக நடப்பதோ, சுயநலத்துடன் இருப்பதோ அல்ல. ‘நானே நினைப்பவன்; நானே செய்பவன்; நானே அனுபவிப்பவன்’ போன்ற எண்ணம் தான் தன்முனைப்பு என்பது. உன்னைப்பற்றி நீயே தவறாக அனுமானித்துக்கொள்வதுதான் தன்முனைப்பு (EGO)”. “நான் என்னைப்பற்றி இவ்வாறாக நினைத்துக்கொண்டிருக்கிறேன் என்று சற்று முன்பு சொன்னதெல்லாம் தான் தன்முனைப்பு என்கிறீர்களா?”... “நிச்சயமாக. நம்முடைய சேர்க்கையானது எப்போதுமே பொருட்கள், மக்கள் மற்றும் இடங்கள் போன்றவையுடன் தான் இருந்துவருகிறது. பொருட்கள், உறவுகள், செல்வம், ஆரோக்கியம், உடல், அறிவு என்று எல்லாமே நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். மாற்றதிற்குள்ளாகும் விஷயங்களுடன் தான் நம்முடைய சேர்க்கை எப்போதும்... [மேலும்..»]

அனுபவம், ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள்

நம்பிக்கை – 11: தியானம்

நம்பிக்கை – 11: தியானம்

“நமது ஆள் வேலையாளிடம் தன்னை வீட்டிற்குக் கொண்டு செல்ல ஒரு வண்டியைத் தயார் செய்யச் சொன்னான்.; அதையும் உடனடியாக அவன் செய்து முடித்தான். அந்த வண்டியில் ஏறிக்கொண்டே, வீட்டுத் தோட்டத்தில் உள்ள புற்களையெல்லாம் வெட்டி, சுத்தம் செய்து, செடிகளுக்கெல்லாம் தண்ணீர் விடச் சொன்னான். வேலையாள் வேலை செய்யத் தோட்டத்திற்குப் போனவுடன் வண்டியை ஓட்டிக்கொண்டு தன்னுடைய குருநாதர் வீட்டுக்குச் சென்றான்”. “ஒளிந்துகொள்ளவா போனான்?” என்று சிரித்தபடியே கேட்டாள் ஸ்நேஹா... “ஜபத்தைப் பயிற்சி செய்யும்போது, நீங்கள் மந்திரத்தின் மீதும் உச்சாடனம் செய்யும் எண்ணிக்கை மீதும் கவனமாக இருப்பீர்கள். வழக்கமாக 108 முறை அல்லது 1008 முறை என்று செய்வீர்கள். போதுமன... [மேலும்..»]

அனுபவம், ஆன்மிகம், உடல்நலம்

நம்பிக்கை – 10: பிராணாயாமத்தின் பயன்கள்

நம்பிக்கை – 10: பிராணாயாமத்தின் பயன்கள்

இந்தப் பிராணாயாமத்தில் கபாலபாதி பிராணாயாமம் என்று ஒரு வகை உள்ளது. அதைச் செய்வதற்குத் தினமும் காலை நேரத்தில் சில நிமிடங்கள் போதும். இரண்டு டம்ப்ளர்கள் தண்ணீர் குடித்துவிட்டுச் செய்யலாம். (காலை எழுந்ததும் பல் துலக்கி, முகம், கை கால்கள் கழுவிக்கொள்ள வேண்டும். பிறகு அரை லிட்டர் தண்ணீர் குடித்துவிட்டு, காற்றோட்டம் உள்ள இடத்தில் சௌகரியமாக சம்மணம் இட்டு உட்கார்ந்துகொள்ள வேண்டும். முதுகை நேராக வைத்துக்கொண்டு நிமிர்ந்து உட்கார வேண்டும். வயிறு வரை மூச்சை உள்ளே இழுக்க வேண்டும்; பிறகு சைக்கிளுக்குக் காற்றடிக்கும் பம்பைப் போல வயிறை அழுத்திகொண்டு மூச்சை வெளியேற்ற வேண்டும். இதை 20 முறை செய்ய... [மேலும்..»]

இந்து மத விளக்கங்கள், இலக்கியம், தத்துவம்

அறிவனும் தாபதரும் தமிழ் யோக மரபும்

October 24, 2016
-
அறிவனும் தாபதரும் தமிழ் யோக மரபும்

தொல்காப்பியம் ஓரிடத்தில் பார்ப்பார், அரசர், ஏனோர் (வணிகர், வேளாளர்), அறிவர், தாபதர் (தவம் செய்வோர்), பொருநர் (போர் செய்வோர்) என்பவர்களை ஒரே சூத்திரத்தில் பட்டியலிட்டுப் பேசுகிறது. வெற்றிக்கு உரியதான வாகைத்திணையை விளக்கும் சூத்திரம் இது. முதற்பார்வையில் இந்தப்பட்டியல் தொடர்பற்றவற்றை ஒன்று சேர்த்து ஏதோ கலந்து கட்டியது போலத் தோற்றமளிக்கிறது. ஆனால் உரைகளின் துணைகொண்டு கற்கும் போது தமிழ் இலக்கண மரபின் ஆழமும் மேதமையும் புலனாகிறது... பதஞ்சலி யோக சூத்திரத்தின் மொழிபெயர்ப்புப் போலவே அமைந்துள்ள இவற்றைக் கொண்ட நூல் எதுவென்று தெரியவில்லை. தமிழ்நாட்டுப் பதஞ்சலி யோக மரபில் சூத்திரங்களாகவே அந்த நூல் பயிலப் பட்டிருக்க வேண்டும். அந்த நூல்... [மேலும்..»]

ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், உடல்நலம், சமூகம்

அனைத்துயிரும் ஆகி… – யோகாசனங்களின் உணர்வு நிலைகள்

June 21, 2016
-
அனைத்துயிரும் ஆகி… – யோகாசனங்களின் உணர்வு நிலைகள்

ஆசனங்கள் வெளி உறுப்புக்களையும், தசைகளையும் மட்டுமல்ல, உடலின் பல உள் உறுப்புக்களையும், நாடி நரம்புகளையும் உறுதியாக்குகின்றன. பல யோகாசனங்கள் பார்ப்பதற்குக் கடினமாகத் தோன்றினாலும், பயிற்சி செய்பவர்களுக்கு இவை மிக இயல்பானதாகவே தெரியும். பயிற்சி இதற்குக் காரணம் என்றாலும், யோக ஆசனங்களின் தன்மையே அப்படிப் பட்டதாயிருக்கிறது.... மனித உடலின் இயக்கம் பற்றிய ஆழ்ந்த நுண்ணறிவு பெற்றிருந்தனர் பண்டைக் கால யோகிகள். காட்டில் விலங்குகள், பறவைகள் இவற்றின் வாழ்வைக் கூர்ந்து கவனித்த அவர்கள் அவை எப்போது அமைதியடைகின்றன, ஆக்ரோஷம் கொள்கின்றன இவற்றையெல்லாம் ஆராய்ந்து பல ஆசனங்களை உருவாக்கியிருக்கலாம் என்று ஒரு கருத்து உள்ளது... அசையாப் பொருள்கள் மற்றும் விலங்குகள், பறவைகள்... [மேலும்..»]

அறிவிப்புகள்

ஈரோட்டில் அந்தர்யோகம் முகாம் (30-செப், ஞாயிறு)

ஈரோட்டில் அந்தர்யோகம் முகாம்  (30-செப், ஞாயிறு)

ஈரோடு சித்பவானந்தர் சேவா சங்கம் 30-செப் ஞாயிறு அன்று ஒரு நாள் அந்தர்யோக முகாமை நடத்துகிறது (காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை). பூஜ்ய சுவாமி ஸத்யானந்த அவர்களின் வழிகாட்டுதலில் தியானப் பயிற்சி, சொற்பொழிவு, பூஜை, பஜனை ஆகியவை நடைபெறும். முழு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இயலாதவர்கள் மாலை நிகழ்ச்சியில் மட்டுமாவது கலந்து கொள்ளலாம். அனுமதி இலவசம். அனைவரும் வருக! அழைப்பிதழ் கீழே. [மேலும்..»]

கவிதை, தத்துவம், வேதம்

ஈசாவாஸ்ய உபநிஷதம்

April 25, 2012
-
ஈசாவாஸ்ய உபநிஷதம்

பொன்மயமான மூடிக்குள் மறைந்துள்ளது - சத்தியத்தின் முகம். பேணி வளர்ப்போனே, சத்திய இயல்பினர் காண அதைத் திறந்திடுக... அடர் காரிருள் வழிச் சென்றடைவர் அறியாமையில் ஒழுகுவோர் - அதனினும் பெரிய இருளடைவர் அறிவில் ஆழ்ந்தோர்... கடவுள் - உலகம், துறவு - இன்பம், செயல் தரும் பந்தம் - செயலின்மை தரும் முக்தி, ஒன்று - பல, அறிவு - அறியாமை, இவ்வுலகம் - அவ்வுலகம் என்று ஒன்றுக்கொன்று எதிராக உள்ள கருத்தாக்கங்களை... காந்தி பரவசத்துடன் எழுதுகிறார் - எல்லா புனித நூல்களும் தத்துவங்களும் அழிந்து சாம்பலாகி விட்டாலும் கூட'ஈசாவாஸ்யம் இதம் சர்வம்' என்ற இந்த ஒரு... [மேலும்..»]

இந்த வாரம் இந்து உலகம், நிகழ்வுகள், பொது

இந்த வாரம் இந்து உலகம் (டிசம்பர்-2, 2011)

இந்த வாரம் இந்து உலகம் (டிசம்பர்-2, 2011)

வெளிநாட்டவர்கள் புனித நகரமான ஹரித்வாருக்கு வந்து கொண்டே இருக்கிறார்கள். குறிப்பாக ரஷ்யர்கள்... யோகம், ஹாரி பாட்டர் கதைகள் ஆகியவை தீயவை, என்று கத்தோலிக்க சபையின் தலைமை பேயோட்டி தீர்ப்பு ... கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்கக் கோரி ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணி துணைத் தலைவருக்கு கொலை மிரட்டல்... மலேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பா.ஜ.க தலைவர்களை சந்தித்து அங்குள்ள நிலவரம் பற்றியும் மனித உரிமை மீறல்கள் பற்றியும்... அனாதைகள் இல்லத்தில் குழந்தைகளை விற்றதாக குற்றம் சாட்டப்பட்டு அந்த இல்லத்தின் தலைவி... [மேலும்..»]

ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், சைவம்

விநாயகர் அகவல்: ஒரு தத்துவ அறிமுகம்

விநாயகர் அகவல்: ஒரு தத்துவ அறிமுகம்

விநாயகர் அகவல் என்னும் நூல் ஔவைப் பிராட்டியாரால் அருளிச் செய்யப்பட்டது. நித்திய பாராயண நூல்களில் ஒன்றாக விளங்குகின்றது. வழிபாட்டுநெறியோடு யோகநெறியையும் விளக்கியருளும் சிறப்பு வாய்ந்தது... விநாயகப் பெருமான் பக்குவமுடைய ஆன்மாவுக்கு ஞானோபதேசம் செய்து ஞானநெறியிலும் யோகநெறியிலும் நிற்கச் செய்து இவ்வுலகிலேயே சீவன்முத்தனாக இருந்து சிவானந்தம் அனுபவிக்கும் நிலையினையும் தந்து, அவ்வான்மா சிவத்தைப் போலென்றும் ஒரேதன்மையுடையதாய் இருக்கும் நிலையினை அடையச் செய்கிறார். [மேலும்..»]

ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள்

போகியை யோகி எனல்

போகியை யோகி எனல்

உடலின் எல்லாச் செயல்பாடுகளுக்கும் ஒத்துழைத்தாலும் எதுவும் தனது சுய நலனுக்காக அல்ல. இதை ஆத்மாவுக்கு அனுசரணையாகப் பக்குவப்பட்ட உள்ளம் உணர்ந்திருக்குமானால் அதன் செயல், காமத்தின் விளைவாக நிகழும் செயலாகவே இருப்பினும் அது உள்ளத்தையும் உள் அந்தரங்கமான ஆத்மாவையும் பாதிப்பதில்லை. இதனால்தான் போகியை யோகி என்று கூற முடிகிறது. [மேலும்..»]